Friday, November 16, 2018

நாம் ஏன் பைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்?





10.கற்றுக் கொள்ள எளிது.
பைத்தான் ஆனது கற்றுக் கொள்ளுவதற்கு மிகவும் எளியதொரு கருவி ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆங்கில வார்த்தைகளுடன் ஒத்துப் போகின்றது.
இது ஓபன் சோர்ஸ் மற்றும் இலவசமாகும்.
இது ஒரு இண்டர்பிரடு மொழியாகும்.
மிக பெரிய கம்யூனிடி கொண்டது.
‘இதன் சிண்டாக்ஸ் மிகவும் எளிது. மற்ற மொழிகளைக் காட்டிலும் மிகவும் குறைந்த  வரிகளில் நிரல் எழுதலாம் உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் “hello world” என்பதை பிரிண்ட் செய்ய ஜாவாவில் எத்தனை வரிகள் ஆகின்றது என்பதைக் கவனியுங்கள். இதே நிரலை பைத்தானில் ஒரே வரியில் எழுதலாம்.



If you have to print ‘hello world’,
9. போர்டபிள் & எக்ஸ்டன்ஸபிள்
 பைத்தானின் போர்டபிள் தன்மை கிராஸ் லாங்குவேஜ் செயல்பாடுகளுக்கு உதவுகின்றது. இதை Windows ,Linux  Macintosh, Solaris, Play station, போன்றவற்றில் பயன்படுத்தலாம். இதன் நீட்டுவிக்கும் தன்மை ஜாவா, டாட்நெட்,சி,சி++ லைப்ரரி ஆகியவற்றுடன் ஒருங்கினைக்க உதவுகின்றது.

 8.வெப் டெவெலப்மெண்ட்பைத்தான் வெப் டெவெலப்மென்டிற்கான மிகப் பெரிய ஃப்ரேம் ஒர்க் கொண்டது. இந்த ஃப்ரேம் ஒர்க் ஆனது பைத்தானில் எழுதப்பட்டுள்ளதால் விரைவாக நிரல் எழுதலாம். Django, Flask  போன்றவை வெப் டெவெலப்மென்ட் ஃப்ரேம் ஒர்க் ஆகும்
மற்ற இணைய தளங்களில் இருந்து தகவல்களை பெற்று வலை ஒட்டலாம். Instagram,bit bucket,pininterest போன்றவை இந்த பிரேம் ஒர்க்கால் உருவாக்கப்பட்டவை.
7. Artificial Intelligence

செயர்க்கை நுண்ணறிவு   என்பது அடுத்து மிகப் பெரிய வளர்ச்சி அடைய இருக்கும் தொழில்நுட்பம் ஆகும். ஒரு இயந்திரத்தை மனிதன் போலவே சிந்தித்து தீர்மானம் எடுக்கும் தன்மை கொண்டவை. இதில் keras, TensorFlow முதலிய லைப்ரரிகள் பயன்படுகின்றது. இது நிரலாக்கம் பண்ணப்படாமலே ஒரு இயந்திரத்தை புதிய விசயங்களை கற்றுக் கொள்ள உதவுகின்றது. 
6. Computer Graphics

 பைத்தான் ஆனடு பெரிய,சிறிய, ஆன் லைன், ஆஃப் லைன் பிராஜெக்ட்கள் செய்யப் பயன்படுகின்றது. இதை பயன் படுத்தி GUI & WINDOWS APPLICATIONS உருவாக்கலாம். TKinter லைப்ரரி விரைவாக மற்றும் எளியதாக அப்ளிகேசன்களை உருவாக்கப் பயன்படுகின்றது.பைத்தான் ஆனது கேம் டெவெலப்மெண்டிலும் பயன்படுகின்றது. அதற்கு ‘pygame’ என்கின்ற மாடூல் பயன்படுகின்றது. Pygame ஆனது ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இயங்கக் கூடியது.

5. Testing Framework

 பைத்தான்  ஒரு நிறுவனத்தின் திட்டங்களை வேலிடேட் செய்ய உதவுகின்றது. இது பில்ட் இன் டெஸ்டிங்க் ஃப்ரேம் கொண்டது. இதற்கு selenium, splinter போன்ற டூல்கள் பயன்படுகின்றது.  இது கிராஸ் பிளாட்ஃபார்ம் மற்றும் கிராஸ் பிரவுசர் உடன் டெஸ்ட் செய்ய உதவும் PyTest போன்ற ஃபிரேம் ஒர்க் கொண்டது.
4. Big Data

 பைத்தான் ஆனது மிகப் பெரிய டேட்டாக்களை கையாளுகின்றது. இது python for hadoop லைப்ரரிகளைப்  பயன்படுத்தி பேரலல் கம்ப்யூட்டிங்க் செய்ய உதவுகின்றது. Dask, Pyspark போன்ற லைப்ரரிகளும் பிக் டேட்டா செயல்பாடுகளில் உதவுகின்றது.

3.  Scripting & Automation

நிறையவர்களுக்கு பைத்தான் ஒரு நிரலாக்க மொழி என்பது தான் தெரியும்,.ஆனால் இது ஸ்கிரிப்டிங்க் மொழியாகவும் பயன்படுகின்றது.
 நிரல் ஆனது ஸ்கிரிப்ட் ஆக எழுதப்பட்டு பின் வருமாறு செயல்படுகின்றது
       மெசின் நிரலை வாசித்து இன்டர்பிரட் செய்கின்றது. பிழைதிருத்தம் இயக்க நேரத்தில் செயல்படுகின்றது.

ஒரு தடவை கோட் டெஸ்ட் செய்யப்பட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தலாம். ஆகையால் ஆட்டோமேசன் மூலம் செயல்படுகளை ஆட்டோமேட் செய்யலாம்.
2. Data Science

பைத்தான் டேட்டா சைன்ஸிஸ்டிற்கு முன்னனி மொழியாக பயன்படுகின்றது. இது வரை MATLAB பயன்படுத்தியவர்கள் இப்போது பைத்தான் பயன்படுத்துகின்றனர். இது மேலும் tabular, matrix மற்றும் statistics போன்றவற்றையும் கையாளுகின்றது
1. புகழ் மற்றும் அதிக சம்பளம்.
பைத்தான் நிரலாளர்கள் நிறைய சம்பாத்திக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு பைத்தானின் ஆண்டு சராசரி சம்பளம் $116,028 ஆகும்.

முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment