Showing posts with label computer science. Show all posts
Showing posts with label computer science. Show all posts

Sunday, October 8, 2017

கணினி அறிவியல் கற்றதும் பயன் பெற்றதும்.-பகுதி-2


-------------------------------------------------------------------முத்து கார்த்திகேயன்,மதுரை.

API  என்றால் என்ன?

வெகு நாட்களாக இதைப் பற்றி அறிய வேண்டும் என எண்ணியிருந்தேன்.
அது தான் கூகிள் இருக்கின்றதே அதில் சியர்ச்(search)செய்தேன்.

பதிலாக webobedia.com –ல் பின் வரும் படி ரிசல்ட் இருந்தது.

An  application program interface (API) is a set of routinesprotocols, and tools for building software applications. Basically, an API specifies how software components should interact. Additionally, APIs are used when programming graphical user interface (GUI) components. A good API makes it easier to develop a program by providing all the building blocks. A programmer then puts the blocks together.

சற்று புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

காலிங் பெல்லை யாரோ அழுத்தும் சத்தம் கேட்டது.

கதவை திறந்த பொழுது சரவணன் நின்றிருந்தான்.

வார்ரே வா சரியான சமயத்தில் தான் வந்திருக்கின்றான்.

புன்ன்னகையுடன் அவனை வரவேற்றேன்.

“என்னடா பிசியா” என்றான்.

“அதெல்லாம் ஒன்றில்லை . API பற்றி நீ அறிந்த விசயங்களை சொல்லேன்” என்றேன்.

“எந்த API” என்றவன் “ஓ அப்ளிகேசன் ப்ரோக்ராமிங் இண்டர்பேசா?” என்றான்

“ஆம் “

“ஒகே நாம் இப்பொழுது இணையத்தில் ஏர்லைன் டிக்கட் புக் பண்ணுகின்றோம். அதற்கு  எல்லோரும் ஒரே இணைய தளத்தை நாடுவதில்லை. வெவேறு இணைய தளத்தில் புக் செய்கின்றோம். ஆனால் இணைய தளத்திலும் ஏர்லைனுக்கு கனக்டிவிட்டி கிடைக்கின்றதே அது எவ்வாறு என்று யோசித்தாயா?”

“ஆம்”

“இப்பொழுது சில இணைய தளங்களில் நுழைகின்றோம்.SIGN UP கேட்கும். பெயர்,இமெய்ல் ஐடி போன்றவை கொடுத்து SIGN UP செய்யலாம். ஆனால் அதே இணைய தளத்தில்  வேறு சில ஆப்சன்களும் இருக்கலாம் . அவையாவன ‘SIGN UP USING GOOGLE’ அல்லது ‘SIGN UP USING FACEBOOK’ போன்று. “

“ஆம்”

“GOOGLE என்பது  மிகப்பெரிய இணைய தளம். அதில் லாக் இன் செய்தால் ஜிமெய்ல், யூ டியூப், என எல்லாவற்றிற்கும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொழுது மற்றொரு இணைய தளத்திலிருந்து ‘login using gmail’என்றால் கூகிளில் நீங்கள் கொடுத்த விவரப்படி அந்த வெப் சைட் உங்களை அதற்குள் நுழைய அனுமதிக்கின்றது.”

“ஆமாம்”

“இது எல்லாமே API-யின் உதவியால் தான் ஏர் டிக்கட்  புக் செய்வதிலிருந்து ஒரு வெப் சைட்டில் கூகுள் அக்கவுண்டை பயன் படுத்தி  உங்களை ஆதண்டிகேட் செய்வது இது எல்லாமே அதன்படி தான்.”

“ஓ”

“இப்பொழுது API KEY என்றால் என்னவென்றால் ஒரு வெப் சைட்டில் நுழைந்து ‘ஹாய் கூகிள் நான் இந்த இணைய தளத்தில் நுழைய உன் உதவி தேவைப் படுகின்றது’.என்கின்றோம் அதுவும் அதன் டேட்டா பேசை பயன்படுத்தி உங்களை அந்த மூன்றாவது நபர் வெப் சைட்டில் நுழைய ஆதண்டிகேட் செய்கின்றது.இது தான் ஏபிஐ.”

“இப்பொழுது புரிகின்றது”

“இன்னும் விளங்கச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். அதாவது API  என்பது நமக்குச் சம்பந்தம் இல்லாத தனி கோடிங் . இது மற்றவர்களால் எழுதப்பட்டது. ஆனால் இதை யார் வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். அது எவ்வாறு எழுதப்ப்ட்டுள்ளது என்பதெல்லாம் நமக்கு தேவையில்லை. ஆனால் அதை பயன் படுத்தி கொள்கின்றோம்.

கூகிள் லாக் இன் போன்று. இது தான் API. “

“காஃபி சாப்பிடு” என்று அவனிடம் காஃபி கப்பை நீட்டினேன்.

பெற்றுக் கொண்ட அவன் மேலும் பேச ஆரம்பித்தான்.

“இப்பொழுது நீங்கள் ஒரு மொபைல் அப்ளிகேசனாய் வெதர் அப்ளிகேசன் உருவாக்குகிறீர்கள். அதற்கு நீங்கள் சாட்டிலைட்டை தொடர்பு கொண்டு அதற்கென கோடிங் எழுத வேண்டும் எண்ற அவசியமில்லை. ஏற்கனவே வேறு யாராவது ஒருவர் அதற்கெனே கோடிங்கை எழுதியிருப்பார். அது தான் API  .சிலவற்றை இலவசமாய் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் அது அன்றி  பணம் கொடுத்தும் உபயொகப் படுத்திக் கொள்ளலாம். காஃபிக்கு ந்ன்றி நான் கிளம்புகின்றேன்” என சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

நானும் தெளிவான ஒரு புரிதலுடன் அவனுக்கு விடை கொடுத்தேன்.

-----தொடரும்.
நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.
மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:
91 96293 29142
ads
Udanz
   
ads Udanz

Saturday, October 7, 2017

கணினி அறிவியல் கற்றதும் பயன் பெற்றதும். ---பகுதி-1


இனியதொரு மாலைப்பொழுதினில் தேநீரைச் சுவைத்தபடியே லேப்டாப்பில் ப்ரவுஸ் செய்து கொண்டிருந்தேன். திடீரென இண்டர்நெட் கனக்டிவிட்டி ஐகானில் கிராஸ் மார்க் காட்டியது. நெட்டில் ப்ரவுஸ் செய்ய இயல வில்லை
லேன் கேபிள் மாற்றிப்பார்த்தேன்.என்னுடைய கனெக்சன் டைப் ADSL ஆகும்.
பிசியில் (pc) கனெக்டிவிட்டி சரியாக இருந்தது. கஸ்டமர் கேர் செண்டரை அனுகிய பொழுது அவர்கள் பக்கத்திலிருந்து எந்த பிழையும் இல்லை என்று கூறி விட்டார்கள். எனக்கும் அது நன்றாகத் தெரியும். ஏனென்றால் பிசியில் ஆக்சஸ் சரியாக இருக்கின்றதே. ட்ரபிள் ஷூட்டிங் செய்த பொழுது system diagnostics policy service not running என பிழை சுட்டப்பட்டது.
இதை எவ்வாறு இயங்க வைப்பது என்று பிசியில் ப்ரவுஸ் செய்த பொழுது விண்டோஸ் +R பட்டனை  ப்ரஸ் செய்து services.msc என கொடுக்குமாறும் அதன் பிறகு வரும் விண்டோவில் system diagnostics policy service-ல் வலது க்ளிக் செய்து ஸ்டார்ட் ஆப்சனை க்ளிக் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. அது போல் செய்த பொழுது Error no:5 access denied எனக்காட்டியது. மேலும் ப்ரவுஸ் செய்த பொழுது அட்மினிஸ்ரட்டர் அக்கவிண்டில் லாக் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. என்னுடைய அக்கவுண்ட் டைப்பை சோதித்த போது அது ஏற்கனவே அட்னிஸ்ரட்டர் டைப் எனத்தெரிந்தது. Error no5 தொடர்பாக குறிப்பிட்டப்ளாக் போஸ்டிங்குகளை ரீட் செய்ய இண்டர்னெட்டில் வ்ழி கூறப்பட்டிருந்தது,எனக்கு கிர் என்று தலை சுற்றியது.
இது போன்ற விஷயங்களில் எக்ஸ்பெர்ட் ஆன சினேகாவை அழைத்த பொழுது அவள்
“ஸிம்பிள், கணினியை ரீஸ்டோர் செய் சரியாய் போய்விடும் “ என்றாள்.
சிஸ்டம் ரீஸ்டோர்(System Restore) என்பது குறிப்பிட்ட கடந்த கால எல்லைக்கு கணினியை இட்டுச் செல்தல் ஆகும்.குறிப்பாக ஏதாவது சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் பொழுது சிஸ்டம் தானாகவே ரீஸ்டோர் பாயிண்ட்களை உருவாக்கும். இன்ஸ்டாலேசனில் சிஸ்டத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் கணினியை பழைய நிலைக்கு ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.
ரீஸ்டோர் செய்ய அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்டிற்கு மாறிக்கொள்ளவும்.
பிறகு கன்ட்ரோல் பேனல் சென்று System and security என்பதை க்ளிக் செய்யவும்.பிறகு System என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது சிஸ்டம் ப்ரடக்சன் என்பதை க்ளிக் செய்து அதில் restore என்ற பட்டனை க்ளிக் செய்யவும். நமக்கு இப்பொழுது பழைய ரீஸ்டோர் பாய்ண்ட்கள் காட்டப்படும். நாம் விரும்பிய பாயிண்டை க்ளிக் செய்து  பழைய நிலைக்கு செல்லலாம்.
(எச்சரிக்கை:ரீஸ்டோர் செயத பாய்ண்டிற்கு பிறகு நாம் உருவாக்கிய ஃபைல்கள் யாவும் அழிந்து போகும். சிஸ்டம் செட்டிங்கும் மாறி விடும்)
மேற்கண்ட முறையை நான் பின்பற்றிய பொழுது எனக்கு நெட் கனக்டிவிட்டி மீண்டும் கிடைத்தது.
சினேகாவிற்கு நன்றி  கூறிவிட்டு நான் நெட்டில் மீண்டும் ப்ரவுசிங்கை தொடர்ந்தேன்.

-------நன்றி முத்து கார்த்திகேயன் மதுரை
ads Udanz