Saturday, June 19, 2021

பிளேசர் வெப் அசெம்ப்ளி என்பது என்ன?

 


பிளேசர் வெப் அசெம்ப்ளி என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன் எவ்வாறு இப்பொழுது வெப் பயன்பாடுகள் உருவாக்கப்படுகின்றது என்று பார்ப்போம்.


வெப் பயன்பாடுகள் உருவாக்குவதற்கு முற்றிலும் வேறான இரண்டு விதமான நிரலாக்க மொழிகள் பயன்படுகின்றன.

கிளையண்ட் சைடில் ஆங்குலர், ரியாக்ட், வியூ போன்ற ஜாவாஸ்கிரிப்ட் மொழிகளும் சர்வரில் சி#, ஜாவா, பிஹெச்பி போன்ற மொழிகளும் பயன்படுகின்றன.

நீங்கள்  ஒரு வெப் டெவலப்பர் ஆக தாக்கு பிடிக்க கிளையண்ட் சைட் மொழிகள், சர்வர் சைட் மொழிகள் இரண்டையுமே அறிந்திருக்க வேண்டும்.

கேள்வி என்ன வென்றால் நாம் ஏன் இரண்டு விதமான மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும் என்பது தான்.

நாம் ஏன் சிஷார்ப் மொழியையே கிளையண்ட் சைட் மற்றும் சர்வர் சைட் பயன்படுத்தக் கூடாது?


ஆம் அதையே நாம் பிளேசர் பயன்படுத்தி செய்யலாம். பிளேசர் பயன்படுத்தி இன்டெராக்டிவ் வெப் UI ஆனதை ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தாமல் சி# பயன்படுத்தியே உருவாக்கலாம்.

சிஷார்ப் கோட் ஆனது கிளையண்ட் சைட் மற்றுக்ம் சர்வர் சைட் இரண்டு பக்கத்திலுமே பயன்படுகின்றது. எனவே ஒரு சிஷார்ப் டெவலெப்பர் அவருடைய சி# அறிவை பயன்படுத்தி ஆங்குலர், ரியாக்ட் ஆகியவற்றை கற்காமல் கிளையண்ட் சைடில் நிரல் எழுதலாம்.

ஒரு வெப் பிரவுசர் எவ்வாறு சிஷார்ப் கோடை இயக்கும்?

பிரவுசர் ஆனது ஜாவாஸ்கிரிப்ட் மட்டுமே அறியும் அது எவ்வாறு சி# நிரலை இயக்கும்.

அதற்கான பதில் வெப் அசெம்ப்ளி.(சுருக்கமாக WASM)


பிரவுசர் ஆனது வெப் அசெம்ப்ளியை பயன்படுத்தி சி# நிரலை இயக்கலாம் ஜாவாஸ்கிரிப்ட் ஃப்ரேம் வொர்க்குகளான ஆங்குலர், ரியாக்ட் மற்றும் வியூ இயக்கப்படும் அதன் தளத்திலேயே இயக்கலாம்.சி# மட்டுமல்லாது எந்த மொழியாக இருந்தாலும் வெப் அசெம்ப்ளியில் இயக்கலாம்.

வெப் அசெம்ப்ளி ஆனது ஓபன் வெப் ஸ்டாண்டர்ட் அடிப்படையில் ஆனது.

இது எல்லா நேட்டிவ் பிரவுசர்களின் இன் பில்ட் ஆகும்(மொபைல் பிரவுசர் உட்பட). எனவே சி# நிரலை ஜாவாஸ்கிடிப்ட் ஆக மொழிமாற்ற தேவையில்லை. மேலும் சில்வெர் லைட், ஃப்ளாஸ் போன்று பிளக்-இன்களை நிறுவவும் தேவையில்லை.

பிளேசர் என்பது என்ன?

இதுவும் ஆங்குலர், ரியாக்ட் போன்று இதுவும் சிங்கிள் பேஜ் அப்ளிகேசன் (SPA) உருவாக்கப் பயன்படும் ஃப்ரேம் வொர்க் தான்.பிளேசரை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் ஃப்ரேம் வொர்க்குகளை பயன்படுத்தாது சிஷார்ப்பிலேயே கிளையண்ட் ட்சைட் வெப் இன்டெர் ஆக்டிவ் UI யை உருவாக்கலாம்.அதாவது .NET லைப்ரரிகளை கிளையண்ட் சைடிலும் பயன்படுத்தலாம்.


