Saturday, March 17, 2018

போட்டாசாப்பில் ஒரு படத்திற்கு பார்டர் வரைவது எப்படி?



முதலில் போட்டாசாப் சென்று file->open செய்து ஒரு படத்தை கிளிக் செய்யவும். பின் image -> duplicate செய்யவும் . இப்பொழுது காபி செய்யப்பட்ட படத்தை விட்டு விட்டு ஒரிஜினல் படத்தை மூடி விடவும்.
ரெக்டாங்கில்  மார்க்யூ டூல் செலெக்ட் செய்து முழுப்படத்தையும் செலெட் செய்யவும்.
பின் டூல் பாரில் உள்ள ஆப்சன் பாரில் subtract selection தேர்வு செய்து மேற்புறம், வலது புறம், இடது புறம், கீழ் புறம் மார்ஜின் விட்ட் செலெக்ட் செய்யவும்.
இப்பொழு டூல் பாக்ஸில் உள்ள பிரஸ் டூல் செலெக்ட் செய்யவும். ஒரு குறிப்பிட்ட நிறத்தை தேர்ந்தெடுத்து படத்தின் மேல் தடவவும்.
பின் ctrl+d கீயை பிரஸ் செய்து செலக்சனை கிளியர் செய்யவும்.

நன்றி
-முத்து கார்த்திகேயன்,மதுரை

ads Udanz

கோரல் டிராவில் சிறிய ரங்கோலி வரைவது எப்படி?



முதலில் கோரல் டிராவில் எல்லிப்ஸ் டூலை செலெக்ட் செய்து எலிப்ஸ் வரையவும்.அதற்குள் ஏதாவது கலர் ஃபில் செய்யவும்
பின் arrange மெனு சென்று transformations  என்பதில் rotate செலெக்ட் செய்யவும்.Angle என்பதில் 30 டிகிரியும் காப்பிஸ் என்பதில் 5 கொடுத்து Apply கிளிக் செய்யவும்.
இப்போது பிக் டூல் உபயொகித்து ஆறு எலிப்ஸையும் மொத்தமாக செலெக்ட் செய்யவும்.
Arrange-> combine  செய்தால் வெளியீடு கீழே உள்ள வாறு இருக்கும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

ஜாவாவும் மல்டிதிரட்டிங்கும்(பகுதி-6)



கீழே உள்ள நிரலில் இரண்டு சைல்ட் திரட்டுகள் உருவாக்கப் பட்டுள்ளது.
இரண்டு சைல் திரட்டுகளும் ஒரு மெயின் திரட்டும் சிபியூவின் மெமரியை பங்கீட்டுக் கொள்கின்றன. மெயின் திரட்டானது 6 செகண்டிற்கு சிலீப் செய்கின்றது.
package multiplethread;
class newThreadClass implements Runnable
{
    String ThreadName;
    newThreadClass(String name)
    {
        ThreadName=name;
        Thread t=new Thread(this,ThreadName);
        System.out.println("thread created: "+t);
        t.start();
    }
    public void run()
    {
        try
        {
            for(int i=1;i<=5;i++)
            {
                System.out.println(ThreadName +"loop"+i);
                Thread.sleep(2000) ;
            }
        }
        catch(InterruptedException e)
        {
            System.out.println("thread: "+ThreadName+ "interrupted");
        }
        System.out.println(ThreadName+" is exiting");
               
   }
}

public class MultipleThread {

  
    public static void main(String[] args) {
        new newThreadClass("first child thread");
        new newThreadClass("second child thread");
        try
        {
            for(int i=1;i<=5;i++)
            {
                System.out.println("Main thread loop"+i);
               
                Thread.sleep(6000) ;
            }
        }
        catch(InterruptedException e)
        {
            System.out.println("main thread interrupted");
        }
        System.out.println("main thread exiting");
    }
   
}
வெளியீடு:
run:
thread created: Thread[first child thread,5,main]
thread created: Thread[second child thread,5,main]
first child threadloop1
Main thread loop1
second child threadloop1
first child threadloop2
second child threadloop2
first child threadloop3
second child threadloop3
Main thread loop2
first child threadloop4
second child threadloop4
second child threadloop5
first child threadloop5
first child thread is exiting
second child thread is exiting
Main thread loop3
Main thread loop4
Main thread loop5
main thread exiting
BUILD SUCCESSFUL (total time: 30 seconds)
 
தொடரும்.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

ஜாவாவும் மல்டி திரட்டிங்கும்.-பகுதி-5.



திரட் கிளாஸ் உபயோகித்து எவ்வாற்று மல்டி திரட்டிங்க் செய்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம். ஒரு கிளாஸ் ஆனது வேறெந்த கிளாசையும் இன்ஹெரிட் செய்யாத பட்சத்தில் நாம் Thread கிளாசை இன்ஹெரிட் செய்து மல்டி திரட் செய்யலாம். அதற்கு நம் கோடிங்கில் run() மெத்டை ஓவர்ரைட் செய்யலாம்.

package threaddemoclass;
class ThreadDemo extends Thread
{
    ThreadDemo()
    {
        super("ChildThread");
        System.out.println("ChildThread: "+this);
        start();
    }
        public void run()
        {
            System.out.println("The child thread started");
            System.out.println("The child thread exiting");
        }
    }


public class ThreadDemoClass {

    /**
     * @param args the command line arguments
     */
    public static void main(String[] args) {
       new ThreadDemo();
       System.out.println("the mainThread Started");
       System.out.println("the main thread sleeping");
       try
       {
           Thread.sleep(3000);
          
       }
       catch(InterruptedException e)
       {
           System.out.println("the main thread interrupted");
       }
       System.out.println("main thread exiting");
   
}
}
வெளியீடு:
run:
ChildThread: Thread[ChildThread,5,main]
the mainThread Started
the main thread sleeping
The child thread started
The child thread exiting
main thread exiting
BUILD SUCCESSFUL (total time: 3 seconds)

ads Udanz

Friday, March 16, 2018

Ms-excel-ல் பைவட் டேபிள் எதற்கு பயன்படுகின்றது?



நாம் எக்சலில் டைப் செய்கின்ற தகவல்களை நம் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மாற்றி அமைத்து வெளிப்படுத்துவதே பைவட் டேபிள் ஆகும். சான்றாக கீழே உள்ள படி நாம் டைப் செய்து  வைத்துள்ளதாக எடுத்துக் கொள்வோம்.








டேட்டாவை செலக்ட் செய்து கொண்டு இன்செர்ட்ப் டேப்பில் உள்ள பைவட் டேபிள் என்பதை செலெக்ட் செய்வோம். பின் வரும் டயலாக் பாக்சில் ஒகே கொடுக்கவும்.
அதில் நாம் name, place மட்டும் செய்தோம் ஆனால் வெளியீடு பின் வருமாறு இருக்கும். இப்பொழுது  month, sales என்றோ அல்லது place, sales என்றோ மாற்றி கிளிக் செய்து அதற்கேற்றாற் போல் நம் அவுட்புட்டை மாற்றி அமைக்கலாம்.




 நன்றி 
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz