Saturday, May 8, 2021

ஜாவா ஸ்கிரிப்ட் நேர்முகத் தேர்வு வினாக்கள்.



ஜாவா ஸ்கிரிப்ட் என்பது என்ன?

'ஜாவா ஸ்கிரிப்ட் என்பது ஸ்கிரிப்ட் அல்ல்து நிரலாக்க மொழி ஆகும், இது முக்கியமாக இனையப்பக்கங்களுக்கு இன்டெர் ஆக்டிவிட்டி ஏற்படுத்தவும் மேலும்  வெப் பயன்பாடுகளை உருவாக்கவும் பயன்படுகின்றது.

இது ஆப்ஜெக்ட் ஒரியண்டட் கருத்துக்களை ஆதரிக்கின்றது. இது இண்டெர்பிரட்டட் மொழியாகும்.

html , css ஆகிய இரண்டுடன் சேர்த்து இணையப்பக்கங்கள் உருவாக்கப்பயன்படும் முக்கியமான மூன்று மொழிகளில் ஒன்றாக பயன்படுகின்றது.

இது பெரும்பாலும் பிரபலமான எல்லா பிரவுசர்களாலும் ஆதரிக்கப்படுகின்றது.

ஜாவா ஸ்கிரிப்டை உருவாக்கியது யார்?

இது முதலில் லைவ் ஸ்கிரிப்ட் என்ற பெயரிடப்பட்டது.

இது நெட்ஸ்கேப் கம்பனியால் தொன்னூர்களின் மத்தியில் உருவாக்கப்பட்டது.

ஜாவா ஸ்கிரிப்ட் என்னென்ன டேட்டா டைப்களை ஆதரிக்கின்றது.

தற்போதைய ECMA SCRIPT படி  பின் வரும் டேட்டா டைப்களை ஆதரிக்கின்றது.

  • Boolean
  • Null
  • Undefined
  • Number
  • String
  • Symbol
  • Object

ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் ஜெஸ்கிரிப்ட் என்ன வேறுபாடு?

இரண்டுமே இணையப்பக்கங்களை டைனமிக் ஆக்க பயன்படுகின்றது.

ஜாவாஸ்கிரிப்ட் ஆனது நெட் ஸ்கேப் நேவிக்கேட்டரால் உருவாக்கபட்டு கிளையண்ட் மற்றும் சர்வர் இன்டெர்நெட் பயன்பாடுகளை உருவாக்கப்பயன்படுகின்றது.

jscript என்பது எக்மாஸ்கிரிப்டின் மைக்ரோசாஃப்ட் டையலக்ட் ஆகும்.

ஜாவா ஸ்கிரிப்டின் ப்ரைமரி டேட்டா டைப்கள் யாது?

  • Number
  • String
  • Boolean
  • Undefined
  • Null

 

ஜாவா ஸ்கிரிப்டின் ப்ரைமரி அல்லாத டேட்டா டைப்கள் யாவை?

  • Object
  • Date
  • Array

ஜாவா ஸ்கிரிப்ட் வேரியபிள்களின் ஸ்கோப் யாது?

இது வேரியபிள் அறிவிக்கப்படும் இடத்தைப் பொறுத்தது. ஃப்ங்க்சனுக்கு உள்ளே அறிவிக்கப்படுவவை லோக்கல் ஆகவும் ஃபங்க்சனுக்கு வெளியே அறிவிக்கபடுபவை குளோபல் ஆகவும் செயல்படுகின்றது.

ஃபங்க்சனுக்கு உள்ளே அறிவிக்கப்படும் வேரியபிள்களை வெளியே பயன்படுத்த இயலாது.

ஜாவா ஸ்கிரிப்ட் கேஸ் சென்சிடிவ் மொழியா?

ஆம் ஜாவா ஸ்கிரிப்ட் கேஸ் சென்சிடிவ் மொழியாகும். உதாரணமாக This என்பதும் this என்பது வெவ்வேறாக அறியப்படுகின்றது.

ஜாவா ஸ்கிரிப்டில் பயன்படும் பாப் அப் பாக்ஸ்கள் யாவை?

  • Alert Box
  • Confirm Box
  • Prompt Box

எக்ஸ்டெர்னெல் ஜாவா ஸ்கிரிப்டை பயன்படுத்துவது எவ்வாறு?

எக்ஸ்டெர்னல் ஜாவா ஸ்கிரிப்ட் ஆனது .JS என்ற எக்ஸ்டென்சனுடன் இருக்கும்.இது முக்கியமாக ஒன்றுக்கு மேற்படும் இணையப்பக்கங்கள் ஒரே ஸ்கிரிப்டை பயன்படுத்த ஏதுவாக உள்ளது . ஒரு எக்ஸ்டெர்னல் ஜாவா ஸ்கிரிப்டை பின் வரும் நிரல் வரி மூலம் இனைக்கலாம்.

<script type="text/javascript" src="myscript.js"></script>

இங்கு myscript.js என்பது எக்ஸ்டெர்னல் ஜாவா ஸ்கிரிப்ட் மொழியாகும்.

ஜாவா ஸ்கிரிப்டில் டெக்ஸ்டை பிரிண்ட் செய்வது எவ்வாறு.

document.write ஃபங்க்சன் மூலம் ஜாவாஸ்கிரிப்டில் ஃபார்மில் பிரிண்ட் செய்யலாம்.

குறிப்புகள் எவ்வாறு ஜாவா ஸ்கிரிப்ட் நிரலில் எழுதப்படுகின்றது.

ஒற்றை வரி குறிப்புகள் // என்று ஆரம்பிக்கின்றது.

மல்டி லைன் குறிப்புகள் /* என்று ஆரம்பித்து */ என்று முடிகின்றது.

சான்று:

 

//this is single line comments

 

/*This is an example of

Multiline comment*/

 

ஜாவா ஸ்கிரிப்டில் ஒரு வேரியபிளை கான்ஸ்டண்ட் ஆக அறிவிக்க முடியுமா?

Ecma script 2015-ல் const என்ற கீவேர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வேரியபிளை கான்ஸ்டண்ட் ஆக அறிவிக்கலாம்.

வேரியபிள் டைப்பிங்க் யாது?

ஜாவா ஸ்கிரிப்ட் லூஸ்லி டைப்டு மொழியாகும்.ஒரு வேரியபிள் ஆனது அதற்கு மதிப்பிருத்தப்படும் டேட்டாவை பொறுத்து அதன் டைப் அறியப்படுகின்றது. ஒரு டேட்டா டைப் பொருத்தப்பட்ட வேரியபிளில் வேற்றொரு டைப் மாற்றிக் கொள்ளலாம்.

சான்று:

x=100;

x="hello";

=== எதற்கு பயன்படுகின்றது.

==== ஆபரேட்டர் ஆனது ஒரு வேரியபிள்கள் ஒரே மதிப்பு மற்றும் ஒரே டேட்டா டைப்பா என்று அறிய பயன்படுகின்றது.

டேட்டா டைப்களின் அடிப்படை குரூப் யாது?

Primary Data Types

  • String
  • Number
  • Boolean

Composite Data Types

  • Object
  • Array

Special Data Types

  • Null
  • Undefined

ஜாவா ஸ்கிரிப்டில் null ,மற்றும் undefined ஆகியவற்றின் வித்தியாசம் என்ன?

undefined என்றால் ஒரு வேரியபிள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதிப்பிருத்தப்பட வில்லை.

var undefinedThis;

alert(undefinedThis); //shows undefined

alert(typeof undefinedThis); //shows undefined

 

null என்பது மதிப்பிருத்தப்படுதல் ஆகும். அதாவது வேரியபிளுக்கு மதிப்பு கிடையாது என்பதை அறிவிக்கப்படுகின்றது.

var nullValue = null;

alert(nullValue); //shows null

alert(typeof nullValue); //shows object

ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் ஏஎஸ்பி ஸ்கிரிப்ட் எது வேகம்.

ஜாவா ஸ்கிரிப்ட் க்ளையண்ட் சைட் ஸ்கிரிப்ட். ஏஎஸ்பி என்பது சர்வர் சைட் ஸ்கிரிப்ட் என்வே ஜாவா ஸ்கிரிப்டே வேகமாக செயல் படுகின்றது.

(குறிப்பு: இப்பொழுது ஜாவா ஸ்கிரிப்டை சர்வர் சைட் மொழியாகவும் பயன்படுத்தலாம்.)

ஓரு html ஆப்ஜெக்டை டிஸ் ஏபிள் செய்வது எவ்வாறு.

document.getElementById("ctrl").disabled = true;

மீண்டும் எனேபிள் செய்ய பின் வரும் நிரல் வரியை பயன்படுத்தலாம்.

document.getElementById("ctrl").disabled = false;

html எலிமெண்டை ஜாவா ஸ்கிரிப்டில் ஆக்சஸ் செய்வது எப்படி?

டாக்குமெண்ட் ஆப்ஜெக்டை பயன்படுத்தி ஆக்சஸ் செய்யலாம்.

var myElement = document.getElementById("foo");

மேலே உள்ள வரியில் எலிமெண்டின் ஐடி foo ஆகும்.

விண்டோ ஆப்ஜெக்டின் பயன் யாது?

இது பிரவுசரில் ஓபன் செய்யப்பட்டிருக்கும் விண்டோவைக் குறிக்கின்றது..இது தற்போதைய விண்டோ பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. எல்லா குலொபள் ஆப்ஜெக்டுகள், ஃபங்க்சன்கள்          வேரியபிள்கள் எல்லாமே விண்டோவின் உறுப்பினர் ஆகின்றது.

" Access denied" IE என்ற பிழை செய்தி எதைக் குறிக்கின்றது?

இந்த பிழைச் செய்தி ஒரு விண்டோ மற்றொரு டொமைனில் உள்ள விண்டோ அல்லது ஃப்ரேமை ஓபன் செய்யும் என்பதைக் குறிக்கின்றது.

பிரவுசை பெயரை ஜாவா ஸ்கிரிப்டில் கண்டறிவது எப்படி?

கீழ் காணும் நிரல் வரிகளை பயன்படுத்தி கண்டறியலாம்.

 

<script>

  alert('Your browser is : ' + navigator.appName + " " + navigator.appCodeName);

</script>

ஒரு பிரவுசரின் அகலம், உயரத்தை கண்டறிவது  எப்படி?

 

<script>

  var myWindow = window,

  doc = document,

  elem = doc.documentElement,

  body = doc.getElementsByTagName('body')[0],

  width = myWindow.innerWidth  elem.clientWidth  body.clientWidth,

  height = myWindow.innerHeight elem.clientHeight body.clientHeight;

  alert(width + "  X  " + height);

</script>

ஸ்கிரின் ஆப்ஜெக்ட் என்பது என்ன?

விண்டோஸ் ஆப்ஜெக்ட் ஆனது ஸ்கிரின் ஆப்ஜெக்ட் என்பதைக் கொண்டுள்ளது. இது பிஸ்க்கல் ஸ்க்ரீனின் அகலம் ,உயரம், பிக்சல் டெப்த், கலர் டெப்த் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

<script>

  alert("Screen Width: "+screen.width + "    Screen Height " + screen.height);

</script>

ஜாவா ஸ்கிரிப்டை பயன்படுத்தி ஒரு ஃபார்மை சப்மிட் செய்வது எப்படி?

கீழ் வரும் வரிகளை பயன்படுத்தலாம்

document.getElementById("thisForm").submit();

இதில் thisForm என்பது ஃபார்மின் ஐடி.

decodeURI(), encodeURI() இவை யாவை?

encodeURI() என்பது ஒரு uri யை என்கோட் செய்யப் பயன்படுகின்றது.

ரிசல்டை decodeURI() என்ற ஃபங்க்சனுக்கு அனுப்பினால் ஒரிஜினல் ஸ்டிரிங்க் கிடைக்கும்.

window.onload, ondocument.getready இரண்டின் வித்தியாசம் என்ன?

ondocumentReady என்பது ஒரு டாம் எலிமெண்ட் பில்ட் ஆனதும் நிகழ்கின்றது.இமேஜ் போன்றவை லோட் ஆகும் வரை காத்திருக்காது.

window.onload  ஆனது இமேஜ் உள்ளிட்ட எல்லா  எலிமெண்ட் லோட் ஆனதும் நிகழும்.

ஜாவா ஸ்கிரிப்ட் குக்கிஸ் என்பது என்ன?

இது ஒரு வெப் சைட்டிற்கு தகவல் அனுப்பும் பொழுது நம் கணினியில் ஒரு டெக்ஸ்ட் ஃபைல் உருவாகி சில தகவல்கள் சேவ் ஆகும்.அதுவே குக்கீஸ் ஆகும். சான்றாக ஒரு இகாமர்ஸ் தளத்தில் நாம் என்னென்ன பொருள் வாங்கியிருந்தோம் ஆகியவை..

ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி குக்கீயை ஆக்சஸ் செய்யலாமா?

ஜாவாஸ்கிரிப்ட் ஆனது குக்கீஸை ரீட், ரைட், எடிட், டெலீட் செய்யலாம்.

ஜாவாஸ்கிரிப்ட் கான்செப்ட் லெவல் ஸ்கோப் கொண்டுள்ளதா?

இல்லை . ஒரு ஃபங்க்சனுக்கு உள்ளே அறிவிக்கப்படும் வேரியபிளை வெளியே ஆக்சஸ் செய்ய இயலாது.

 ஜாவா ஸ்கிரிப்டில் ஒரு ஸ்டிரிங்கின்  முதன்மை மதிப்பை கண்டறிவது எப்படி?

ValueOf() ஃபங்க்சன் அதற்கு பயன்படுகின்றது.

ஒரு ஸ்டிரிங்கை இன்டிஜெர் ஆக மாற்றுவது எப்படி?

ParseInt ஃபங்க்சன் அதற்கு பயன்படுகின்றது.

சான்று:

 

ParseInt('string',Base(optional))


நன்றி

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

 

 

 

 

 

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment