Tuesday, September 20, 2011

டாட் நெட்டின் அந்திம காலம்?




சில வாரங்களுக்கு முன்னால் மைக்ரோ  சாஃப்ட் நிறுவனம் தனது windows 8 பற்றிய அறிவிப்பை வெலியிட்டது. அதில் windows 8 உடைய பயன்பாடுகள் html மற்றும் javascript ஆகிய மொழிகளில் உருவாக்கப் படும் என்றும்  அறிவித்தது. அப்படியென்றால் டாட் நெட்டில் அவை உருவாக்கப்படாதா ? என்றும் டாட் நெட் ப்ரொக்ராமர்களின் எதிர்காலம் என்னவென்றும் பல வித கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
மைப்ரோசஃப்ட் நிறுவனம் அமைதி காக்கிறது. ஆனால் டாட் நெட் ப்ரோக்ராமர்களின் நிலை அப்படியொன்றும் மோசமில்லையென்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து கசிய வரும் தகவல்கள் தெரிவிப்பதாக ஆங்கில  இணைய தளங்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றது.
முதலில் டாட் நெட் பற்றிய வரலாறு காண்போம்.
டாட் நெட் கண்டு பிடிப்பதற்கு முன்னால்  windows பயன்பாடுகள் win32API மற்றும் சி++ பயன் படுத்தி உருவாக்கப் பட்டன. இடை முகப்பு ,பிணைய  தகவல் தொடர்பு, தகவல் தள தொடர்பு என்று நிறைய நல்ல விசயங்கள் இருந்த போதும் எல்லாவற்றையும் இணைத்து GUI ஆக உருவாக்குவது அவ்வளவு எளிது இல்லை. இதை மாற்ற MFC போன்ற library ஃபைல்கள்  உருவாக்கப்பட்ட போதும் GUI உருவாத்துவது கடினமாகவே இருந்தது.
இதற்கிடையே விசுவல் பேசிக் அறிமுகப் படுத்தப் பட்டது. GUI மற்றும் தகவல் தள தொடர்பு என எல்லாமே எளிதானது.எனினும் win32API function களை அழைப்பு போன்றவை மிகவும் குறைவாகவே support செய்தது. மேலும் விசுவல் பேசிக் முழுமையான பொருள் நோக்க நிரலாக்கமன்று.  அது ஒரு பொருள் சார்ந்த மொழியேயாகும்.
அதற்குப் பின் டாட் நெட் அறிமுகப்படுத்தப்பட்டது. விசுவல் பேசிக்கின் GUI மற்றும்தகவல் தள தொடர்பு என எல்லா நன்மைகளும் இதிலும் இருத்தது. Win32 API ஃப்ங்ஷன்களை அணுகுவதும்எளிதானது. இதற்கிடையே windows frame work போல் dotnet frame work அறிமுகப்படுத்தப் ப்ட்டது.
Windows xp அறிமுகப் படுத்தப் பட்டது. அதற்குப் பின் windows xp service pack2 வெளியானது. அதற்க்கும் பின் VISTA OS வெலியானது. விஸ்டாவில் முற்றிலும் windows frame work வானது windows presentation foundation என முழுமையாக  செயல் படுத்தப் பட்டது.விஸ்டாவிலும் windows 7 லும் media centreக்கு மட்டுமே dotnet code பயன் படுத்தப் பட்டது. மற்ற எல்லாமே பழைய win32API  தான் win32API  update செய்யப் பட்டு நிறைவ் அடிப்படை விஷயங்கள் உட்புகுத்தப் பட்டன. ஆனால் இவை எதுவுமே wpfல் செயல் பட வில்லை.
அதற்கான காரணங்கள், எல்லாவற்றையுமே டாட் நெட்டில் எழுத நேரமில்லை. மற்றொரு காரணம் Microsoft இரு பிரிவுகளாக இருத்தும் ஆகும் .microsoftன் இரு பிரிவுகள் விண்டோஸ்  os வெளியிடும் windiv மற்றும் டாட் நெட் வெளியிடும்
Devdiv ஆகும். நாம் நிணைப்பது போல் இவை  இரண்டும் ஒத்து செயல் பட வில்லை.
Wpf c# மற்றும் vb யில் மட்டுமே நன்றாக செயல் பட்டது. C++ல் அல்ல.microsoftன் எதிர் காலமே டாட் நெட் என இருத்தது எப்போது மாறியது. Micro softஆல் wpf பயன் படுத்தி core operating system பயன் பாடுகளை உருவாக்க முடிய வில்லை. மற்றும் devdevன் நோக்கம் dotnetல் core functionality சேர்ப்பதும்  சில்வர் லைட் போன்ற கருவிகளை உருவாக்குவதிலும் இருந்தது. Windivன் நோக்கமோ C++ன் compatibilityயிலும் உறுதியான codings உருவாக்குவதிலும் சில தொழில் னுட்ப விஷயங்க்களை எதிர் நோக்குவதிலுமே இருந்தது. Win divனின் எதிர்ப்பர்ப்புகளை dev div நிகர்த்தி செய்யாததால் இரண்டும் ஒத்து செயல் பட வில்லை.
அதற்கு பின் வந்த டாட் நெட் பதிப்புகள் windivன் எதிர்பர்ப்புகளை சரி செய்தாலும் சி++ பற்றிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட வில்லை. இவை windivக்கு devdiv மேல் அதிருப்தியை ஏறப்படுத்தின. எனவே அதற்கடுத்து வந்த விண்டோஸ் 7ம் மீடியா சென்டருக்கு மட்டும் டாட் நெட்டை பயன் படுத்தின. விண்டோஸ்ன் புதிய APIகள் native c++ APIகள் ஆகும். மீண்டும் அதே குறைபாடுகள். சி++  நிரல்களால் WPF பயன் படுத்தி வெக்டொர் அடிப்படையிலான interfaceகளை உருவாக்க முடிய வில்லை.
விண்டோஸ் 8 இவை எல்லாவறையும் நிகர்த்தி செய்யும்.
விண்டோஸ் 8 இரண்டு ரண்டைம்(run time)களை கொண்டிருக்கும். அவை புதிய டாட் நெட் ரன் டைம்(.Net 4.5) மற்றும் native c++ (மேம் படுத்த்ப் பட்ட com)ரன் டைம்(win rt என அழைக்கப்படும்)  ஆகியவை ஆகும். புதிய interface library, DirectUI உருவாக்கப்படும். சில்வர் லைட்டின் புதிய பதிப்பு Jupiter ,DirectUI க்கு மேல் இயங்கும். Winrt மற்ற்ம் DirectUI ஆகியவை .நெட்டால் அழைக்கப்பட முடியும்.
Winrtயானது win32APIஇன் நவீன பதிப்பேயாகும்.DirectUIயானது wpf/silverlight தொழில் நுட்பத்தின் கீழ் அடங்கும் .இது XAMLயை ஆதரிக்கும். XMLஅடிப்படையிலான interfaceபகளையும்,இதற்கு முன்னால் வின்32API  ஆதரிக்காத layoutகளையும் ஆதரிக்கும்.
DirectUI யானது சி++ மூலம் வெக்டார் அடிப்படையிலான நவீன intefaceகளை உருவாக்கப் பயன்படும்.டாட் நெட் நிரலாளர்களும் இவற்றையே பயன் படுத்துவர்.
ஜுபிடர் என்பது சில்வர் லைட்டின் ஆறாவது பதிப்பேயாகும், ஜுபிடருக்கும் டைரக்ட்யுஐக்கும் என்ன சம்பந்தம் என்பது இது வரை தெளிவாக்கப்பட வில்லை.
XAML மற்ற்ம் WPF மாதிரியான சில்வர் லைட் போன்ற GUIகளே விண்டோஸ் பயன்பாடுகளுக்கு  எதிர் காலத்தில் பயன்படும்.XAML குழுவானது எதிர் காலத்தில் devdivன் கீழ் மட்டும் இயங்காமல் windiv,windows phone மற்றும் devdiv ஆகிய மூன்று பிரிவுக:ளின் கீழும் இயங்கும்
Wpf ன் எதிர் காலம் என்னவென்று இது வரை தெளிவாகவில்லை.silverlight ம் WPFம் ஒரே குழுவின் கீழ் இயங்கினாலும் சில்வர் லைட்டால் முடியாததை wpfஆல் முடியும்.எனினும் சில்வர் லைட்டுக்கு  wpf ஐ விடவும் சந்தை உள்ளது.
இவற்றின் மூலம் தெளிவாவது என்னவென்ரறால் விண்டோஸ் 8ல் நீங்கள் சி++லும் பயன் பாடுகள் உருவாக்க  முடியும்.C# மற்றும் silverlight ஆகியவற்றிலும் பயன் பாடுகள் உருவாக்க முடியும்.
அப்படியென்றால் HTML மற்றும் java script மூலம் தான் இனி டாட் நெட் பயன்பாடுகள் உருவாக்கப் படும் என மைக்ரோ சாஃப்ட் அறிவிக்க காரணம்?
 இதற்கு முன்னால்  ஏற்கனவே HTA என்னும் தொழில் நுட்பத்தைப் பற்றி மைக்ரோ சாஃப்ட் அறிவித்திருந்தது. HTA என்பது html,java script,css ஆகிய வற்றின் தொகுப்பாகும்.HTA மூலம் HTMLல் முடியாத  கோப்பு முறை(file system) , network resource முதலியவற்றை அணுக முடியும். இப்போது அறிவிக்கப் பட்ட HTML5ம் HTA ன் பெரும் பாலான கோட்பாடுகளை கொண்டிருக்கும்.html 5யால் இயக்க முறைமையின் செயல் பாடுகளை அணுக முடியும்.மேலும் அவற்றால் windowsAPI களை அணுக முடியும்.தன்மைகளை பொறுத்தவரை html5 ஆனது .net போன்று இருக்கும். எனவே விண்டோஸ் 8 ஆனது  நிரலாளர்களுக்கு  பாதிப்பாக அமையாது.
இங்கு கூறப் பட்ட எல்லாம் விண்டோஸ் 8 வெ:ளியாவற்கு முன்னால் மாறலாம்.மைக்ரோ சாஃப்ட்டின் விண்டோஸ்க 8ன்  பயன் பாடுகள் HTML5 யிலும் ஜாவா ஸ்கிரிப்டிலும் உருவாக்கப் படும் என்ற அறிவிப்பு டாட் நெட் நிரலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தினாலும் மைக்ரோ சாஃப்ட் இது வரை அமைதி காத்தே வருகிறது
ads Udanz

No comments:

Post a Comment