Thursday, May 7, 2015

ஜாவா 17ம் பாடம்.-CONSTRUCTOR IN JAVA:




ஒரு கிளாஸிற்குள் க்ளாஸ் பெயரிலேயே மெத்தட் எழுதப்படுமாயின் அது CONSTRUCTOR எனப்படுகின்றது.இந்த மெத்தட் ஆனது ஆப்ஜெக்டின் மதிப்புகளை INITIALIZE செய்ய பயன்படுகின்றது.

CONSTRUCTOR ஆனது ஒரு ஆப்ஜெக்டை CREATE செய்யும் போது தானாக CALL ஆகும்.EXPLICIT ஆக CALL செய்ய வேண்டுதில்லை.
CONSTRUCTOR ஆனது எப்போதும் மதிப்புகளை(VALUES)திருப்பி அனுப்புவதில்லை.எனவே CONSTRUCTOR ஆனது எழுதப்படும் போது RETURN TYPE குறிப்பிடப்படுவதில்லை.

CONSTRUCTOR  இரு வகைகள்

பராமீட்டர் பாஸ் செய்யப்படாத CONSTRUCTOR ஆனது DEFAULT CONSTRUCTOR எனப்படுகின்றது.
உதாரணம்.
class Car1
{  
Car1()
{
System.out.println("Car is created");
}  
public static void main(String args[])
{  
Car1 b=new Car1();  
}  
}  

output:
car iscreated

DEFAULT CONSTRUCTOR எழுதப்படாவிட்டாலும் நிரலானது தானாக அதை எழுதிக்க்கொள்ளும்..

பராமீட்டர் PASS செய்யப்படும் CONSTRUCTORS ஆனது PARAMETERIZED CONSTRUCTOR எனப்படுகின்றது.
உதாரணம்.
class Employee
{  
    int id;  
    String name;  
      
    Employee (int i,String n)
{  
    id = i;  
    name = n;  
 }  
    void display()
{
System.out.println(id+" "+name);
}  
   
    public static void main(String args[])
  {  
Employee s1 = new Employee (111,"ram");  
Employee s2 = new Employee (222,"latha");  
 s1.display();  
 s2.display();  
   }  
}  
output:
111 ram
222 latha


நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.


மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:


91 96293 29142

ads Udanz

2 comments: