Thursday, December 30, 2021

ms word 2 Font Formatting

word formatting options explained.

ads Udanz

java oops how implemented

how oops implented in Real world project. Explained

ads Udanz

Monday, December 27, 2021

encapsulation in java

This video explains encapsulation in Java. Explained in Tamil

ads Udanz

what is class and object

What is class and object? explained in Tamil
ads Udanz

Friday, December 24, 2021

oracle 2 introduction to oracle

This video explains about oracle sql plus. introduction to sql plus
ads Udanz

Flash அனிமேசன் அடிப்படைகள்.

Flash என்னும் மென் பொருள் கொண்டு பொதுவாக கீழ் வருவன பற்றி செய்யலாம்.

1.      வெக்டார் உருவங்கள் உருவாக்குதல்

2.      வெக்டார் டிராயிங்க் உருவாக்குதல்

3.      அனிமேசன் உருவாக்குதல்

4.      வெப் பக்கங்களில் மேற்கண்டனவற்றையும் ஒலியையும் உருவாக்குதல்

5.      அனிமேசன் மூலம் கேம்ஸ் உருவாக்குதல்.

அடிப்படை அனிமேசன்கள்.

Flash கொண்டு டைம்லைனை உபயோகப்படுத்தி இரண்டு வகையான டுவீண்டு (tweened) அனிமேசன்களை உருவாக்கலாம்.

1.      மோசன் டுவீன்(Motion tween)

2.      ஷேப் டுவீன்(Shape tween)

Motion tween.

மோசன் டுவீன் என்பது ஒரு சிம்பளை இரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துதல் ஆகும்.

இதை செய்வதற்கு ஒரு சிம்பளின் ஆரம்ப இருப்பிடத்தையும் இறுதியில் உள்ள இருப்பிடத்தையும் குறிப்பிட வேண்டும். மற்றவற்றை Flash மென்பொருள் பார்த்துக் கொள்ளும்.

செய்வதற்கான படி நிலைகள்.

1.      ஒரு புதிய ஃப்ளாஷ் ஃபைலை ஓபன் செய்யவும்(ctrl+n)

2.      நியூ டாக்குமென்ட் விண்டோ ஒபன் ஆகும்.

3.      General பேனலில் Flash document என்பதை தேர்வு செய்து ஓகே செய்யவும்.

4.      டைம் லைன் தெரியாவிட்டால் பின் வரும் கீக்களை அழுத்தவும்(Ctrl+Alt+T)

5.      இப்பொழுது டைம் லைனில் Layer1 என்ற பெயரில் ஒரு லேயர் காணப்படும்.

6.      முதல் ஃப்ரேமை செலெக்ட் செய்யவும்.

7.      ஆப்ஜெக்டை இம்போர்ட் செய்து கொள்ளவும் அல்லது ஏதாவது ஒரு வடிவத்தை வரைந்து கொள்ளவும்.

8.      ஆப்ஜெக்டை இம்போர்ட் செய்ய File->import->import to stage அல்லது ctrl+R கீயை அழுத்தவும்.

9.      அல்லது டூல் பாக்சில் உள்ள ரெக்டாங்கிள் அல்லது சர்க்கிள் டூல் கொண்டு ஒரு வடிவத்தை வரையவும்.

10.  இப்பொழுது ஸ்டேஜில் உள்ள ஆப்ஜெக்டை தேர்வு செய்து F8 கீயை அழுத்தி அந்த் ஆப்ஜெடை சிம்பளாக மாற்றிக்கொள்ளவும்.சிம்பளின் பெயராக ஒரு பெயர் கொடுக்கவும்.பிஹேவியராக graphic என்பதை கொடுத்து ok செய்யவும்.

11.  மோசன் டுவீனை ஒரு சிம்பளின் மீது தான் ஏற்படுத்த முடியும்.

12.   இப்பொழுது உங்கள சிம்பள் ஆனது லேயர் 1-ன் ஃப்ரேம் 1-ல் இருக்கின்றது.ஃப்ரேம் 20 –தை செலெக்ட் செய்து f6 அழுத்தி ஒரு புதிய கீ ஃப்ரேமை உருவாக்கிக் கொள்ளவும்.

13.  ஃப்ரேம் 20 –ல் இருந்த நிலையிலேயே  ஆப்ஜெக்டை அனிமேசனின் இறுதியாக இருக்க வேண்டிய இடத்திற்கு நகர்த்தவும்.

14.  ஃப்ரேம் 2-19-ற்குள் ஏதாவது ஒரு ஃப்ரேமை தேர்வு செய்து பிராப்பர்ட்டி இன்ஃபோ எனப்படும் பாப் அப் விண்டோவில் மோசன் டுவீன் என்பதை தேர்வு செய்யவும்.

15.  இப்பொழுது ctrl+enter அழுத்தி அனிமேசனை இயக்கவும்.

ஷேப் டுவீன்(Shape tween)

ஷேப் டுவீனில் ஒரு ஆப்ஜெக்டின் வடிவத்தை ஒன்றில் இருந்து மற்றொரு வடிவமாக மாற்றலாம். பொதுவாக ஃப்ளாஷ் டுவீனில் ஒரு ஆப்ஜெக்டின் இடம் , வடிவம் மற்றும் நிறம் போன்றவற்றை மாற்றலாம்.

ஷேப் டுவீன் படி நிலைகள்.

1.      முதலில் மோசன் டுவீனில் உள்ள படி நிலைகள் 1 to 6 வரை செய்யவும்.

2.      ஃப்ரேம் ஒன்றை செலெக்ட் செய்து ஸ்டேஜில் ஏதாவது ஒரு வடிவத்தை வரையவும் சான்றாக ஒரு வட்டம்.

3.      ஃப்ரேம் இருபதை செலெக்ட் செய்து f6 அழுத்தி ஒரு புதிய ஃப்ரேமை இன்செர்ட் செய்யவும்.

4.      ஃப்ரேம் 20-ல் இருந்த படியே ஸ்டேஜில் முதலில் இருந்த ஆப்ஜெக்டை அழித்து விட்டு வேறொரு ஆப்ஜெக்டை வரையவும். சான்றாக சதுரம்.

5.      இப்பொழுது ஃப்ரேம் 2-19 –ற்குள் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.

பிராப்பர்ட்டி இன்ஸ்பெக்டர் பாப் அப் மெனுவில் உள்ள டுவீன் டைப்பில் ஷேப் என்பதை தேர்வு செய்யவும்.

இப்பொழுது ctrl+enter அழுத்தி அனிமேசனை இயக்கவும்.

லேயர்கள்.

இப்பொழுது ஒன்றுக்கு  மேற்பட்ட லேயர்களை பயன்படுத்தி மோசன் டுவீன் மற்றும் ஷேப் டுவீன் இரண்டையையும் ஒரு சேர எவ்வாறு நிகழ்த்துவது என்று பார்ப்போம்.

படி நிலைகள்.

1.      முதல் லேயரில் ஷேப் டுவீன் உருவாக்குவதற்கு நாம் என்ன செய்தோமோ அதை செய்யவும்.

2.      ஆட் நியூ லேயர் பட்டனை அழுத்தவும்.

3.      இப்பொழுது புதிய லேயர் ஒன்று டிஃபால்ட் ஆக Layer 2 என்ற பெயரில் தோன்றும்.

4.      இந்த லேயரில் நாம் மோசன் டுவீனிற்கு என்ன செய்தோமோ அதை செய்யவும்.

இப்பொழுது ctrl+enter கீயை அழுத்தி அனிமேசனை இயக்கவும்.

மோசன் கைட்(Motion guide).

மோசன் கைட் என்பது ஒரு ஆப்ஜெக்டை ஒரு குறிபிட்ட பாத்தில் நகர்த்துதல் ஆகும்.

அது சர்க்குளர், zig zag அல்லது curved path ஆக இருக்கலாம்.

படி நிலைகள்.

1.      லேயர் ஒன்றில் ஒரு சிம்பளை உருவாக்கவும் அல்லது லைப்ரரியில் இருந்து ஒரு சிம்பளை இம்போர்ட் செய்து கொள்ளவும். லேயரின் பெயராக சான்றுக்கு Graphic என பெயரிடவும்.

2.      Graphic லேபளில் வலது கிளிக் செய்து பாப் அப் விண்டோவில்

Add Motion guide என்பதை செலெக்ட் செய்து கொள்ளவும்.

3.இப்பொழுது Guide:Graphic என்ற பெயரில் Guide ஐக்கானுடன் ஒரு புதிய லேயர் தோன்றும்.

4. இந்த லேயரில் பென்சில் அல்லது லைன் டூல் கொண்டு ஒரு பாத்தை வரைந்து கொள்ளவும்.

5. Guide லேயரில் ஃப்ரேம் 50-ல் f5 அழுத்தி லேயரை இன்செர்ட் செய்யவும்.

6.  இப்பொழுது graphic லேயரில் ஃப்ரேம் 1-ல் ஆப்ஜெக்டை பாத்தின் ஆரம்பத்தில் இருத்தவும்.

7.  graphic லேயரில் ஃப்ரேம் 50-ல் கிளிக் செய்து f6 அழுத்தவும். பிறகு ஆப்ஜெக்டை டிராக் செய்து பாத்தின் இறுதியில் இருத்தவும்.

8. graphic லேயரில்  ஃப்ரேம் 2-49ற்க்குள் ஏதாவது ஒன்றை வலது கிளிக் செய்து பாப் அப் மெனுவில் motion tween என்பதை தேர்வு செய்யவும்.

9. ctrl+enter அழுத்தி அனிமேசனை இயக்கவும்.

இப்பொழுது ஷேப் ஆனது ஒரு இடத்தில் இருந்து குறிப்பிட்ட பாத்தில் நகர்ந்து இறுதி நிலையை அடைகின்றது.

மாஸ்க்கிங்க் .

மாஸ்கிங்க் என்பது அதற்கு கீழே உள்ள லேயரில் இமேஜ் அல்லது டெக்ஸ்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளிப்படுத்துதல் ஆகும்.

படி நிலைகள்.

1.      பொதுவாக மாஸ்க்கிங்க் செய்வதற்கு இரண்டு லேயர்கள் தேவைப்படும் . என்வே Add new layer பட்டனை கிளிக் செய்து மற்றொரு லேயரை உருவாக்கவும்.மேலே உள்ள் லேயரின் பெயரை “Mask” என்றும் கீழே உள்ள் பெயரை “Background” என்றும் பெயர் மாற்றம் செய்து கொள்ளவும்.

2.      பேக்ரவுண்ட் லேயரில் ஒரு ஆப்ஜெக்டை இம்போர்ட் செய்து கொள்ளவும்.

3.      மாஸ்க் லேயரில் ஒரு சர்க்கிளை வரைந்து அதை உங்கள் ஆப்ஜெக்டின் ஆரம்பத்தில் இருத்தவும்.

4.      மாஸ்க் லேயரில் ஃப்ரேம் 40-ஐ கிளிக் செய்து f6 அழுத்தவும். இப்பொழுது புதிய கீஃப்ரேம் இன்செர்ட் செய்யப்படும்.

5.      பேக்ரவுண்ட் லேயரின் ஃப்ரேம் 40-ஐ கிளிக் செய்து f5 அழுத்தவும். இதன் மூலம் பேக்ரவுண்ட் இமேஜ் ஆனது மாஸ்கிங்க் மூலம் வெளிப்படுத்தப்படும்.

6.      மாஸ்க் லேயரில் உள்ள ஃபரேம் 40-ஐ செலெக்ட் செய்யவும்.இப்பொழுது சர்க்கிளை ஆப்ஜெக்டின் இறுதிக்கு நகர்த்தவும்.

7.      மாஸ்க் லேயரின் ஃப்ரேம் ஒன்றில் இருந்த படி பிராப்பர்ட்டி விண்டோவில் ஷேப் டுவீன் என்பதஒ தேர்வு செய்யவும்.

8.      மாஸ்க் லேயரை வலது கிளிக் செய்து “Mask” என்பதை தேர்வு செய்ய்யவும்.

9.      Ctrl+enter கீயை அழுத்தி அனிமேசனை இயக்கவும்.

இப்பொழுது மாஸ்க்கிங்க் எஃபெக்டை காணலாம்.

-நன்றி.

முத்து கார்த்திகேயன் ,மதுரை

ads Udanz

Thursday, December 23, 2021

ஏஎஸ்பி டாட்நெட்டில் குக்கீஸ்.

ஏஎஸ்பி டாட் நெட்டில் டேட்டாவை ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு அனுப்ப நிறைய வழிவகைகள் உள்ளது.அதில் ஒன்று குக்கிஸ் ஆகும்.

பொதுவாக இணைய தளங்கள் கிளையண்ட் மெசினில் பயனர் தேர்வுகள், மற்றும் சில டேட்டாக்களை சேமிக்க குக்கீஸ்களை பயன்படுத்துகின்றது.

குக்கீஸ்கள் பொதுவாக இரண்டு வகைப்படும்.

1.      பெர்சிஸ்டென்ஸ் குக்கீஸ்

2.      நான் பெர்சிஸ்டென்ஸ் குக்கீஸ்.

பெர்சிஸ்டென்ஸ் குக்கீஸ்.

பிரவுசரை மூடினாலும் கிளையண்ட் மெசினில் சேமிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.HttpCookie ஆப்ஜெகட்டின் expires பிராப்பர்ட்டியை பயன்படுத்தி நாம் எவ்வளவு காலம் டேட்டாவை கிளையண்ட் மெசினில் சேமிக்கப்படவேண்டும் என்பதை கான்பிக்ரேசன் செய்யலாம்.

நான் பெர்சிஸ்டென்ஸ் குக்கீஸ்.

Expires பிராப்பர்ட்டியை பயன்படுத்தாவிட்டால் அது நான் பெர்சிடென்ஸ் குக்கீஸ் எனப்படுகின்றது.இவ்வகை குக்கீஸ்கள் பிரவுசரை மூடியவுடன் அழிந்து விடும்.

கீழ்வரும் சான்று நிரலில் வெப் ஃபார்ம் ஒன்றில் பயனர் பெயர்,இமெயில் போன்ற டேட்டாக்கள் குக்கீஸில் சேவ் செய்யப்படுகின்றது. வெப் ஃபார்ம் இரண்டில் குக்கீஸில் இருந்து டேட்டா ரீடிரைவ் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றது.

WebForm1.aspx HTML source:

This is WebForm1

Name

:<asp:TextBox ID="txtName" runat="server">
</asp:TextBox>

Email

:<asp:TextBox ID="txtEmail" runat="server">
</asp:TextBox>

<asp:Button ID="btnSendData" runat="server"
Text="Go to WebForm2" onclick="btnSendData_Click" />

WebForm1.aspx.cs code:
protected void btnSendData_Click(object sender, EventArgs e)

// Create the cookie object
HttpCookie cookie = new HttpCookie("UserDetails");
cookie["Name"] = txtName.Text;
cookie["Email"] = txtEmail.Text;
// Cookie will be persisted for 30 days
cookie.Expires = DateTime.Now.AddDays(30);
// Add the cookie to the client machine
Response.Cookies.Add(cookie);

Response.Redirect("WebForm2.aspx");

WebForm2.aspx HTML Source:

This is WebForm2

Name

:<asp:Label ID="lblName" runat="server">
</asp:Label>

Email

:<asp:Label ID="lblEmail" runat="server">
</asp:Label>

WebForm2.aspx.cs Code:
protected void Page_Load(object sender, EventArgs e)

HttpCookie cookie = Request.Cookies["UserDetails"];
if (cookie != null)

lblName.Text = cookie["Name"];
lblEmail.Text = cookie["Email"];

ஏஎஸ்பி டாட்நெட்டில் குக்கீஸ் எனேபிள் செய்யப்பட்டிருக்கின்றதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டறியலாம். இணையத்தில் நிறைய கட்டுரைகளீல் Request.Browser.Cookies பயன்படுத்தி அதை அறியலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அது தவறாகும் உண்மையில் Request.Browser.Cookies பயன்படுத்தி பிரவுசர்கள் குக்கீஸ்களை சப்போர்ட் செய்கின்றதா என்பதை மட்டுமே அறியலாம்.

உண்மையில் இப்பொழுது வரும் மாடர்ன் பிரவுரசர்கள் எல்லாமே குக்கீஸ்களை சப்போர்ட் செய்கின்றது.

if (Request.Browser.Cookies)

//Cookies Enabled

else

//Cookies Disabled

உண்மையில் மேற்காணும் நிரலை பயன்படுத்தி பிரவுசர்கள் குக்கீஸ்களை சப்போர்ட் செய்கின்றதா என்பதை மட்டுமே அறியலாம்.

குக்கீஸ்கள் எனேபிள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய கீழ் வரும் படிநிலைகளை பயன்படுத்தவும்.

1.      குக்கீஸ்களை பயன்படுத்தி சான்று நிரல் ஒன்றை எழுதவும்

2.      அதே பக்கத்திற்கு ரீடைரெக்ட் செய்யவும்.

3.      குக்கீஸை ரீட் செய்யவும்.

4.      குக்கீஸ் இருந்தால் குக்கீஸ் எனேபிள் செய்யப்பட்ட்டிருக்கின்றதா என்பதை அறியவும்.

5.      இல்லையெனில் குக்கீஸ் டிஸேபிள் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இண்டெர்நெட் எக்ஸ்புரோரில் குக்கீசை எவ்வாறு டிஸேபிள் செய்கின்றது.

1.      டூல்ஸ் என்பதை கிளிக்ல் செய்யவும்.

2.      இண்டெர்நெட் ஆப்சன்ஸ் என்பதை தேர்வு செய்யவும்.

3.      பிரைவசி டேப்பை கிளிக் செய்யவும்.

4.      செட்டிங்க்ஸ் என்பதற்கு கீழே உள்ள அட்வான்ஸ்டு என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

5.      Override automatics cookie handling என்ற செக் பாக்சை கிளிக் செய்யவும்.ள

6.      First party cookies and  third party cookie கீழே உள்ள block என்ற இர ண்டு ரேடியோ பட்டன்களை தேர்வு செய்யவும்.

மேலே உள்ள படி நிலைகள் இணையத்தில் உங்கள் குக்கீஸ்களை டிசேபிள் செய்ய மட்டுமே முடியும். ஆனால் உங்கள் கிளையண்ட் மெசினில் local host என்பதில் தடை செய்ய பின் வரும் படி நிலைகளை பயன்படுத்தவும்.

1.      பயன்பாட்டை இயக்கவும்.

2.      F12 என்ற பட்டனை கிளிக் செய்தால் developer options என்பது ஓபன் ஆகும்.

3.      Cache - Disable Cookies என்பதை தேர்வு செய்யலாம்.

WebForm1.aspx HTML source:

This is WebForm1

Name

:<asp:TextBox ID="txtName" runat="server">
</asp:TextBox>

Email

:<asp:TextBox ID="txtEmail" runat="server">
</asp:TextBox>

<asp:Button ID="btnSendData" runat="server"
Text="Go to WebForm2" onclick="btnSendData_Click" />

<asp:Label ID="lblMessage" runat="server"
ForeColor="Red" Font-Bold="true">
</asp:Label>

WebForm1.aspx.cs code:
protected void Page_Load(object sender, EventArgs e)

if (!IsPostBack)

// Check if the browser supports cookies
if (Request.Browser.Cookies)

if (Request.QueryString["CheckCookie"] == null)

// Create the test cookie object
HttpCookie cookie = new HttpCookie("TestCookie", "1");
Response.Cookies.Add(cookie);
// Redirect to the same webform
Response.Redirect("WebForm1.aspx?CheckCookie=1");

else

//Check the existence of the test cookie
HttpCookie cookie = Request.Cookies["TestCookie"];
if (cookie == null)

lblMessage.Text = "We have detected that, the cookies are disabled on your browser. Please enable cookies.";

else

lblMessage.Text = "Browser doesn't support cookies. Please install one of the modern browser's that support cookies.";

protected void btnSendData_Click(object sender, EventArgs e)

// Create the cookie object
HttpCookie cookie = new HttpCookie("UserDetails");
cookie["Name"] = txtName.Text;
cookie["Email"] = txtEmail.Text;
// Cookie will be persisted for 30 days
//cookie.Expires = DateTime.Now.AddDays(30);
// Add the cookie to the client machine
Response.Cookies.Add(cookie);

Response.Redirect("WebForm2.aspx");

WebForm2.aspx HTML Source:

This is WebForm2

Name

:<asp:Label ID="lblName" runat="server">
</asp:Label>

Email

:<asp:Label ID="lblEmail" runat="server">
</asp:Label>

WebForm2.aspx.cs Code
protected void Page_Load(object sender, EventArgs e)

HttpCookie cookie = Request.Cookies["UserDetails"];
if (cookie != null)

lblName.Text = cookie["Name"];
lblEmail.Text = cookie["Email"];

நன்றி.

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

ads Udanz