Wednesday, October 26, 2022

Tally prime 2.0 cost category மற்றும் cost center

 





 

டேலியில் குறிப்பிட்ட யூனிட் ஒன்றினை மையமாக வைத்து நாம் அதற்கான இன்ஃப்லோ(inflow) மற்றும் அவுட்ஃப்லோ(outflow) ஆகியவற்றை நாம் எளிதாக கணக்கிடலாம்.

அந்த குறிப்பிட்ட யூனிட்டை நாம் காஸ்ட் செண்டராக உருவாக்கலாம்.அந்த காஸ்ட் செண்டர்களை நாம் குரூப் செய்யலாம். அந்த குரூப்பின் பெயராக காஸ்ட் கேட்டகிரி இருக்கும்.

உதாரணமாக நாம் சேல்ஸ்மேன் என்கின்ற ஒரு காஸ்ட் கேட்டகிரியை உருவாக்குவதாக வைத்துக் கொள்வோம்.இது ஒரு குரூப். இந்த குரூப்பின் கீழ் நாம் காஸ்ட் செண்டர்களை உருவாக்கலாம்.அதாவது MR.Muthu,MR.karthkeyan என வைத்துக் கொள்வோமே.

இப்பொழுது சேல்ஸ்மேன் கமிசன் ரூ 15000 என எடுதுக்கொள்வோம். இந்த கமிசனை நாம் வவுச்சர் என்ட்ரியில் MR.Muthu எங்கின்ற காஸ்ட் செண்டருக்கும்MR.Karthikeyan என்கின்ற காஸ்ட் செண்டருக்கும் பிரித்து மதிப்பிடலாம்.

முதலில் டேலி ப்ரைமில் ஒரு கம்பெனி உருவாக்கிக் கொள்வோம்.

 


கேட் வே ஆஃப் டேலியில் முதலில் create என்பதை கிளிக் செய்யவும்.



பிறகு cost category என்பதை தேர்வு செய்யவும்.



பின் உதாரணத்திற்கு “seles man” என்றொரு கேட்டகரி உருவாக்கவும்.



 

பிறகு Muthu, karthikeyan என இரு  காஸ்ட் சென்டெர்கள் உருவாக்கிக் கொள்ளவும்.





பிறகு salary என ஒரு இண்டைரக்ட் எக்ஸ்பென்செஸ் லெட்ஜெர் உருவாக்கிக் கொள்ளவும்.



பிறகு ஒரு பேய்மெண்ட் டைப் வவுச்சர் ஒன்றை உருவாக்கவும்.



 

அடுத்து வரும் ஸ்கிரினில் இரண்டு காஸ்ட் சென்டருக்கும் தொகையை பிரிக்கவும்.

 

 


 

 

 

 

 

இப்பொழுது கேட் வே ஆஃப் டேலியில் Display more reports என்பதை தேர்ந்தெடுத்து அடுத்து வரும் திரையில் statement of accounts என்பதை தேர்ந்தெடுக்கவும்.

 

 


 

அடுத்து cost center என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில் cost category என்பதை தேர்ந்த்தெடுக்கவும். நமக்கு சென்டெர் வாரியாக தொகை காட்டப்படும். இதை அடுத்து cost center break up என்ற ஆப்சன் மூலமும் ரிப்போர்ட்டை பார்வையிடலாம்.

நன்றி

முத்து கார்த்திகேயன், மதுரை.

ads Udanz

ஆன்ட் ராய்டு பயன்பாடுகள் உருவாக்கம் அடிப்படைகள்

 



ஆண்ட் ராய்டு என்பது மொபைல் போன்களுக்கான ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஆகும்.இது லினக்ஸ் கெர்னலை அடிப்படையாக கொண்டது. இது ஒரு ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் ஆகும். இது கூகிளால் உருவாக்கப்பட்டது ஆகும். இது ஸ்மார்ட் போன், டேப்லெட் போன்ற டச் ஸ்கிரின் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இது இப்பொழுது ஆன்ட்ராய்டு கார், டிவி, வாட்ச், கேமரா என எல்லா சாதனங்களிலும் பயன்படுகின்றது.

கேம்ஸ், மியூசிக் பிளேயர்,கேமரா என வித்தியாசமான ஆப்கள் உருவாக்கப்பயன்படுகின்றது.ஆண்ட் ராய்டு பயன்பாடுகள் ஆன்ட் ராய்டு ஸ்டுடியோவில் உருவாக்கப்படுகின்றன.

1.     ஆண்ட் ராய்டு நிரலாக்க மொழிகள்.

இது xml, java c++ போன்ற மொழிகளில் எழுதப்படுகின்றது  kotlin மொழியானது  ஜாவா பதிலாகவும் இப்பொழுது பயன்படுகின்றது.

Xml ஆனது டிசைன், லேய் அவுட்,பிரசண்டேசன் ஆகியவற்றிற்காகவும் ஜாவா அல்லது காட்லின் ஆனது பட்டன்,வேரியபிள், ஸ்டோரிங்க் ஆகியவற்றிற்காக பயன்படுகின்றது. அதாவது பேக் எண்டாக பயன்படுகின்றது.

2.     ஆண்ட் ராய்டு காம்பனண்டுகள்.

ஆண்ட் ராய்டு காம்பனண்டுகள் ஆன்ட் ராய்டு பயன்பாடுளின் கட்டுமானம் உருவாக்கப்பயன்படுகின்றது.ஒவ்வொரு காம்பனண்டுகளுக்கென ஒரு ரோல், லைஃப் சைக்கிள்  அதாவது அதை தொடக்குவித்தல் முதல் முடிக்கும் வரையில் என்ன செய்யப்பட வேண்டும் போன்றவை உள்ளது

முக்கிய நான்கு காம்பனண்டுகள்.

  • Activities
  • Services
  • Broadcast Receivers:
  • Content Provider:

ஆக்டிவிட்டிஸ்:

இது ui மற்றும் திரையில் யூசர் இன்டெராக்சன் ஆகியவற்றிற்காக பயன்படுகின்றது.அதாவது இது ஒரு யூசர் இண்டர்ஃபேஸ் ஆகும் அது ஆக்டிவிட்டிகளைக் கொண்டுள்ளது.

இது ஆப்களை பொருத்து ஒன்றுக்கு  மேற்பட்டவைகளாக இருக்கலாம்.

இது அப்ளிகேசன் லாஞ்ச் ஆகும் பொழுது தொடங்குகின்றது.

குறைந்த பட்சம் ஒரு ஆக்டிவிட்டியாவது எப்பொழுதும் இயங்குகின்றது. அது மெயின் ஆக்டிவிட்டி ஆகும்.

இதன் இம்ப்ளிமெண்டேசன் சின் டாக்ஸ்.

public class MainActivity extends Activity{

  // processes

}

சர்வீசஸ்.

இது பேக் ரவுண்டில் அப்ளிகேசனால் செய்யப்படும் செயல்களைக் குறிக்கின்றது. சான்றாக இணையத்தில் உலா வரும் பொழுது கேட்கும் பேக் ரவுண்ட் மியூசிக். ஒரு சர்வீஸிற்க்கு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க இன்னொரு சப் சர்வீசின் உதவி தேவைப்படலாம்.சர்வீஸின் முக்கியத் தேவை அது கடைசி வரை தடைபெறாமல் நடத்தலே.

இதன் இம்ப்ளிமென்டேசன் சிண்டாக்ஸ்.

public class MyServices extends Services{

  // code for the services

}

  பிராட்கேஸ்ட் ரெசிவர்ஸ்:

     மற்றொரு பயன்பாட்டில் இருந்தோ அல்லது சிஸ்டத்தில் இருந்தோ வரும் செய்திகளுக்கு பதில் அளிப்பதே இதன் வேலை ஆகும். சான்றாக மொபைல் பேட்டரி டவுன் ஆகும் பொழுது ஆன்ட்ராய்டு ஓஎஸ் ஆனது ஒரு செய்தியை உருவாக்குகின்றது.இத் பேட்டரி சேவர் ஃபங்க்சனையோ அல்லது ஒரு ஆப்பையோ லாஞ்ச் செய்கின்றது.செய்தி கிடைத்தவுடன் பயன்பாடு அதன் மேல் நடவடிக்கை எடுக்கின்றது. இது BroadcastReceiver கிளாசின் சப் கிளாஸ் ஆகும்.

இதன் சிண்டாக்ஸ்

public class MyReceiver extends BroadcastReceiver{

   public void onReceive(context,intent){

 }

கண்டண்ட் பிரவைடர்.

இது ஒரு அப்ளிகேசனில் இருந்து டேட்டாவை மற்ற அப்ளிகேசனுக்கு டிரான்ஸ்ஃபெர் செய்ய பயன்படுகின்றது.இது ContentResolver கிளாசினால் கையாளப்படுகின்றது.இது செட் ஆஃப் ஏபிஐ (APPLICATION PROGRAMMING INTERFACE)-யை இம்ப்ளிமெண்ட் செய்கின்றது.எல்லா கண்டண்ட் பிரவைடரும் ContentProvider  கிளாசை இன் ஹெரிட் செய்ய வேண்டும்.

இதன் சிண்டாக்ஸ்:

public class MyContentProvider extends ContentProvider{

   public void onCreate()

   {}

}

3.      ஆண்ட் ராய்டு ஸ்டுடியோ ஸ்ட்ரக்சரல் லேய் அவுட்.



 

 

Manifest file:

இது ஒரு xml file ஆகும்.இது பிராஜெக்ட் சோர்சின் ரூட் ஆகும். இது பயன்பாடு, ஆண்ட் ராய்டு பில்ட் டூல்ஸ், ஆண்ட் ராய்டு ஆபரேட்டிங்க் சிஸ்டம் மற்றும் கூகிள் பிளே போன்றவற்ற்ன் முக்கிய தகவல்கசளைக் கொண்டிருக்கும்.இது பயன்பாடு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கான அனுமதியைக் கொண்டிருக்கும். இது ஹார்டு வேர் மற்றும் சாஃப்ட்வேர் அம்சங்கள் அதானது கூகிள் பிளே ஸ்டோரில் கம்பேசபிளிட்டியை தீர்மானிக்கின்றது.

இது மேலும் சர்வீஸ் ஆக்டிவிட்டிகளான சர்வீசஸ், பிராட்கேஸ்ட் ரிசிவர்ஸ், கண்டன் பிரவைடர் ஆகியவற்றைய்க் கொண்டிருக்கும்.

ஜாவா ஃபோல்டர்.

இது பின்னனி செயற்பாடுகளை நடத்துவதற்கு தேவையான ஜாவா ஃபைல்களைக் கொண்டிருக்கும்.

இது பட்டன் ஃபங்க்சனால்லிட்டி,கால்குலேசன்,ஸ்டோரிங்க்,வேரியபிள், புரோகிராக்கிராமின்  ஃபங்க்சன்கள் ஆகியவற்றிலானது.ஆக்டிவிட்டியை பொருத்து இதன் எண்ணிக்கை வேறுபடும்.

ரிசோர்ஸ் ஃபோல்டர்

இது பயன்பாட்டில் பயன்படும் வெவ்வேறு ரிசோர்ஸ்களைக் கொண்டுள்ளது. இது சப் ஃபோல்டர்களான DRAWABLE, LAYOUT, MIPMAP,

RAW மற்றும் VALUES ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

DRAWABLE ஃபோல்டரில் இமேஜ்கள் இருக்கும்.லேயவுட்டில் யூசர் இன்டெர்ஃபேஸ் லேய் அவுட்டிற்கான XML ஃபைல் இருக்கும்.

இவை ரிசோர்ஸ் லேய் அவுட்டில் இருக்கும்.இவை R.LAYOUT என்பதன் மூலம் அனுகப்படுகின்றது.

RAW ஆனது வீடியோ, ஆடியோ ஃபைல்களைக் கொண்டிருக்கும்.இவை R.raw.fillename என்பதன் மூலம் ஆக்சஸ் செய்யப்படுகின்றது.values ஆனது இன்டிஜெர், ஸ்டிரிங்க் போன்ற மதிப்புகளைக் கொண்டுள்ளது.இது மேலும் பின் வரும் டைரக்டரிகளைக் கொண்டுள்ளது.

  • R.array :arrays.xml for resource arrays
  • R.integer : integers.xml for resource integers
  • R.bool : bools.xml for resource boolean
  • R.color :colors.xml for color values
  • R.string : strings.xml for string values
  • R.dimen : dimens.xml for dimension values
  • R.style : styles.xml for styles

Gradle files:

Gradle என்பது ஒரு அட்வான்ஸ்டு டூல் கிட் ஆகும். இது பில்ட் பிராசசை நிர்வாகிக்க பயன்படுகின்றது.இவை ஃப்லெக்சிபிள் கஸ்டம் கான்பிக்ரேசனை டிஃபைன் செய்கின்றது.

ஒவ்வொரு பில்ட் கான்ஃபிக்ரேசனும் தனக்கென்று தனியான நிரல்கள்  மற்றும் ரிசோர்ஸ்களைக் கொண்டிருக்கும்.பொதுவான ரியூசபிள் பகுதிகளும் இருக்கும்.

பேசிக் லேய் அவுட்.

Project/

   app/

      manifest/

         AndroidManifest.xml

   java/

      MyActivity.java  

      res/

         drawable/ 

            icon.png

            background.png

         drawable-hdpi/ 

            icon.png

            background.png 

         layout/ 

            activity_main.xml

            info.xml

         values/ 

            strings.xml

4.   ஆக்டிவிட்டி லைஃப் சைக்கிள்.

ஒரு ஆக்டிவிட்டியின் லைஃப் சைக்கிள் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.



.

OnCreate:

இது ஒரு ஆக்டிவிட்டி முதல் முறையாக உருவாக்கப்படும் பொழுது நிகழ்கின்றது.

OnStart:

இது ஒரு ஆக்டிவிட்டி விசிபிள் ஆகும் பொழுது நிகழ்கின்றது.

OnResume

இது ஒரு ஆக்டிவிட்டி பயனருடன் இன்டராக்ட் செய்யும் பொழுது நிகழ்கின்றது.

OnPause:

இது ஒரு ஆக்டிவிட்டி மறையும் பொழுது நிகழ்கின்றது.

OnStop:

இது ஒரு ஆக்டிவிட்டி மொத்தமாக மறையும் பொழுது நிகழ்கின்றது.

OnRestart:

இது ஒரு ஆக்டிவிட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படும் பொழுது நிகழ்கின்றது.

OnDestroy:

இது ஒரு ஆக்டிவிட்டி நிறுத்தப்பட்டு டெஸ்ட்ராய் ஆகும் பொழுது நிகழ்கின்றது.

நன்றி.

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

 

 

 

 

 

 

ads Udanz

Wednesday, October 12, 2022

நெட் வொர்க்கின் அடிப்படைகள்



ஓபன் சிஸ்டம்:

நெட் வொர்க்குடன் கனக்ட் செய்யப்பட்டு தொடர்பு கொள்ளலுக்கு தயாராக இருக்கும் சிஸ்டம் ஆனது ஓபன் சிஸ்டம் எனப்படுகின்றது.

குளோஸ்டு சிஸ்டம்.

நெட் வொர்க்கில் இருந்து துண்டிக்கப்பட்டு தொடர்பு கொள்ளலுக்கு தயாராக இல்லாத சிஸ்டம் குளோஸ்டு சிஸ்டம் எனபடுகின்றது.

கம்ப்யூட்டர் நெட்வொர்க்.

ஹோஸ்ட் என அறியப்படும், டேட்டாவை அனுப்பவும்,பெறவும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட கருவிகளின் தொகுப்பே கம்ப்யூட்டர் நெட்வொர்க் எனப்படுகின்றது. இவை ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளில் இணைக்கப்படுகின்றது.

இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளப்பயன்படும் சாதனங்களையும் உள்ளடக்கியது.இவை நெட்வொர்க் சாதனங்கள் எனப்படுகின்றது.உதாரணத்திற்க்கு ஹப்ஸ்,ரௌட்டர்ஸ்,சுவிட்ச் மற்றும் பிரிட்ஜ்.



நெட் வொர்க் டோபலஜி(Topology).

ஒரு நெட் வொர்க்கில் இருக்கும் சாதனங்களில் ஒன்ற்க்கு மேற்பட்ட விதமான லேய் அவுட் ஏற்பாடு நெட்வொர்க் டோபாலஜி எனப்படுகின்றது.

உதாரணம்.

Bus, Star, Mesh, Ring, மட்டும்  Daisy chain. 




OSI

OSI என்பது ஓபன் சிஸ்டம் இன்டெர்கனக்சன் என்பதாகும். இது கம்யூனிகேசன் புரோட்டாகால்ஸ் ஸ்டாண்டர்ஸ் மற்றும் ஒவ்வொரு லேயர்களின் செயற்பாட்டையும் குறிப்பிடும் ரெஃபெரென்ஸ் மாடல் ஆகும்.

புரோட்டாகால்(PROTOCOL).

இவை இரண்டு சாதனங்கள் எவ்வாறு நெட் வொர்க்கில் தொடர்பு கொள்வது என்பது பற்றிய விதிமுறைகள் அல்லது அல்கரிதம்ஸ்  ஆகியவற்றின் அமைப்பாகும். OSI லேயரின் ஒவ்வொன்றிலும் வித விதமான புரோட்டாகால்கள் இருக்கின்றது . அவையாவன TCP, IP, UDP, ARP, DHCP, FTP ஆகும்.

யுனிக் ஐடிடெண்டிஃபையர்ஸ் ஆஃப் நெட்வொர்க்ஸ்.

ஹோஸ்ட் பெயர்.

ஒரு நெட்வொர்க்கில் இருக்கும் ஒவ்வொரு சாதனமும் தனிப்பட்ட பெயரைக் கொண்டுள்ளது.அதுவே ஹோஸ்ட் நேம் என அறியப்படுகின்றது.

கமாண்ட் பிராம்ப்டில் “hostname” என டைப் செய்து எண்டர் தட்டினால் உங்கள் மெசினின் ஹோஸ்ட் பெயர் காட்டப்படும்.








ஐபி அட்ரஸ்(internet protocol address).

இது நெட்வொர்க்கில் இருக்கும் சிஸ்டமின் நெட்வொர்க் அட்ரஸ் ஆகும். இது லாஜிக்கல் முகவரி என்றும் அறியப்படுகின்றது.

இண்டெர்நெட் அசைண்டு நம்பர்ஸ் அதாரிட்டி ஆனது www-வில் இருக்கும் ஒவ்வொரு சிஸ்டத்திற்கும் ஒரு IPV4(VERSION 4) தனிப்பட்ட முகவரியை வழங்குகின்றது.

ஒரு IPV4 முகவரியின் நீளம் 32 பிட் ஆகும் .நமக்கு 232 IP முகவரிகள் தயாராக உள்ளது. ஒரு IPV6 முகவரியின் நீளம் 128 பிட் ஆகும்.

கமாண்ட் பிராம்ப்டில் “ipconfig” என தட்டச்சு செய்து எண்டர் தட்டினால் அதன் ip அட்ரஸ் கிடைக்கும்.

 

MAC Address(media access control address)

இது பிஸிக்கல் அட்ரஸ் எனவும் அறியப்படுகின்றது.இது ஒவ்வொரு ஹோஸ்டிற்கும் தனிப்பட்ட முகவரி ஆகும். இது நெட்வொர்க் இன்டர்ஃபேஸ் கார்டுடன் தொடர்புடையது.mac அட்ரஸ்ஆனது அது தயாரிக்கப்படும் பொழுதே மதிபிருத்தப்படுகின்றது.

Mac அட்ரசின் நீளம்: 12-nibble/ 6 bytes/ 48 bits 

கமாண்ட் பிராம்ப்டில் “ipconfig/all”என டைப் செய்து எண்டர் தட்டினால் mac address கிடைக்கும்.

போர்ட்:

இது ஒரு பயன்பாட்டிற்க்கு டேட்டாவை அனுப்பவோ அல்லது பெறவோ பயன்படும் லாஜிக்கல் சேனல் ஆகும்.

ஒவ்வொரு ஹோஸ்டும் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை பயன்படுத்தலாம்.ஒவ்வொரு பயன்பாடும் வெவ்வேறு போர்ட்  எண்ணை பயன்படுத்தும்.

ஒவ்வொரு போர்ட்டும் 16 பிட் இன்டிஜெர் ஆகும்.

அவற்றின் வகைகள்:

Port Types

Range

Well known Ports

0 – 1023

Registered Ports

1024 – 49151

Ephemeral Ports

49152 – 65535

 

No of ports : 65,536

Range : 0 to 65,535.

கமாண்ட் ப்ராம்ப்டில் “netstat-a” என தட்டச்சு செய்து எண்டர் தட்டினால் பயன்பாட்டில் உள்ள எல்லா போர்ட்டுகளையும் காட்டும்.




 

சாக்கெட்:(socket)

Ip அட்ரஸ் மற்றும் போர்ட் எண் இரண்டும் சேர்ந்த யுனிக் காம்பினேசன் தான் சாக்கெட் ஆகும்.

Dns சர்வர்:

DNS என்பது டொமைன் நேம் சிஸ்டம் ஆகும்.

இது வெப் அட்ரசுகளை ஐபி அட்ரஸாக மொழிபெயர்க்கும் சர்வர் ஆகும்.எனவே ஒவ்வொரு இணைய தளங்களின் ஐபி முகவரியை ஞாகபத்தில் வைத்திருக்க தேவையில்லை.

‘nslookup’ என்ற கமாண்ட் ஆனது நமக்கு வேண்டிய டொமைனின் ip address ஆனதை தருகின்றது.



 

ARP: ADDRESS RESOLUTION PROTOCOL.

இது ஒரு IP அட்ரசை அதனுடன் தொடர்புடைய பிசிக்கல் அட்ரசை ரிடர்ன் செய்கின்றது.அதாவது MAC ADDRESS.

ARP ஆனது டேட்டா லிங்க் லேயரால் பயன்படுத்தப்படுகின்றது.இது ரிசிவர்ஸ் மெசினின் பிசிக்கல் அட்ரசை பெற பயன்படுகின்றது.

RARP:REVERSE ADDRESS RESOLUTION PROTOCOL.

இது ஒரு பிசிக்கல் அட்ரசை IP அட்ரசாக மாற்ற பயன்படுகின்றது.

எனினும் இப்பொழுது DHCP வந்த பிறகு இது பயன்பாட்டில் இல்லை.

நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

PYTHON, JAVA,PHP,C,C++,C#,VB.NET, ASP.NET,JAVASCRIPT, ANGULAR, REACT JS ஆன்லைனில் கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

9629329142


ads Udanz