Wednesday, September 21, 2011

யு.எஸ்.பி மோடை (usb mode) டிசேபிள் செய்வது எப்படி?


1. start பட்டனை க்ளிக் செய்யவும்.
2.Run  ஆப்சனை தேர்வு செய்து கொள்ளவும்.
3.Run விண்டோவில் regedit என தட்டச்சு செய்து எண்டர் கீயை அழுத்தவும்.
4.Registry editor விண்டோவில் என்பதை க்ளிக் செய்யவும்.
5.வலது பக்க பேனலில் தோன்றும் start என்பதை க்ளிக் செய்து, திரையில் தோன்றும் value data  என்ற பாக்சில்  4 என்ற எண்ணை தட்டச்சு செய்யவும்.
6.Ok பட்டனை க்ளிக் செய்யவும்.
7.ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விடவும்.


ads Udanz

Tuesday, September 20, 2011

ஃபயர்வால் என்றால் என்ன?

ஃபயர்வால் என்பது நமது local networkகிற்கும் internetகிற்கும் இடையே உள்ள
ஒரு மென் பொருள் ஆகும்.
இது ட்ரோஜன்ஸ் ,ஹேக்கர்ஸ் போன்ற பொதுவான இன்டர்நெட் தாக்குதலை தவிர்க்கப் பயன் படுகின்ற்து.நமது லோக்கல் நெட்வொர்க்கிர்க்குல் தடைசெய்யப்பட்ட வெப் சைட்கள் உள் வருவதை தவிர்க்கிரது.
எனினும் இது போதுமான் பாதுகாப்பை தரவல்லதல்ல.
சில மேன்மை வாய்ந்த ஃபயர்வால் சாப்ட்வேர்களும் உள்ளன.. நவீன routers எல்லாவற்றிலும் உள்ளினைந்த ஃபயர்வால்கள் உள்ளன. எனினும் பெரும்பாலும் அவை பொதுவான அடிப்படை தாக்குதலிருந்து தடுக்கவே பயன் படுகின்றது. ads Udanz

டாட் நெட்டின் அந்திம காலம்?




சில வாரங்களுக்கு முன்னால் மைக்ரோ  சாஃப்ட் நிறுவனம் தனது windows 8 பற்றிய அறிவிப்பை வெலியிட்டது. அதில் windows 8 உடைய பயன்பாடுகள் html மற்றும் javascript ஆகிய மொழிகளில் உருவாக்கப் படும் என்றும்  அறிவித்தது. அப்படியென்றால் டாட் நெட்டில் அவை உருவாக்கப்படாதா ? என்றும் டாட் நெட் ப்ரொக்ராமர்களின் எதிர்காலம் என்னவென்றும் பல வித கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
மைப்ரோசஃப்ட் நிறுவனம் அமைதி காக்கிறது. ஆனால் டாட் நெட் ப்ரோக்ராமர்களின் நிலை அப்படியொன்றும் மோசமில்லையென்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து கசிய வரும் தகவல்கள் தெரிவிப்பதாக ஆங்கில  இணைய தளங்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றது.
முதலில் டாட் நெட் பற்றிய வரலாறு காண்போம்.
டாட் நெட் கண்டு பிடிப்பதற்கு முன்னால்  windows பயன்பாடுகள் win32API மற்றும் சி++ பயன் படுத்தி உருவாக்கப் பட்டன. இடை முகப்பு ,பிணைய  தகவல் தொடர்பு, தகவல் தள தொடர்பு என்று நிறைய நல்ல விசயங்கள் இருந்த போதும் எல்லாவற்றையும் இணைத்து GUI ஆக உருவாக்குவது அவ்வளவு எளிது இல்லை. இதை மாற்ற MFC போன்ற library ஃபைல்கள்  உருவாக்கப்பட்ட போதும் GUI உருவாத்துவது கடினமாகவே இருந்தது.
இதற்கிடையே விசுவல் பேசிக் அறிமுகப் படுத்தப் பட்டது. GUI மற்றும் தகவல் தள தொடர்பு என எல்லாமே எளிதானது.எனினும் win32API function களை அழைப்பு போன்றவை மிகவும் குறைவாகவே support செய்தது. மேலும் விசுவல் பேசிக் முழுமையான பொருள் நோக்க நிரலாக்கமன்று.  அது ஒரு பொருள் சார்ந்த மொழியேயாகும்.
அதற்குப் பின் டாட் நெட் அறிமுகப்படுத்தப்பட்டது. விசுவல் பேசிக்கின் GUI மற்றும்தகவல் தள தொடர்பு என எல்லா நன்மைகளும் இதிலும் இருத்தது. Win32 API ஃப்ங்ஷன்களை அணுகுவதும்எளிதானது. இதற்கிடையே windows frame work போல் dotnet frame work அறிமுகப்படுத்தப் ப்ட்டது.
Windows xp அறிமுகப் படுத்தப் பட்டது. அதற்குப் பின் windows xp service pack2 வெளியானது. அதற்க்கும் பின் VISTA OS வெலியானது. விஸ்டாவில் முற்றிலும் windows frame work வானது windows presentation foundation என முழுமையாக  செயல் படுத்தப் பட்டது.விஸ்டாவிலும் windows 7 லும் media centreக்கு மட்டுமே dotnet code பயன் படுத்தப் பட்டது. மற்ற எல்லாமே பழைய win32API  தான் win32API  update செய்யப் பட்டு நிறைவ் அடிப்படை விஷயங்கள் உட்புகுத்தப் பட்டன. ஆனால் இவை எதுவுமே wpfல் செயல் பட வில்லை.
அதற்கான காரணங்கள், எல்லாவற்றையுமே டாட் நெட்டில் எழுத நேரமில்லை. மற்றொரு காரணம் Microsoft இரு பிரிவுகளாக இருத்தும் ஆகும் .microsoftன் இரு பிரிவுகள் விண்டோஸ்  os வெளியிடும் windiv மற்றும் டாட் நெட் வெளியிடும்
Devdiv ஆகும். நாம் நிணைப்பது போல் இவை  இரண்டும் ஒத்து செயல் பட வில்லை.
Wpf c# மற்றும் vb யில் மட்டுமே நன்றாக செயல் பட்டது. C++ல் அல்ல.microsoftன் எதிர் காலமே டாட் நெட் என இருத்தது எப்போது மாறியது. Micro softஆல் wpf பயன் படுத்தி core operating system பயன் பாடுகளை உருவாக்க முடிய வில்லை. மற்றும் devdevன் நோக்கம் dotnetல் core functionality சேர்ப்பதும்  சில்வர் லைட் போன்ற கருவிகளை உருவாக்குவதிலும் இருந்தது. Windivன் நோக்கமோ C++ன் compatibilityயிலும் உறுதியான codings உருவாக்குவதிலும் சில தொழில் னுட்ப விஷயங்க்களை எதிர் நோக்குவதிலுமே இருந்தது. Win divனின் எதிர்ப்பர்ப்புகளை dev div நிகர்த்தி செய்யாததால் இரண்டும் ஒத்து செயல் பட வில்லை.
அதற்கு பின் வந்த டாட் நெட் பதிப்புகள் windivன் எதிர்பர்ப்புகளை சரி செய்தாலும் சி++ பற்றிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட வில்லை. இவை windivக்கு devdiv மேல் அதிருப்தியை ஏறப்படுத்தின. எனவே அதற்கடுத்து வந்த விண்டோஸ் 7ம் மீடியா சென்டருக்கு மட்டும் டாட் நெட்டை பயன் படுத்தின. விண்டோஸ்ன் புதிய APIகள் native c++ APIகள் ஆகும். மீண்டும் அதே குறைபாடுகள். சி++  நிரல்களால் WPF பயன் படுத்தி வெக்டொர் அடிப்படையிலான interfaceகளை உருவாக்க முடிய வில்லை.
விண்டோஸ் 8 இவை எல்லாவறையும் நிகர்த்தி செய்யும்.
விண்டோஸ் 8 இரண்டு ரண்டைம்(run time)களை கொண்டிருக்கும். அவை புதிய டாட் நெட் ரன் டைம்(.Net 4.5) மற்றும் native c++ (மேம் படுத்த்ப் பட்ட com)ரன் டைம்(win rt என அழைக்கப்படும்)  ஆகியவை ஆகும். புதிய interface library, DirectUI உருவாக்கப்படும். சில்வர் லைட்டின் புதிய பதிப்பு Jupiter ,DirectUI க்கு மேல் இயங்கும். Winrt மற்ற்ம் DirectUI ஆகியவை .நெட்டால் அழைக்கப்பட முடியும்.
Winrtயானது win32APIஇன் நவீன பதிப்பேயாகும்.DirectUIயானது wpf/silverlight தொழில் நுட்பத்தின் கீழ் அடங்கும் .இது XAMLயை ஆதரிக்கும். XMLஅடிப்படையிலான interfaceபகளையும்,இதற்கு முன்னால் வின்32API  ஆதரிக்காத layoutகளையும் ஆதரிக்கும்.
DirectUI யானது சி++ மூலம் வெக்டார் அடிப்படையிலான நவீன intefaceகளை உருவாக்கப் பயன்படும்.டாட் நெட் நிரலாளர்களும் இவற்றையே பயன் படுத்துவர்.
ஜுபிடர் என்பது சில்வர் லைட்டின் ஆறாவது பதிப்பேயாகும், ஜுபிடருக்கும் டைரக்ட்யுஐக்கும் என்ன சம்பந்தம் என்பது இது வரை தெளிவாக்கப்பட வில்லை.
XAML மற்ற்ம் WPF மாதிரியான சில்வர் லைட் போன்ற GUIகளே விண்டோஸ் பயன்பாடுகளுக்கு  எதிர் காலத்தில் பயன்படும்.XAML குழுவானது எதிர் காலத்தில் devdivன் கீழ் மட்டும் இயங்காமல் windiv,windows phone மற்றும் devdiv ஆகிய மூன்று பிரிவுக:ளின் கீழும் இயங்கும்
Wpf ன் எதிர் காலம் என்னவென்று இது வரை தெளிவாகவில்லை.silverlight ம் WPFம் ஒரே குழுவின் கீழ் இயங்கினாலும் சில்வர் லைட்டால் முடியாததை wpfஆல் முடியும்.எனினும் சில்வர் லைட்டுக்கு  wpf ஐ விடவும் சந்தை உள்ளது.
இவற்றின் மூலம் தெளிவாவது என்னவென்ரறால் விண்டோஸ் 8ல் நீங்கள் சி++லும் பயன் பாடுகள் உருவாக்க  முடியும்.C# மற்றும் silverlight ஆகியவற்றிலும் பயன் பாடுகள் உருவாக்க முடியும்.
அப்படியென்றால் HTML மற்றும் java script மூலம் தான் இனி டாட் நெட் பயன்பாடுகள் உருவாக்கப் படும் என மைக்ரோ சாஃப்ட் அறிவிக்க காரணம்?
 இதற்கு முன்னால்  ஏற்கனவே HTA என்னும் தொழில் நுட்பத்தைப் பற்றி மைக்ரோ சாஃப்ட் அறிவித்திருந்தது. HTA என்பது html,java script,css ஆகிய வற்றின் தொகுப்பாகும்.HTA மூலம் HTMLல் முடியாத  கோப்பு முறை(file system) , network resource முதலியவற்றை அணுக முடியும். இப்போது அறிவிக்கப் பட்ட HTML5ம் HTA ன் பெரும் பாலான கோட்பாடுகளை கொண்டிருக்கும்.html 5யால் இயக்க முறைமையின் செயல் பாடுகளை அணுக முடியும்.மேலும் அவற்றால் windowsAPI களை அணுக முடியும்.தன்மைகளை பொறுத்தவரை html5 ஆனது .net போன்று இருக்கும். எனவே விண்டோஸ் 8 ஆனது  நிரலாளர்களுக்கு  பாதிப்பாக அமையாது.
இங்கு கூறப் பட்ட எல்லாம் விண்டோஸ் 8 வெ:ளியாவற்கு முன்னால் மாறலாம்.மைக்ரோ சாஃப்ட்டின் விண்டோஸ்க 8ன்  பயன் பாடுகள் HTML5 யிலும் ஜாவா ஸ்கிரிப்டிலும் உருவாக்கப் படும் என்ற அறிவிப்பு டாட் நெட் நிரலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தினாலும் மைக்ரோ சாஃப்ட் இது வரை அமைதி காத்தே வருகிறது
ads Udanz

Phishing என்றால் என்ன?


சில சமயங்களில் நமக்கு email ஒன்று வரும்.
அதில் நமக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் அதை பெற்றுக் கொள்வதற்கு ஒரு லிங்க் ஒன்றை click செய்யும் படியும் அதில் இருக்கும்.
அந்த லிங்கை click செய்தால் நமக்கு பரிசு வழங்க நம்முடைய bank details அளிக்கும் படி இருக்கும்.
நாமும் பரிசு கிடைத்த சந்தோசத்தில் எல்லா bankdetailsம் (credit card no , pass word உட்பட )கொடுத்து விடுவோம் .
அவ்வளவுதான் நம் கணக்கில் வங்கியில் இருக்கும் பணம் அதோ கதி. அடுத்து நம் bank balanceஐ செக் செய்தால் பணம் முழுவதும் எடுக்கப் பட்டிருக்கும்.
இதற்குப் பெயர் தன் பிஷ்ஷிங்க் (phishing).எனற நூதன முறை online மோசடி
ads Udanz

சி # -அடிப்படைகள்-பாடம் -3

ஒரு c# நிரல் (program) ஒன்றைக் காண்போம்.

class HelloWorld
{
public static void main()
{


System.Console.WriteLine('Hello World');
}
}

இதை இயக்கச் செய்ய visual studio ல் F5 விசையை அழுத்த வேண்டும்.


braces  { and } .

இவை blocks ஆரம்பம் மற்றும் முடிவை குறிப்பிடப் பயன்படுகின்றது.மேலே கண்ட நிரலின் வெளியீடு இவ்வாறு இருக்கும்.

Hello World.

இவற்றில் WriteLine method '"Hello World' என்ற  வெளியீட்டை விடுகின்றது. இந்த method , console என்னும் library classல் உள்ளது.இந்த library class ,system என்னும் namespaceல் உள்ளது.

namespaceஎன்பது வேறு ஒன்றுமல்ல . இவை Folder  உடன் ஒப்பிடக் கூடியவை.
எப்படி எல்லா fileகளும்  folderlல் சேமிக்கப் படுகினறதோ அதே போல் libraryclass கள் name spaceல் சேமிக்கப் படுகின்றது.
.இவை name conflictஐ தவிக்கப் பயன்படிகின்றது.
.
library classல் library methodகள் உளளன. இங்கு Consoleல் WriteLine method  உள்ளது.

சி#ஐ பொருட்த வரை c++ போல் அல்லாமல்  எந்த methodம்  classக்குள் மடுமே இருக்க வேண்டும் .classக்கு வெளியே எந்த methodம் இருக்கக் கூடாது. global declarationம் சி#ல் தவிர்க்கப் பட்டுள்ளது.

எல்லா நிரல்களிலும்(programs) Main FUNCTION  கட்டாயம் இருக்க வேண்டும். இங்கு தான் நிரல் ஆரம்பிக்கின்றது. இங்கு தான் நிரல்  முடிகின்றது. மற்ற  மொழிகளின் main function போல் அல்லாமல் Main('M' capital) என்று அறிவிக்கப் படுகின்றது.

சி#தன்மைகள்.

எளிமையானது:

C# மொழி அளிமையன மொழியாகும். பாயிண்டர்ஸ் (pointers) கருத்து நீக்கப் பட்டுள்ளது.boxing, unboxing மூலம் சாதரண தரவிலிருந்து (Data type) objectக்கும்  objectன் இருந்து  சாதாரண தரவுக்கும் மாறாலம்.

புதுமையானது:

Garbage collection என்கின்ற  நினைவத்தை கையாளும் முறை சி#ல் செய்யப் படுகின்றது.ஒரு object உபயோக முடிவுக்கு வரும் பொது garbage collector மூலம் நினைவத்திலிருந்து அகற்றப் படுகின்றது.

பொருள் நோக்கு நிரலாக்கம் :
 சி#  பொருள் நோக்கு மொழியாகும்.Encapsulation,inheritance,polymorphism ஆகியவற்றை செயல் படுத்துகின்றது. multiple inheritance நீக்கப் பட்டு இடை முகம் (interface) என்ற கருத்து உட்புகுத்தப் பட்டுள்ளது .

தரவு பாதுகாப்பு:
1. மதிப்பிடாத மாறிகளை உபயோகிக்க முடியாது. ஒரு classன்  உறுப்பினரான மாறிகள் (variables) கம்பைலரால் பூஜ்யத்துக்ககு தொடக்க மதிப்பு இருத்தப் படுகின்றது.local variableகளுக்கு நிரலாள்ர்களே பொறுப்பாகும்.

2. c,c++ போல் அல்லாமல்  c# array உறுப்பினர்களின் எல்லைகளை சோதிக்கின்றது. அதாவது a[5] என்று அறிவிக்கப் பட்ட பின் a[0] நவில் இருந்து a[4] க்கு மேல் உபயோகிக்க முடியாது.

versionable:

ஒரு பயன்பாட்டின்(application) வெவ்வெறு பதிப்புகளை ஒரே கணினியில் நிறுவும் போது அவை ஒரே DLL file களை (DYNAMIC LINK LIBRARY) நிறுவுகின்றது. இதனால் சில பயன்பாடுகளினால் இயங்க்க முடியாமல் போகின்றது.இதைசி# மூலம் சரி செய்ய முடியும்.

பின் குறிப்பு:

சி#  ல் பாயிண்டர்ஸ் தவிர்க்கப் பட்டாலும் unsafe என அறிவித்து விட்டு பாயிண்டர்ஸை பயன் ப்டுத்த முடியும். எனவே சி#ஐ flexible எனவும் கூறலாம்.


ads Udanz

வணக்கம்
நீண்ட நாட்களாக ப்ரொக்ராமிங் பற்றிய விவரங்களை தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் இதன் மூலம் நிறைவேருகிறது.
ப்ரொக்ராமிங்க் என்பது தமிழில் நிரல் எனப் படுகிறது.
இந்த வலைப்பூவில் பின் வரும் நிரல் மொழிகளைப் பற்றிய கருத்துகளைக் காணலாம்
சி
சி++
ஜாவா
சி#
விபி.நெட்
ஏஎஸ்பி.நெட்
ஆரக்கிள்.
ஹெச்டிஎம்எல்5(html)
எக்ஸ்எம்எல்
சிஎஸ்எஸ்
ஜாவா ஸ்கிரிப்ட்
ஆட்டோகேட்
ஃப்ளாஸ்
போட்டோ ஷாப்
கோரல் டிரா
டேலி
டபிள்யுபிஎஃப்
மற்றும்
சில்வர் லைட்
ads Udanz