இந்த கட்டுரையில்
அர்ரே என்றால் என்ன , சி ஷார்ப்பில் எவ்வாறு எழுதபடுகின்றது, அதன் அட்வாண்டேஜ், டிஸ்
அட்வான்டேஜ் என்ன என்று பார்ப்போம்.
பொதுவாக
அர்ரே என்பது ஓரே வேரியபிளில் ஒன்றுக்கும் மேற்பட்ட டேட்டாக்களை சேமிக்க பயன்படுகின்றது.
கீழே உள்ளது
சி ஷார்ப்பில் அர்ரே எவ்வாறு எழுதப்படுகின்றது என்றுள்ளது.
using System;
namespace ConsoleApplication8
{
class Program
{
static void Main(string[] args)
{
int[] a = new int[3];
a[0] = 10;
a[1] = 20;
a[2] = 30;
Console.WriteLine("a[1]={0}", a[1]);
Console.ReadKey();
}
}
}
இதில்
a என்பது இன்டிஜெர் அர்ரே . அதன் அளவு 3. அதாவது அதிகபட்சம் 3 டேட்டாக்களை சேமிக்கலாம்.
அதன் இண்டெக்ஸ் 0 வில் தொடங்கும் அதன் இண்டெக்ஸ் 2-ல் முடியும்.
இதில்
a[1]என்பது 20 ஆகும் எனவே இதன் வெளியீடு
a[1]=20
என இருக்கும்.
இதன் நண்மைகள்.
1.
அர்ரேயை
பொருத்தவரை எல்லா டேட்டாவுமே ஒரே டேட்டா டைப்பாக இருக்க வேண்டும். அதாவது மேலே உள்ள
நிரலில் a என்பது ஒரு int டைப் அர்ரே அதில் எல்லா டேட்டாவுமே இன்ட் டைப்பாக தான் இருக்க
வேண்டும். வேறு டேட்டா டைப்பை சேர்ந்த டேட்டாவை மதிப்பிருத்தினால் பிழை சுட்டப்படும்
.எனவே இது டைப் சேஃப்டி ஆகும்.
டிராபேக்கள்.
இதில்
அதன் இண்டெக்ஸ் ரேஞ்சிற்கும் அப்பாற்பட்ட லொகேசனில் டேட்டாவை சேமித்தால் இது கம்பைல்
டைமில் பிழை காட்டாது. ஆனால் இயக்க நேரத்தில் பிழை காட்டும்.
சான்றாக
மேலே உள்ள நிரலில்
a[3]=45;
என
மதிப்பிருத்தினால் எர்ரர் கம்பைல் டைமில் காட்டப்படாது. ஆனால் ரன் டைமில் எர்ரர் காட்டப்படும்.
இதன்
டேட்டாவை அணுகுவதற்கு இண்டெக்ஸை குறிப்பிட்டே அனுக வேண்டும்.வேறு வழியில்லை.
-நன்றி
முத்து
கார்த்திகேயன், மதுரை.