Saturday, November 12, 2011

php ஒரு அறிமுகம்.



Php  என்பது server side script  language ஆகும்.
இது ஒரு கட்டற்ற மென் பொருள் .
(open source software).
நிறைய database களை ஆதரித்தாலும் mysql  உடன்  அதிகம் பயன் படுத்தப் ப்டுகின்றது.
Php files  என்பது html மற்றும் script ஆகிய வற்றின் கலவையாகும்.
<HTML>
<HEAD>Sample PHP Script</HEAD>
<BODY>
The following prints "Hello, World":
<?php
    print "Hello, World";
?>
</BODY>
</HTML>
மேலே உள்ள நிரலில் <?php  மற்றும் ?> இடையே  உள்ள வ்ரிகள் php interprter ல் இயக்கப்ப்ட்டு plain html ஆக மாற்றப்ப்ட்டு பின் கீழ் வரும் படி உலாவியால் வெளியீடு செய்யப்ப்டுகின்றது.
The following prints "Hello, World":
Hello, World
Php மொழியானது பெரும் பாலும் c மொழியின் இலக்கிணத்தை ஒற்று வ்ருவதால் புதியவர்களால் எளிதாக கற்க முடியும்.


Comments(குறிப்பு வரிகள்)
Comments ஆனது ஒரு நிரலின் இயக்கம் பற்றி நிரலாளரால் எழுதப்படும் வரிகளாகும். இவை interpreter ல் இயக்கப்படாது.
Phpல் single line comment
// this is a comment
அல்லது
#this is also a comment
என்றோ எழுதப் படுகிறது.
Multi line comments:
/* this is a
Multi
Line comment  */
என்று /* மற்றும் */ இடையே எழுதப் படுகிறது.
மாறிகள்(variables)
Php ல் மாறிகள் weekly typed  மாறிகளாக உள்ளது.
அதாவது மாறிகள் உபயோகிக்கும் முன் அறிவிக்கப்படுவதில்லை. அவை assign செய்யப்படும் மதிப்புகளுக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்கின்றது.
என்வே தான் அவை weekly typed  variables ஆக உள்ளது.
மாறிகளின் naming rules மற்ற மொழிகளைப் போலவே. எனிதும் இது $ குறியீட்டுடன்  ஆரம்பிக்கிறது. அதற்கு அடுத்து வருவது alphabet ஆகவோ அல்லது _(underscore) ஆகவோ இருக்கலாம்.மற்ற எழுத்துக்கள் alphabet அல்லதுnumeric அல்லது underscore ஆக இருக்கலாம் space வரக் கூடாது. . முற்றுப் புள்ளி வரக் கூடாது.
இரண்டு வார்த்தைகளாக வரும் பொழுது _ஆல் இணைக்கப்படலாம் அல்லது இரண்டாவது வார்த்தை capital letterல் ஆரம்பிக்கலாம்.
உதாரணம்:
$total_salary அல்லது $totalSalary.
--தொடரும்


ads Udanz

3 comments:

  1. ta.indli.com, tamil10.com ஓட்டுப் பட்டைகளை உங்கள் வலைப்பூவில் இணையுங்கள். அப்போதுதான் அதிகமான வாசகர்களைச் சென்றடையும்.

    ReplyDelete
  2. good job muthu.post more about php it will be useful...

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete