Wednesday, January 20, 2021

Php –யில் Get ம்ற்றும் Post மெத்தடுகள்

 


 

Php-யில் தகவல் ஆனது சர்வருக்கு இரண்டு முறைகளில் அனுப்பப்படுகின்றது.

1.   Get மெத்தட்

2.   Post மெத்தட்

Get மற்றும் post மெத்தடுகள் ஃபார்ம் டேட்டாவை சர்வருக்கு அனுப்பப் பயன்படும் இரு http request மெத்தடுகள் ஆகும்.

http புரோட்டாகால் ஆனது கிளையண்ட் மற்றும் சர்வர் இடையே தகவல் அனுப்பபயன்படுகின்றது. உங்கள் பிரவுசர் கியையண்ட் ஆகவும் வெப் சைட் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கும் கணினி சர்வர் ஆகவும் செயற்படுகின்றது.

GET method

Get மெத்தட் ஆனது html ஃபார்ம் டேட்டாவை அனுப்பவும் $_GET ஆனது டேட்டாவை சேகரிக்கவும் செய்கின்றது.

கெட் மெத்தட் மூலம் அனுப்பப்படும் டேட்டா ஆனது பிரவுசர் அட்ரஸ் பாரில் வெளிப்படையாக காட்டப்படும் எனவே கெட் மெத்தட் ஆனது பாதுகாப்பானது அல்ல ஏனெனில் கடவுச் சொல் போன்றவை அனுப்பபடும் போது அவை வெளிப்படையாக அட்ரஸ்பாரில் காட்டப்படும்

சான்றாக

  1. localhost/gettest.php?username=Harry&bloodgroup=AB+  

மேலே உள்ள url முகவயில் போல்ட் ஆக இருப்பது வேரியபிள் பெயராகவும் italic ஆக இருப்பவை அதன் மதிப்பாகும்.

கெட் மெத்தட் மூலம் அனுப்பபடும் டேட்டாவானது ஒரு குறிப்பிட்ட நீளம் வரை தான் இருக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

சான்று நிரல்.

கீழே உள்ள நிரலில் ஃபார்மில் இரண்டு இன்புட் ஃபீல்டுகளும் ஒரு சப்மிட் பட்டனும் உள்ளது.  ஃபார்மில் method ஆனது get என குறிப்பிட பட்டுருப்பதை கவனிக்கவும்.

<html>  

   <body>  

     

      <form action = "gettest.php" method = "GET">  

         Username: <input type = "text" name = "username" /> <br>  

         Blood Group: <input type = "text" name = "bloodgroup" /> <br>  

         <input type = "submit" />  

      </form>  

        

   </body>  

</html>  




 கீழே உள்ள நிரலையும் சேர்த்தே எழுதிக்கொள்ளவும் இந்த நிரலானது டேட்டாவை சேகரித்து வெளியீடு செய்கின்றது..

gettest.php

<html>  

   <body>  

     

      Welcome <?php echo $_GET["username"]; ?> </br>  

      Your blood group is: <?php echo $_GET["bloodgroup"]; ?>  

  

   </body>  

</html>

சப்மிட் பட்டனை கிளிக் செய்தவுடன் பிரவுசர் url ஆனது கீழே  உள்ளது போல் மாறும்  

localhost/gettest.php?username=Harry&bloodgroup=AB-

வெளியீடு:

Welcome Harry
Your blood group is: AB-

Get மெத்தட் பயன்படுத்துவதின் நண்மைகள்.

1.       அந்த பக்கத்தை எளிதாக புக் மார்க் செய்யலாம்

2.       கெட் ரிகுவஸ்டுகளை cache செய்யலாம்.

3.       கெட் ரிகுவெஸ்டுகள் பிரவுசர் கிஸ்டரியில் சேமிக்கப்படும்.

கெட் மெத்தட் பயன்படுத்துவதன் தீமைகள்.

  • பாதுகாப்பான தகவல்களை அனுப்பமுடியாது.
  • தகவல்கள் ஒரு குறிப்பிட்ட நீளம் மட்டுமே இருக்க முடியும்.
  • பைனரி டேட்டாக்களை கெட் மெத்தட் மூலம் அனுப்ப முடியாது.

POST method

இதுவும் கெட் மெத்தட் மூலம் டேட்டா url உடன் அனுப்படுவ்து போல் அல்லாமல் அதன் http body உடன் சேர்ந்து அனுப்பபடுகின்றது. டேட்டாவானது $_POST மூலம் சேகரிக்கப்படுகின்றது.

இவ்வாறு அனுப்பப்படும்  டேட்டாக்களின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

அனுப்பப்படும் தகவல் பாதுகாப்பான முறையில் அனுப்படுகின்றது.

சான்றாக

  1. localhost/posttest.php  

 

சான்று நிரல்

கீழே உள்ள நிரலில் இரண்டு இன்புட் ஃபீல்டுகளும் ஒரு சப்மிட் பட்டன் களும் உள்ளது. மெத்தட் ஆனது post என குறிப்பிடப்பட்டிருப்பதை கவனிக்கவும்.

<html>  

   <body>  

     

      <form action = "posttest.php" method = "post">  

         Username: <input type = "text" name = "username" /> <br>  

         Blood Group: <input type = "text" name = "bloodgroup" /> <br>  

         <input type = "submit" />  

      </form>  

        

   </body>  

</html>  


இப்பொழுது கீழே உள்ள நிரலில் $_POST வேரியபிள் மூலம் டேட்டாவானது சேகரிக்கப்படுகின்றது.

Posttest.php

<html>  

   <body>  

     

      Welcome <?php echo $_POST["username"]; ?> </br>  

      Your blood group is: <?php echo $_POST["bloodgroup"]; ?>  

  

   </body>  

</html>  

சப்மிட் பட்டனை கிளிக் செய்தவுடன் URL ஆனது கீழே உள்ளவாறு இருக்கும். Posttest.php என்பது நாம் இரண்டாவதாய் எழுதிய நிர;ல் When the user will click on Submit button after filling the form, the URL sent to the server could look something like this:

localhost/posttest.php


வெளியீடு

Welcome Harry
Your blood group is: O+ 

போஸ்ட மெத்த்டின் நண்மைகள்.

 

  • தகவல் பாதுகாப்பாய் இருக்கும்ம்.
  • டேட்டாக:இன் நீளம் ஒரு தடையல்ல.
  • பைனரி டேட்டாவை அனுப்பலாம்

 POST Method தீங்குகள்.

  • பக்கத்தை cache செய்ய இயலாது.
  • பிரவுசர் ஹிஸ்டரியில் சேமிக்க இயலாது
  • பக்கத்தை புக் மார்க் செய்ய இயலாது.

$_REQUEST variable

 $_REQUEST variable ஆனது Get மற்றும் post ஆகியஇரு முறைகளில் அனுப்பப்படும் டேட்டாக்களையும் சேகரிக்க பயன்படுகின்றது.

முத்து கார்த்திகேயன்,மதுரை

ads Udanz

No comments:

Post a Comment