ASP.NET CORE 5.0 என்பது என்ன என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால் பின் வருவன பற்றி நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.அவையாவன.
- .NET Framework,
- .NET Core
- .NET 5 and
- One .NET
.NET Framework.
இதன் முதல் பதிப்பு(1.0) மைரோசாஃப்ட் நிறுவனத்தால் பிப்ரவரி 2002-ல் அறிமுகப்பபடுத்தப்பட்டது.
இதன் கடைசி வெர்சன் 4.8 ஏப்ரல் 2019-ல் வெளியிடப்பட்டது.
.NET Frame work பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாடுகள் விண்டோஸ் பிளாட்ஃபார்மில் மட்டுமே செயற்படும். அதாவது இது கிராஸ் பிளாட்ஃபார்ம் அல்ல.எனவே இதை பயன்படுத்தி உருவாக்கப்படும் அப்ளிகேசன்கள் லினக்ஸ், மேக் ஓஎஸ் ஆகியவற்றில் செயற்படாது.
இதன் வெர்சன் 4.8 ற்க்கு பிறகு எதுவும் வெளியிடப்படவில்லை.எனினும் விண்டோஸ் உள்ள வரை இது சப்போர்ட் செய்யப்படும்.
.NET Core என்பது என்ன?
இது பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாடுகள் கிராஸ் பிளாட்ஃபார்ம் ஆகும்.அதாவது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் எல்லாவற்றிலும் செயல்படும்.
இதன் முதல் பதிப்பு 1.0 பிப்ரவரி 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் பிறகு அதன் அப்டேட்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வெளியிடப்பட்டது. இதன் கடைசி பதிப்பு 3.1 ஆகும்.
.NET 5 என்பது என்ன?
இது .NET 3.1 CORE என்பதற்கு பிறகு வெளியிடப்பட்ட முக்கியமான பதிப்ப்பாகும்.
இது ஏன் 4.0 என்று பெயரிடப்படவில்லை என்றால் இது .நெட் ஃபரேம் ஒர்க் 4.8 உடன் குழப்பப்படக்கூடாது என்பதால் தான்,. CORE என்ற வார்த்தை எடுக்கப்பட்டதிற்காரணம். இதற்கு பிறகு எல்லாமே ஒன்றினைக்கப்பட்ட டாட்நெட் தான் என்பதற்காக தான்.
.NET CORE போலவே .NET 5-ம் கிராஸ் பிளாட்ஃபாரம் ஆனால் இது கூடுதல் பிளாட்ஃபார்ம்களையும், பயன்பாடுகளையும் ஆதரிக்கின்றது.
ASP.NET CORE 5.0 ஆனது .NET 5.0 வகையை சார்ந்தது தான். CORE என்பது தக்கவைக்கப்பட்டதற்கான காரணம் ASP.NET MVC -உடன் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான். அதே போல் ENTITY FRAMEWORK CORE 5.0 வும் ENTITY FRAMEWORK 5.0 உடன் குழப்பிக்கொள்ள கூடாது என்பதற்காகத் தான்.
ASP.NET CORE 5.0 என்பதும் ASP.NET CORE IN .NET 5.0 என்பதும் ஒன்று தான்.
அதை போல் ENTITY FRAMEWORK CORE V5.0 என்பதும் ENTITY FRAMEWORK CORE IN .NET 5.0 என்பதும் ஒன்று தான்.
ONE.NET என்பது என்ன?
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஆனது ஒன்றினைக்கப்பட்ட .நெட் பிளாட்ஃபார்மை உருவாக்க விரும்புகின்றது. .NET FRAMEWORK, .NET CORE,XMARIN , MONO என தனித்தனியே அல்லாமல் ஒன்றாக இருக்க நிணைக்கின்றது.
டெஸ்க்டாப், வெப், கிளவுட், மொபைல், கேமிங்க்,ஐஓடி(INTERNET OF THINGS), MACHINE LEARNING, ARTIFICIAL INTELLIGENCE எல்லாம் ஒரே சாஃப்ட்வேரில் கிடைக்கும்,
மேலும் விசுவல் ஸ்டுடியோ, விசுவல் ஸ்டுடியோ ஃபார் மேக், விசுவல் ஸ்டுடியோ கோட், கமாண்ட் லைன் இண்டர்ஃபேஸ் என எல்லாம் ஒன்றினைக்கபட்டுள்ளது.
..NET 5.0 ஆனது .NET CORE 3.1 -ன் அப்டேட்டா?
ஆம் . உங்களுக்கு .நெட் கோர் 3.1 தெரிந்தாலே, .நெட் 5.0 வும் தெரிந்தது போன்று தான். கிராஸ் பிளாட் ஃபார்ம்,மாடுலர் டெவெலப்மெண்ட், கண்டைனரேசன், சைட் பை சைட் இன்ஸ்டாலேசன். எல்லாமே .நெட் 5.0 -விலும் உள்ளன. கூடுதல் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
சுருக்கம்.
.நெட் ஃப்ரேம்வொர்க் 2002 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விண்டோஸ் பிளாட்ஃபார்மில் மட்டும் செயற்படும். .நெட் கோர் 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.இது கிராஸ் பிளாட்ஃபார்ம் ஆகும். .நெட் 5.0 2020-ல் வெளியிடப்ப்ட்டது. இது கூடுதல் பிளாட்ஃபார்ம்களையும், பயன்பாடு வகைகளையும் ஆதரிக்கின்றது.
.நெட் 5.0 எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?
https://dotnet.microsoft.com/download. சென்று Download
.NET SDK x64
என்ற பட்டனை
கிளிக் செய்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யலாம். ஆனால் முதலில் விசுவல் ஸ்டுடியோ
2019 ஆனது இன்ஸ்டால் செய்யப்பட்டுருக்க வேண்டும்.
ASP-.NET CORE 5.0 என்பது என்ன?
ASP-.NET FRAMEWORK நமக்கு இருந்த வாய்ப்புகள்.
வெப் ஃபார்ம்ஸ், ASP.NET MVC, WEB API, SIGNAL R ஆகியவை.
ASP.NET CORE -ல் ASP.NET MVC, WEB API ஆகிய இரண்டும் ஒன்றினைக்கப்பட்டன. SIGNAL R தொடரப்பட்டது. ஆனால் வெப் ஃபார்ம் தொடர வில்லை. அதற்கு பதில் blazor, razor pages ஆகிய இரண்டு புதிதாக இணைக்கபட்டது. மேலும் gRPC அறிமுகப்படுத்தப்பட்டது.
ASP.NET CORE 5.0 -ல் பிளேசர் வெப் அசெம்பிளி மேம்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை