Saturday, October 14, 2017

கணினி அறிவியல் கற்றதும் பயன் பெற்றதும் –பகுதி-4


மல்டி டாஸ்கிங் மற்றும் மல்டி திரட்டிங் என்ன  வேறுபாடு?
நான், சரவணன், கணேஷ், சினேகா நால்வரும் அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்த படி அங்கு ஒலித்த மெல்லிய இசையை ரசித்துக் கொண்டு தேநீரை பருகியபடி உட்கார்ந்திருதோம்.
நாங்கள் நால்வரும் கணேஷ் அன்று அட்டெண்ட் செய்த இன்டெர்வியூவை பற்றி கதைத்துக் கொண்டுருந்தோம்.(என்ன இலங்கைத் தமிழ் சற்று எட்டிப் பார்க்கின்றதா?).
கணேஷ்  அன்று ஜாவா ப்ரோக்ராமர் வேலைக்கு இண்டர்வியூ சென்றிருந்தான்.
“முதல் கேள்வியே மல்டிடாஸ்க்கிங் என்றால் என்ன?”
“மல்டி டாஸ்க் என்பது வெவ்வேறு ப்ரொக்ராம்கள் அதாவது அப்ளிகேசன்கள் ஒரே நேரத்தில் இயங்குவதாகும்.அதாவது வொர்ட் டாக்கு மென்ட்டை பிரிண்ட் எடுத்துக் கொண்டே விஎல்சி மீடியா ப்ளேயரில் பாடல் கேட்பதாகும்.”
“சரி மல்டி திரட்டிங் என்றால்?”
“ஒரே ப்ராக்கிராமில் அதாவது ஒரே அப்ளிகேசனில் வெவ்வேறு செயல்கள் ஒரே நேரத்தில் நடை பெறுவதாகும்.அதாவது வேர்டில் எடிட் செய்து கொண்டே மற்ற டாக்குமெண்ட்டை பிரிண்ட் எடுப்பது போன்றதாகும்".
“இரண்டின் பயன் என்ன?”
“இரண்டின் பயனும் ப்ராசரின் வாழாவிருக்கும் நேரத்தில் அதாவது ப்ராசசர் ஒரு ப்ராசஸ் ஆனது ஏதாவது ஒரு ரிசோர்ஸிற்காக வெய்ட் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்ற ப்ராசஸை இயக்குதல் ஆகும்.”.
“இரண்டின் வித்தியாசம் என்ன?”
“மல்டி டாஸ்கிங் ஆனது இரு வேறு அப்ளிகேசன் என்பதால் வெவ்வேறு மெமரி லொக்கேசனில் இயங்கும். அதாவது ஒரு மெமரி அட்ரஸில் இருந்து மற்ற மெமரி அட்ரஸிற்கு ஸ்விட்ச் ஓவர் செய்ய வேண்டியிருக்கும் அதாவது ஹெவி வெய்ட் டாஸ்க்கிங் ஆகும்”
“இன்ட்ரஸ்டிங்”
“மல்டி திரட்டிங் ஓரெ மெமரி  அட்ரஸ் என்பதால் ஸ்விச் ஓவர் செய்வது எளிதாக இருக்கும். அதாவது லைட் வெய்ட் ப்ராசஸ் ஆகும்”.
“வெரி குட் கணேஷ்” என்றான்  சரவணன்.
“போதும் மொக்க போட்டது. மியூசிக்கை கேட்க விடுங்கள்” என்றாள் சினேகா.
நாங்களும் புன்னகைத்தபடியே இசையில் லயித்தோம்.
----நன்றி
---முத்து கார்த்திகேயன்,மதுரை.







ads Udanz

No comments:

Post a Comment