ஒரு பிளேசர் வெப் அசெம்ப்ளி பிராஜெக்டை பில்ட் செய்து இயக்கும் பொழுது நம்முடைய சோர்ஸ் கோட் அதாவது C# மற்றும் ரேசர் கோட் ஃபைல்கள் .NET Assembly ஆக கம்பைல் செய்யப்படுகின்றன.

அசெம்ப்ளி , டிபெண்டென்சி ஃபைல்கள் மற்றும் .NET RUNTIME ஆகியவை கிளையண்ட் பிரவுசருக்கு டவுன் லோட் செய்யப்படுகின்றன.

பிளேசர் வெப் அசெம்ப்ளி டாட்னெட் ரண்டைமை பூட்ஸ்ட்ராப் செய்து அசெம்ப்ளியை லோட் செய்து நிரலை இயக்குகின்றது.

பிளேசர் வெப் அசெம்ப்ளி மற்றும் பிளேசர் சர்வர்.

நிறைய பேர் பிளேசர் வெப் அசெம்ப்ளியும் பிளேசர் சர்வருன் வெவ்வேறு என நிணைக்கின்றார்கள். இல்லை உண்மையில் ஒரே பிளேசர் ஃப்ரேம் வொர்க் தான் உள்ளது.பிளேசர் வெவ் அசெம்ப்ளி மற்றும் பிளேசர் சர்வர் இரண்டும் வெவ்வேறு ஆப்சன்கள் அவ்வளவு தான். அதன் பெயரை போன்றே பிளேசர் வெப் சர்வர் ஆனது சர்வர் சைடிலும் பிளேசர் வெப் அசெம்ப்ளி கிளையண்ட் சைடிலும் பயன்படுகின்றது.


பிராஜெக்ட் ஸ்ட்ரக்சரும், கான்பிகிரேசனும் சற்றே வேறு படும் மற்ற படி அதே பிளேசர் ஃப்ரேம் வொர்க் தான்.

ஒரு பிளேசர் வெப் அசெம்ப்ளி பிரஜெக்டை பிளேசர் சர்வர் பிராஜெக்ட் ஆகவோ அல்லது ஒரு பிளேசர் சர்வர் பிராஜெக்டை பிளேசர் வெப் அசெம்ப்ளி பிராஜெக்ட் ஆகவோ எளிதில் மாற்றியமைக்கலாம்.

பிளேசர் வெப் அசெம்ப்ளி சர்வர் கம்யூனிகேசன்.

நம்முடைய தேவையை பொருத்து நம்முடைய பிரஜெக்டை முற்றிலும் பிளேசர் வெப் அசெம்ப்ளி பிராஜெக்டாக அமைக்கலாம். சான்றாக ஒரு கால்குலேட்டர் பிராஜெக்ட் சர்வருடன் தொடர்பு கொள்ள தேவையில்லை.

ஆனால் ஒரு சேல்ஸ் பிராஜெக்டில் சர்வருடன் தொடர்பு கொண்டு டேட்டாவை பெற வேண்டி இருக்கும்.


ஒரு பிளேசர் வெப் அசெம்ப்ளி பிராஜெக்டை சர்வருடன் தொடர்பு கொள்ளாமல் கிளையண்ட் சைடிலேயே அமைக்கலாம், சர்வருடர் தொடர்பு கொள்ள தேவைப்படும் பொழுது web api அல்லது சிக்னல் R பயன் படுத்தி இன்டெர் ஆக்ட் செய்யலாம்.

இது எவ்வாறு ஆங்குலர் மற்றும் ரியாக்ட் அப்ளிகேசன்கள் உருவாக்கப்படுகின்றதோ அதே மாதிரி தான்.

பிளேசர் வெப் அசெம்ப்ளி கற்றுக்கொள்ள தேவைப்படுவன

1. சி ஷார்ப்

2. HTML

3. CSS

இந்த அடிப்ப்டை அறிவு இருந்தால் எளிதாக பிளேசர் வெப் அசெம்ப்ளி கற்றுக் கொள்ளலாம்.

-நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை

 

 

 

 

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment