Saturday, February 16, 2019

MVC ஆர்க்கிடெக்சர்



MVC என்பது Model, View and Controller ஆகியவற்றை குறிப்பிடுகின்றது.. MVC என்பது ஒரு பயன்பாட்டை Model,View மற்றும் Controller என மூன்று காம்பொனண்ட்களாக பிரிக்கின்றது
Model: Model என்பது டேட்டா மற்றும் பிஸினஸ் லாஜிக்கைக் குறிக்கின்றது. இது ஒரு பயன்பாட்டின் டேட்டாவை நிர்வாக்கின்றது. மாடல் ஆப்ஜெக்ட் டேட்டாவை சேமிக்கவும் திரும்ப பெறவும் பயன்படுகின்றது.
மாடல் என்பது டேட்டா மற்றும் பிஸினஸ் லாஜிக்கை குறிக்கின்றது
.
View: View என்பது பயனர் இடைமுகப்பை(User interface) குறிக்கின்றது. இது மாடலில் இருந்து பெறப்பட்ட டேட்டாவை தோற்றுவிக்கின்றது. மேலும் டேட்டாவை எடிட் செய்யவும் பயன்படுகின்றது.
View என்பது பயனர் இடைமுகப்பாகும்.
Controller: Controller என்பது பயனரிடம் இருந்து வரும் கோரிக்கையை கையாளுகின்றது.பயனரிடம் இருந்து வரும் URL கோரிக்கையை அடுத்து இது மாடலிடம் இருந்து டேட்டாவை பெற்று View-ல் காண்பிக்கின்றது
கன்ட்ரோலர் என்பது கோரிக்கையை கையாளுகின்றது.
MVC Architecture
ரிகெஸ்ட்/ ரெஸ்பான்ஸ் MVC Architecture
மேலே உள்ள படத்தின் படி பயனர் URL முகவரியை பிரவுசரில் உள்ளீடம் பொழுது சர்வருக்குச் சென்று அதற்கேறற கன்ட்ரோலரை அழைக்கின்றது. கன்ட்ரோலர் View, Model ஆகியவற்றை பயன்படுத்தி ரெஸ்பான்ஸை பயனருகு அனுப்புகின்றது. Visit MSDN to learn MVC in detail.
முக்கிய குறிப்புகள்
  1. MVC என்பது Model, View மற்றும் Controller ஆகியவற்றை குறிக்கின்றது.
  2. Model என்பது டேட்டாவையும் பிஸினஸ் லாஜிக்கையும் நிர்வாக்கின்றது.
  3. View என்பது பயனர் இடைமுகப்பாகும். இது  டேட்டாவை காண்பிக்க பயன்படுகின்றது.
  4. Controller என்பது பயனரிடமிருந்து கோரிக்கையை பெற்று அதை மாடலிடம் இருந்து டேட்டாவை பெற்று view-ல் காண்பிக்கின்றது.
  •  

.

முதல் MVC application

 Visual Studio 2017 Community edition –ஐ ஒபன் செய்து அதில் File menu -> New -> Project ஆகியவற்றை கிளிக் செய்யவும்.
Create a New Project in Visual Studio
New Project டையலாக் பாக்ஸில் இடது பறம் d Visual C# என்பதை எக்ஸ்பாண்ட் செய்து  Web என்பது தேர்வு செய்து வலது புறம் ASP.NET Web Application (.NET Framework) என்பதை தேர்வு செய்யவும். அப்ளிகேசன். பெயரை உள்ளீடு செய்து அதற்கான லொக்கேசனையும் தேர்வு செய்யவும். கடைசியாக OK கிளிக் செய்யவும்.
Create MVC Project in Visual Studio
New ASP.NET Web Application  டையலாக் பாக்ஸில் MVC என்பதை தேர்வு செய்யவும்.
Create MVC Application
ஆதண்டிகேசன் என்பதில் Change Authentication பட்டனை செலக்ட் செய்து -நமக்கு தேவையான ஆதண்டிகேசன் மோடை தேர்வு செய்யலாம்
Select Authenctication Type
First MVC Application
இப்பொழுது f5 பட்டனை ப்ரஸ் செய்து அப்ளிகேசனை இயக்கலாம்.

MVC 5 project ஆனது ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் பூட்ஸ்ட்ராப் ஃபைல்களை டிஃபால்ட் ஆக கொண்டிருக்கும். இது நமக்கு ரெஸ்பான்சிவ் வெப் பக்கங்களை தருகின்றது. அதாவது கருவிக்கு ஏற்றாற் போல் அதன் தோற்றமும் மாறும்
 MVC Application
Responsive MVC Application
இவ்வாறாக நாம் புதிய ASP.NET MVC பயன்பாட்டை உருவாக்கலாம்.
முத்து கார்த்திகேயன் ,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment