Wednesday, February 18, 2015

வாங்க பழகலாம் c மொழியை 4ம் பகுதி.


printf என்பது output செய்வதற்கான ஒரு லைப்ரரி ஃபங்சன் .
உதாரணமாக
Printf(“hello world”);
என்ற வரியானது hello world என வெளியீடு செய்யும்.

அதற்கு முன்னால் datatypes என்றால் என்ன என்று பார்ப்போம்.
Variable என்பது dataவை store பண்ணும் என்று பார்தோம். அடிப்படையாக டேடா ஆனது நான்கு வகையாக பிரிக்கப் படுகின்றது.
அவையாவன:
1.int
2.float
3.double
4.char

int என்பது முழு எண்களை குறிக்கின்றது.
உதாரணம் 10,86,2456
Float மற்றும் double ஆகியன floating point எண்களை குறிக்கின்றது.
உதாரணமாக 23.45,67.53 ஆகியன.
Double ஆனது float data type ஐ காட்டிலும் துல்லிதமாக மதிப்புகளை ஸ்டோர்
செய்யும்..
Char ஆனது single character யை store செய்யும்.
உதாரணம்
k’,’u’,’*’,’5’ என ஒற்றை character store செய்யும்.

இப்போது மறுபடியும் printf() பற்றி பார்ப்போம்.
இப்போது  a என்ற variable-லில் 10 என்ற மதிப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
Printf(“%d”,a)
இதற்கான வெளியீடு
10
%d என்பது int data type-ற்கான format specifier ஆகும்.

ஒவ்வொரு data type-ற்கும் ஒவ்வொரு format specifier உள்ளது.

Int-%d
Float-%f
Double-%lf
Char-%c

நாம் இப்போது பார்த்த printf() வரியில் %d ஆனது a –யின் மதிப்பால் replace செய்யப்படுகின்றது.
printf(“value of a is %d”,a)
என்ற வரியானது பின் வருமாறு வெளியீடு செய்கின்றது.
Value of a is 10.
இப்போது float data type –யை எடுத்துக் கொள்வோம்
float  x;
x=2.5
printf(“x is %f”,x)
வெளியீடு :
x is 2.5
ஆகும்.
இப்போது
printf(“hai”);
printf(“hello”);
என்ற வரிகளானது haihello என்று ஒற்றை வரியில் வெளியீடு செய்யும்.
இப்போது இரு வரிகளில் வெளியீடு செய்ய
printf(“hai\n”);
printf(“hello”);
இப்போது வெளியீடானது
hai
hello
என இரு வரிகளில் அமையும்.
hai என்ற வார்த்தைக்குப் பின்னால் “\n” printf  வரியில் இருப்பதை கவனியுங்கள்.
“\n” ஆனது new line escape sequence எனப்படுகின்றது.
இது போல் நிறைய escape sequence உள்ளன. இவற்றில் “\n” என்ற escape sequence தான் அதிகம் பயன்படுத்தப் படுகின்ற்து.


ads Udanz