Wednesday, December 27, 2017

எம்.எஸ்.எக்சலில் ஹைபர்லிங்க்.


 

எம்.எஸ்.எக்ஷ்சலில் இருந்த படியே மற்ற பக்கங்க
ளுக்கோ, மற்ற ஃபைலிற்கோ அல்லது ஒரு இணையதளத்திற்கோ இணைப்பு ஏற்படுத்தலாம். அதற்கு இன்செர்ட் மெனுவில் உள்ள ஹைபர்லிங்க் என்ற ஆப்சன் உதவி புரிகின்றது.

உதாரணமாக கீழே உள்ள எக்சல் பக்கத்தில் மூன்று பெயர்கள் உள்ளது.

 

முத்து என்பவரின் சம்பளத்தொகை வேறொரு பக்கத்தில் உள்ளது



இப்பொழுது முதல் பக்கத்தில் உள்ள முத்து என்கின்ற செல்லை கிளிக் செய்கையில் இரண்டாவது பக்கம் திறக்க வேண்டும்,..

அதற்கு முதலில் முத்து என்கின்ற பெயரை முதலில் கிளிக் செய்யவும்.

பிறகு இன்செர்ட்மெனு சென்று ஹைபர்லிங்க் என்கின்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
 

இப்பொழுது கீழே உள்ள டையலாக் பாக்ஸ் வரும். அதில்

அதில்  முதலில் place in this document என்கின்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

பிறகு sheet2 என்பதை தேந்தெடுத்து ok என்பதை கிளிக் செய்யவும்.

·         இப்பொழுது முதல் பக்கத்தில் உள்ள muthu என்கின்ற செல்லை கிளிக் செய்தால் இரண்டாவது பக்கம் ஒபன் ஆகும்.

·         வேறொரு ஃபைலுடன் இணைப்பு ஏற்படுத்துவதற்கு இடது புறத்தில் EXISTING FILE OR WEB PAGE என்பதை செலெக்ட் செய்து வலது புறத்தில் ஃபைலின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.

ஒரு இணைய பக்கத்துடன் இணைப்பு ஏற்படுத்த இடது புறத்தில் EXISTING FILE OR WEB PAGE என்பதை செலெக்ட் செய்து வலது புறத்தில் கீழே address என்பதில் இணையதள முகவரியை கொடுக்கவும்.பிறகு ஓகே பட்டனை கிளிக் செய்யவும்.
 

இப்பொழுது எக்சல் பக்கத்தில் muthu என்கின்ற செல்லை கிளிக் செய்தால் அந்த இணையதளம் ஒபன் ஆகும்.

 -நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment