Tuesday, September 9, 2014

புதியவர்களுக்கு :Hyper links-பல வகைகள்.

Regular link எனப்படுவது இது வரை visit செய்யப் படாத link ஆகும்.visited link எனப்படுவது விசிட் செய்யப் பட்ட link ஆகும்.active link எனப்படுவது தற்சமயம் க்ளிக் செய்யப்படும் link ஆகும்.rollover link எனப்படுவது தற்சமயம் mouse ல் க்ளிக் செய்யப்ப்படாமல் தொடச் செய்யப்படும் லிங்க் ஆகும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். இவற்றின் நிறங்கள் இணைய தளமானது design செய்யப்படும் போதே நிரலாளரால் நிர்ணயிக்கப்ப்டுகின்றன.

ட்ரீம் வீவரில் பக்கத்தை வலது க்ளிக் செய்து page properties என்பதை select செய்யவும்.இடது புறம் links(css) என்பதை தேர்வு செய்யவும். இப்போது எல்லா வகையான link களுக்கும் நிறம் தேர்வு செய்யலாம்.


ads Udanz

Saturday, August 9, 2014

HTML ஒரு பார்வை: பாடம் -1


Html ஒரு மார்க் அப்(markup) மொழி எனப் படுகின்றது.இது இணையப் பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகின்றது.html  ஆனது அதன் உறுப்புகளை(elements) கொண்டு விவரிக்கப் படுகின்றது.பெரும்பாலும் ஒவ்வொரு உறுப்பும் opening tag மற்றும் closing tag கொண்டுள்ளது.உதாரணமாக paragraph ஆனது பின் வருமாக விவரிக்கப் படுகின்றது.

<p> this is a paragraph</p>

opening tag ஆனது < மற்றும் >tag கொண்டும் closing tag ஆனது </ மற்றும் > கொண்டும் அமைகின்றது.சில சமயம் வெற்று உறுப்பாகவும் html tag ஆனது அமைகின்றது.உதாரணமாக ரு வரி இடைவெளியை ஒருவாக்க break tag ஆனது பின் வருமாறு அமைகின்றது.

<br/> இது self closing tag எனப் படுகின்றது.

<!DOCTYPE html>
<title>Your first HTML5 Document</title>
<p>
first para graph!</p>

<!DOCTYPE html> அறிவிப்பானது html document ஆனது standard mode –ல் உலாவியில்(browser) திறக்கப்  பயன் படுகின்றது.<title> tag ஆனது இணையப் பக்கத்தின் தலைப்பை குறிப்பிடப் பயன்படுகின்றது.

<!DOCTYPE html>
<head>
<title>first html document</title>
</head>
<body>
<P>first paragraph</p>
</body>
</html>

Html ஆனது <head> மற்றும் <body> என இரு section களை கொண்டுள்ளது. <head>பகுதி ஆனது இணையப் பக்கத்தை பற்றிய விவரத்தையும் <body> பகுதி ஆனது இணையப்பக்கத்தின் actual contant-யையும் கொண்டுள்ளது. நோட்பேடில் கூட html பக்கத்தை சேமிக்கலாம்..extension htm அன்றோ html என்றோ அமையலாம். Html பக்கம் ஆனது உலாவியில் திறக்கப் படுகின்றது.

output



ads Udanz

Friday, June 6, 2014

இணையப் பக்கங்களில் வலது க்ளிக் செய்வதை ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் தடுத்து நிறுத்தல்

இணையப் பக்கங்களில் வலது க்ளிக் செய்வதை ஜாவா ஸ்கிரிப்ட்  மூலம் தடுத்து நிறுத்தல்.

இணையப் பக்கங்களில் வலது க்ளிக் செய்வதை ஜாவா ஸ்கிரிப்ட்  மூலம் தடுத்து நிறுத்தலாம் அதற்கான நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

<script language="javascript">
document.onmousedown=disableclick;
message="Right Click not enabled";
Function disableclick(event)
{
  if(event.button==2)
   {
     alert(message);
     return false;   
   }
}
</script>


 

 









மற்றும் 

<body oncontextmenu="return false">
...
</body>

மேலே உள்ள நிரல் மூலம் இணையப் பக்கங்களில் வலது க்ளிக் செய்வதை ஜாவா ஸ்கிரிப்ட்  மூலம் தடுத்து நிறுத்தலாம்



ads Udanz