Wednesday, July 7, 2021

ஜாவா ஸ்கிரிப்டில் சில எளிய நிரல்கள்.

 



 

முதலில்  இஃப் எல்ஸ் பயன்படுத்தி சிறிய டெம்பரேச்சர் பயன்பாடு ஜாவா ஸ்கிரிப்டில் எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.

இதில் முதலில் vs code எடிட்டரை ஓபன் செய்து. ஒரு ஃபோல்டரை ஓபன் செய்வோம். அதில் புதிதாக temp.js என்ற ஃபைலை உருவாக்குவோம்.

இதில் முதலில் ஒரு temp என்ற வேரியபிளுக்கு டெம்பரேச்சர் அளவை மதிப்பிருத்துகின்றோம்.

பிறகு அதன் மதிப்பை if else if பயன்படுத்தி அதன் அளவிற்கேற்றாற் போல் வெளீயீடு  செய்யப்படுகின்றது.

var temp=20

 

if(temp<20){

    console.log("temperature is too cold");

}

else if(temp<30){

    console.log("temperature is moderate");

}

else{

    log("it is too hot outside");

}

வெளியீடு:

 

PS D:\javascriptprgs> node temp.js

temperature is moderate

இதில் temp என்ற வேரியபிளுக்கு 20 என மதிப்பிருத்தப் பட்டுள்ளது.முதல் இஃப் ஸ்டேட்ட்மென்ட் ஃபால்ஸ் மதிப்பை ரிடர்ன் செய்கின்றது. எனவே அடுத்த கண்டிசன் செயற்படுத்தப்படுகின்றது.இது ட்ரூ மதிப்பை ரிடர்ன் செய்கின்றது. எனவே அதில் உள்ள Console.log ஸ்டேட்மெண்ட் இயக்கப்பட்டு வெளீயீடு செய்யப்படுகின்றது.

இதில் இந்த நிரலை இயக்க பின் வரும் கமாண்ட் பயன்படுகின்றது.

node temp.js

இரண்டாவது நிரல்.

இதில் ஒரு சிறிய ஆன்லைன் பர்ச்சேஸ் பயன்பாடு பற்றி பார்ப்போம்.

அடுத்து purchase.js என்ற பெயரில் ஒரு ஃபைல் உருவாக்குவோம்.

இதில் மூன்று பூலியன் வேரியபிள்கள் உள்ளன.

அவையாவன:

isLoggedIn

isEmailVerified

cardinfo

இவை மூன்றிற்க்கும் ட்ரூ என்ற பூலியன் மதிப்பிருத்தப்பட்டுள்ளது.

நிரல் நெஸ்டெட் இஃப் முறையில் நிரல் எழுதப்பட்டுள்ளது.

let isLOggedIn=true;

let isEmailVerified=true;

let cardifo=true;

 

if(isLOggedIn){

    console.log("you are logged in");

    if(isEmailVerified){

        console.log("your email is verified");

        if(cardifo){

            console.log("you can make online purchase now");

        }

    }

 

}

நிரல் இயக்கம்.

PS D:\javascriptprgs> node purchase.js

you are logged in

your email is verified

you can make online purchase now

இதே நிரல் && என்ற லாஜிக்கல் ஆபரேட்டர் பயன்படுத்தி எவ்வாறு எழுதலாம் என்று பார்ப்போம்.

isLOggedIn=true;

isEmailVerified=true;

cardifo=true;

 

if(isLOggedIn && isEmailVerified && cardifo){

    console.log("you can make online purchase now");

}

வெளீயீடு:

PS D:\javascriptprgs> node purchase.js

you can make online purchase now

இந்த நிரலில் && என்ற லாஜிக்கல் ஆபரேட்டர் இதன் இரு பக்கமும் உள்ள வேரியபிள் ட்ரூ என்ற மதிப்பை ரிடர்ன் செய்தால் தான் ட்ரூ என்ற மதிப்பிடப்படுகின்றது.

 

மூன்றாவது நிரல்.

இதில் சிறிய லாக்-இன் செயற்பாடு உருவாக்குவது என்பது பற்றி பார்ப்போம்.

இதில் மூன்று பூலியன் வேரியபிள்கள் உள்ளன.

அவையாவன:

email

facebook

google.

இதில் நாம் ஒரு வெப் சைட்டில் லாக் இன் செய்யும் பொழுது ஒன்று நேரடியாக இமெயில் கொடுத்து லாக் இன் செய்யலாம் இல்லையெனில் ஃபேஸ் புக் , கூகிள் எதாவது ஒன்றின் மூலம் லாக் இன் செய்யலாம்

let email=true;

let facebook=false;

let google=false;

 

if(email || facebook || google)

{

    console.log("YOU are logged in");

}

இதில் || ஆபரேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒன்று ட்ரூ என்றாலும் ட்ரூ மதிப்பு ரிடர்ன் செய்யப்படும்.

வெளியீடு:

YOU are logged in

நான்காவது நிரல்.

இதுவும் லாக் இன் பயன்பாடு தான் எனினும் இது டெர்னரி ஆபரேட்டர் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.முதலில் சாதாரண நிலையில் நிரல் எழுதுவோம்.

let authenticated=true;

 

if(authenticated){

    console.log("show signout button");

}

else{

    console.log("show login button");

}

வெளீயீடு:

PS D:\javascriptprgs> node signin.js

show signout button

இதில் இஃப் எல்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே நிரல் டெர்னரி ஆபேரேட்டர் பயன்படுத்தி எழுதலாம் என்று பார்ப்போம்.

 

let authenticated=true;

 

(authenticated)?console.log("show signout button"):console.log("show log in button");

 

மேலே உள்ள நிரலில் authenticated என்பது ட்ரூ ஆனால் முதல் லாக் ஸ்டேட்மெண்டும் இல்லையெனில் இரண்டாவது லாக் ஸ்டேட்மெண்டும் இயக்கப்படும்.

ஐந்தாவது நிரல்.

இது ஒரு ரோல் அடிப்படையான செயற்கள் குறித்த சிறிய பயன்பாடு ஆகும்.

let user="testprep";

 

switch(user){

    case "admin": console.log("you have full rights");

                 break;

    case "sub admin":console.log("you can create and delete courses");

                   break;

    case "testprep":console.log("you can create and delete test");

                    break;

    case "User": console.log("you can consume content");

                 break;

    default: console.log("wrong choice");

    

 

}

இதில் ஸ்விட்ச் கேஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் user என்ற வேரியபிளுக்கு என்ன மதிப்பிருத்துகின்றோமோ அதற்கேற்றாற் போல் அதன் இயக்கம் பிரிகின்றது. எதுவுமே சரியாக இல்லையெனில் default பகுதி இயக்கப்படுகின்றது.

வெளீயீடு:

PS D:\javascriptprgs> node role.js

you can create and delete test

நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment