நோட்.ஜெ எஸ் என்பது ரன் டைம் என்விரான்மெண்ட் மற்றும்
ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி இரண்டும் சேர்ந்ததாகும். இது கிராஸ் ப்ளாட்ஃபார்ம் ஆகும்.
இது சர்வர் சைட் மற்றும் நெட்வொர்க்கிங் வெப் அப்ளிகேசன்கள்
உருவாக்கப்பயன்படுகின்றது.
இது ஓபன் சோர்ஸ் மற்றும்
இலவசமானதாகும்.
Node.js-ன் பெரும்பாலான
மாடூல்கள் ஜாவாஸ்கிரிப்டிலேயே எழுதப்பட்டுள்ளது. இது ரியல் டைம் சர்வர் அப்ளிகேசன்களை
இயக்கப் பயன்படுகின்றது..
Node.js என்பது க்ரோமின் ஜாவாஸ்கிரிப்ட் ரன் டைம் ஆகும். இது
விரைவாகவும் மேம்பட்டதும் ஆன நெட் வொர்க்
அப்ளிகேசன்களை உருவாக்கப் பயன்படுகின்றது.
இது ஈவண்ட் டிரைவன் மற்றும் நான்-பிளாக்கிங் இன்புட்/அவுட்புட் மாடல் ஆகும்.
இது லைட் வெய்ட் மற்றும் திறன் வாய்த்ததாகும் மற்றும் பல்வேறு
சாதனகளில் இயங்கக் கூடிய டேட்டா ரியல் டைம் அப்ளிகேசன்கள் உருவாக்க
தேர்ந்த்டுக்கலாம்.
ஆகவே NODE.JS ஜாவாஸ்கிரிப்ட் மாடூல்களின் லைப்ரரி தொகுப்பு
மற்றும் ரன் டைம் என்விரான்மெண்ட் ஆகும்.
Node.js = Runtime Environment + JavaScript Library
Node.js-ன் தன்மைகள்
மிகவும் வேகமானதாகும்.
இது I/O ஆனது synchronous மற்றும் ஈவண்ட் டிரைவன் ஆகும்.
இது சிங்கிள் திரட் மற்றும் ஈவண்ட் லூ[ப்பிங்குடன் கூடியதாகும்
இது மேம்பட்டதாகும்.
Node.js அப்ளிகேசன்கள் எந்த டேட்டாவையும் பஃபர் செய்வது
கிடையாது.
இது ஒபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் ஆகும்.
இது MIT லைசன்ஸின் கீழ் ரிலீஸ் செய்யப் பட்டுள்ளது.
Node.js எவ்வாறு நிறுவுவது.?
இதை உபயோகிப்பதற்கு இரண்டு மென் பொருட்கள் தேவைப் படுகின்றது.
1. டெக்ஸ்ட்
எடிட்டர்.
2. நிறுவப்பட்ட
நோட்.ஜெஎஸ் மென்பொருள்.
இதற்கு nodepad++ ,visual studio code
போன்ற எடிட்டர்கள் தேவைப்படுகின்றது. ஒரு டெக்ஸ்ட் எடிட்டரின் பெயரானது
ஆபரேட்டிங்க் சிஸ்டத்திற்கு ஏற்ப்ட்ட மாறுபடும்.
டெக்ஸ்ட் எடிட்டரில் நாம் எழுதும் ஃபைல்கள்
சோர்ஸ் கோட் கொண்ட சோர்ஸ் ஃபைல் ஆகும். Node.js-ல் நாம் உருவாக்கும் ஃபைல்கள் js
என்கின்ற நீட்சியுடன் சேவ் செய்யப்படுகின்றது.
The Node.js Runtime:
ஜாவா ஸ்கிரிட்டில் எழுதப்பட்ட சோர்ஸ் கோட் ஆனது நோட்.ஜெ
எஸ்ஸால் இண்டர்பிரட் செய்து இயக்கப் படுகின்றது.
இதற்கு இணைய தளத்தில் கீழ்கண்ட முகவரியை டைப் செய்யவும்
கீழே உள்ள படம் தோன்றும்.
தேவையான பதிப்பை தேர்வு செய்து பதிவிரக்கிக் கொள்ளவும்..
Accept the terms of license agreement.
Choose the location where you want to install.
Ready to install:
Node.js முதல் உதாரணம்.
Node.js –ல் நாம் உருவாக்கும் அப்ளிகேசன்கள் கன்சோல் அடிப்படையிலோ
அல்லது வெப் அடிபடையிலோ இருக்கலாம்.
Node.js console-based Example
டெக்ஸ்ட் எடிட்டரில் கீழ்கண்டவாறு கோடிங் எழுதி அதை
console_example.js என்ற பெயரில் சேவ் செய்து கொள்ளவும்.
console.log('Hello JavaTpoint');
Node.js கமாண்ட்
பிராம்ப்டை ஓபன் செய்து பின்வருமாறு கோடிந் எழுதவும்.
- node console_example1.js
-
மேலே உள்ள நிரலில் console.log என்பது டெக்ஸ்டை கன்சோலில்
பிரிண்ட் செய்ய பயன்படுகின்றது.
Node.js web-based Example
ஒரு வெப் அடிப்படையிலான அப்ளிகேசன் ஆனது மூன்று பகுதிகளை
கொண்டுள்ளது.
1.
தேவைப்படும் லைப்ரரி மாடூலை இம்போர்ட் செய்து கொள்ளவும் அதற்கு
require என்கின்ற டைரெக்டிவ் பயன்படுகின்றது.
2.
3.
கிளையண்ட் ரெகுவஸ்டிற்கு பதிலளிக்கக் கூடிய சர்வரை உருவாக்க
வேண்டும்.
4.
உருவாக்கப்பட்ட சர்வர் ஆனது http request –ஆனதை படித்து
கன்சோலிலோ அல்லது வெப் பிரவுசரிலோ பதிலளிக்கும்.
How to create node.js web
applications
Follow these steps:
முதலில் http என்கின்ற
மாடூலை பயன்படுத்தி அதை http என்கின்ற வேரியபிளில் ஸ்டோர் செய்யவும்.
உதாரணம்.
- var http = require("http");
இரண்டாவது சர்வரை உருவாக்குவதாகும். http.createServer()
என்கின்ற
மெதடை அழைத்து அதை போர்ட் எண் 8081 உடன் பைண்ட் செய்து கொள்ளவும்.request மற்றும்
response பராமீட்டர்களுடன் அழைத்து உதாரணத்திற்கு hello world என்பதை ரிடர்ன்
செய்யுமாறு கீழ்கண்டவாறு எழுதவும்:
http.createServer(function (request, response) {
// Send the HTTP header
// HTTP Status: 200 : OK
// Content Type: text/plain
response.writeHead(200, {'Content-Type': 'text/plain'});
// Send the response body as "Hello World"
response.end('Hello World\n');
}).listen(8081);
// Console will print the message
console.log('Server running at http://127.0.0.1:8081/');
- முதல் மற்றும் இரண்டாவது பகுதிகளை ஒன்றினைத்து main.js
என்கின்ற பெயரில் நிரல் எழுதி சேமிக்கவும்.
var http = require("http");
http.createServer(function (request, response) {
// Send the HTTP header
// HTTP Status: 200 : OK
// Content Type: text/plain
response.writeHead(200, {'Content-Type': 'text/plain'});
// Send the response body as "Hello World"
response.end('Hello World\n');
}).listen(8081);
// Console will print the message
console.log('Server running at http://127.0.0.1:8081/');
How to start your server:
Node.js command prompt செல்லவும்..
Now command prompt is open:
டெக்ஸ்டாப்பில் main.js என்கின்ற
ஃபைல் இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.
முதலில் டெக்ஸ்டாப்பிற்கு மூவ்
செய்யவும்.
பிறகு கீழ்கண்டவாறு டைப் செய்யவும்.
- node main.js
-
இப்பொழுது சர்வர் ஸ்டார்ட் ஆகும்.
main.js என்ற ஃபைலில் ஏதாவது மாறுதல் செய்தால் மீண்டும் node main.js
என கமாண்ட் பிராம்ப்டில் டைப் செய்து இயக்க வேண்டி இருக்கும்.
-முத்து கார்த்திகேயன்,மதுரை.