Showing posts with label sessions. Show all posts
Showing posts with label sessions. Show all posts

Monday, January 25, 2021

PHP செசன்(session)

 

 


PHP  செசன் என்பது ஒரு இணையப்பக்கத்திலிருந்து மற்றொரு இணையப்பக்கத்திற்கு தற்காலிகமாக தகவலை சேமிக்க உதவுகின்றது. அதாவது பயனர் அந்த இணையப்பக்கதிலிருந்து வெளியேரும் வரை தகவலை சேமிக்கின்றது.

இது பெரும் பாலும் இ-காமர்ஸ் இணைய தளங்களின் பொருளின் பெயர், விலை போன்ற தகவல்களை சேமிக்கப் பயன்படுகின்றது.

 PHP செசன் ஆனது ஒவ்வொரு பயனருக்கும்  தனித்தனி USER ID யை தருகின்றது.


PHP session_start() function

PHP session_start()  ஃபங்க்சன் ஆனது ஒரு செசனைத் தொடக்குவிக்கின்றது. ஏற்கனவே செசன் தொடக்கப்படிருந்தால் அதைத் தொடர்கின்றது. இல்லையெனில் புதிதாக தொடக்குவிக்கின்றது| Syntax

  1. bool session_start ( void )  

சான்று

  1. session_start();  

PHP $_SESSION

PHP $_SESSION ஆனது செசன் வேரியபிள்களின் அர்ரே ஆகும். இது செசன் வேரியபிள்களை மதிப்பிருத்தவும் பெறவும் பயன்படுகின்றது.

சான்று மதிப்பிருத்தல்

  1. $_SESSION["user"] = "Sachin";  

சான்று பெறுதல்

  1. echo $_SESSION["user"];  

PHP Session சான்று

File: session1.php

<?php  

session_start();  

?>  

<html>  

<body>  

<?php  

$_SESSION["user"] = "Sachin";  

echo "Session information are set successfully.<br/>";  

?>  

<a href="session2.php">Visit next page</a>  

</body>  

</html>  

File: session2.php

<?php  

session_start();  

?>  

<html>  

<body>  

<?php  

echo "User is: ".$_SESSION["user"];  

?>  

</body>  

</html>  

PHP Session Counter சான்று

File: sessioncounter.php

  1. <?php  
  2.    session_start();  
  3.   
  4.    if (!isset($_SESSION['counter'])) {  
  5.       $_SESSION['counter'] = 1;  
  6.    } else {  
  7.       $_SESSION['counter']++;  
  8.    }  
  9.    echo ("Page Views: ".$_SESSION['counter']);  
  10. ?>  

PHP செசனை அழித்தல்

PHP session_destroy() ஃபங்க்சன் ஆனது எல்லா செசன் வேரியபிள்களையும் அழிக்க பயன்படுகின்றது.

File: session3.php

<?php  

session_start();  

session_destroy();  

?>  

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

Monday, January 30, 2017

குக்கீஸ் மற்றும் செஸன்ஸ்-php




                                                                                                         
இன்டர்நெட் ஆனது request/response என்கின்ற கருத்துருவின் படி இயங்குகின்றது . அதாவது browser ஆனது கோரிக்கையை(request) வெப் சர்வருக்கு அனுப்பும்.வெப் சர்வரானது அதை இயக்கி அதற்கான பதிலை திருப்பி அனுப்பும். ஆனால் வெப் சர்வரானது அத்துடன் என்ன அனுப்பினோம் என்பதை மறந்து விடுகின்றது.

உதாரணத்திற்கு ஒரு ஆன்லைன் பர்சேஸ் வெப் சைட்டை எடுத்துக்கொள்வோம்.நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களை வாங்கும் போது ஒவ்வொன்றாக க்ளிக் செய்து வாங்குவோம்..ஆனால் மொத்தமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாததன் காரணமாக அதற்கான ஒற்றை ரசீதை சர்வரால் உருவாக்க முடியாது.

இதற்காக சர்வரானது ஒவ்வொரு கோரிக்கையையும் பதிந்து வைத்துக்கொள்கின்றது.ஒவ்வொரு கோரிக்கையும் ஒரே ஐபி முகவரியில் இருந்து வருகின்றது என்பதை குறிப்பிடும் வகையில் சர்வரானது நமது கணினியில் ஒரு சிறு தகவலை சேமிக்கின்றது.அதன் மூலம் நாம் மற்றொரு முறை அந்த வெப் தளத்திற்கு வருகை தரும் போது இந்த தகவலை பெற்றுக் கொண்டு அதன் மூலம் இணைய பக்கத்தை மாற்றி அமைக்கின்றது.

இப்படியாக சர்வர் நம் கணினியில் பதிந்து வைக்கும் சிறு தகவல் தான் குக்கீஸ் எனப்படிகின்றது.

ஒரு குக்கி ஆனது பின் வரும் தகவல்களை கொண்டிருக்கும்.

1.   குக்கீயின் பெயர்

2.   அதன் மதிப்பு.

3.   அதன் expiration தேதி.

4.   அதன் valid path

5.   எந்த டொமைனிற்கானது

6.   செக்யூர் இணைப்பிற்கான தகவல்

இந்த தகவல்களின் படி பெயர் மற்றும் மதிப்பு மற்றும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டிய தகவல்கள், மற்றவை optional.

குக்கீஸின் வகைகள்

1.   permanent/persistent cookies

2.   session/transient cookies.

permanent/persistent cookies


         இந்த வகையான குக்கீஸ் ஆனது நிலையான சேமிப்பை நமது கணினியில் ஏற்படுத்தும்.பிரவுசரை மூடினாலும் இது delete ஆகாது.இது குறிப்பிட்ட இணைய தளத்தில் நமது surfing behavior போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள உபயோக்கின்றார்கள்.

 session/transient cookies


இந்த வகையான குக்கீஸ் ஆனது நமது கணினியில் தாற்காலிமாக தகவல்களை சேமிக்கின்றது.பிரவுசரை மூடும் போது இது தானியியங்கி முறையில் தானாக delete ஆகும்.
குக்கீஸ் உபயோகப்படுத்தப்படும் தளங்கள்.
1.   ஆன்லைன் வர்த்தக தளங்கள்

2.   ஆன்லைன் பேங்கிங்

3.   வெப்சைட் ட்ராக்கிங்

Syntax:

Setcookie(‘cookiename’,’value’,’expirytime’,’path’,’domain’,’secureconnection’)

இவற்றில் cookiename மற்றும் value மட்டுமே கட்டாயம். மற்றவை optional

சான்று நிரல்:

<?php

$subject=”php”;

setcookie(“MySubject”,$subject,time()+3600);

echo “the cookie ‘MySubject’ contains”;

echo $_COOKIE[“MySubject”];

?>

Output:

the cookie ‘MySubject’ contains php

குக்கீஸை  அழித்தல்:

இதற்கான இரண்டு படிகள்:

1.   குக்கீயின் மதிப்பை null ஆக்குதல்

2.   குக்கீயின் expiration date ஆனதை past date ஆக மாறுதல்.

சான்று நிரல்

Setcookie(“MySubject”,” “,time()-3600);

Sessions:

இது ஒரு குறிப்பிட பட்ட பக்கத்தில் சேமிக்கப்பட்ட தகவல்களை மற்ற பக்கங்களில் பெற்றுக் கொள்ள பயன்படுகின்றது.இந்த தகவலானது பிரவுசரை  மூடும் வரையில் மட்டுமே நிலைத்திருக்கும்

Syntax:

$_SESSION["varname"] = <value>

சான்று நிரல்-1

<?php
session_start();
?>
<!DOCTYPE html>
<html>
<body>

<?php
$_SESSION["firstname"] = "muthu";
$_SESSION["lastname"] = "karthikeyan";
echo "Session variables are set.";
?>

</body>
</html>

Output:

Session variables are set

நிரலின் விளக்கம்:


மேலே உள்ள நிரலானது session_start()  என்கின்ற function உடன் ஆரம்பிக்கின்றது. Firstname,lastname என்கின்ற இரண்டு session variables உருவாக்குகின்றது.

சான்று நிரல்-2


<?php
session_start();
?>
<!DOCTYPE html>
<html>
<body>

<?php
echo "First name  is " . $_SESSION["firstname"] . ".<br>";
echo "Last name  is " . $_SESSION["lastname"] . ".";
?>

</body>
</html>

Output:

First name  is  muthu.

Last name  is karthikeyan

நிரலின் விளக்கம்:

மேலே உள்ள நிரலில் முதல் உள்ள நிரலின் சேமிக்கப்பட்ட இரண்டு session variables மதிப்பு இங்கு வெளியிடப்பட்டிருக்கின்றது.இங்கும் session_start() என்கின்ற function நிரலின் முதலாவதாக வந்திருப்பதை கவனிக்கவும்.

குக்கீஸ் மற்றும் செஸன்ஸ் வேறுபாடுகள்



குக்கீஸ்
செஸன்ஸ்
1.கிளையண்ட் கணினியில் சேமிக்கப்படுகின்றது.
1.சர்வரில் சேமிக்கப்படுகின்றது.
2.பாதுகாப்பற்றது
2.பாதுகாப்ப்பானது
3.பயனாளர் நினைத்தால் இந்த பயன்பாட்டை off செய்யலாம்
3. பயனாளர் நினைத்தால் இந்த பயன்பாட்டை off செய்ய இயலாது.

please also visit
http://karthikeyantutorials.com/

                                                   முத்து கார்த்திகேயன்  ,மதுரை



ads Udanz