Saturday, August 20, 2022

நிரலாக்கத் துனுக்குகள்.

 

NGINX என்பது என்ன? ரிவெர்ஸ் ப்ராக்சி எவ்வாறு

செயற்படுகின்றது?



இந்த கட்டுரையில் nginx server என்றால் என்ன என்பதும்

ரிவர்ஸ் ப்ராக்சி எவ்வாறு செயற்படுகின்றது என்ன் என்றும்

பார்ப்போம்.

முதலில் ஒரு குடும்ப உறுப்பினர்கள் பற்றிய ஒரு இணையதளம்

ஒன்றை உருவாக்குகிண்றோம் என்று எடுத்துக் கொள்வோம்.

Familymembres.com/Muthu

Familymembres.com/karthikeyan

Familymembres.com/vishnu

இப்பொழுது Muthu என்பது ஒரு node js பக்கமாக செர்வரில்

இருக்கின்றது

Karthikeyan என்பது vue.js சர்வரில் இருக்கின்றது


Vishnu ஒரு php சர்வரில் இருக்கின்றது.


முதலில் http request ஆனது familymembers.com –க்கு

செல்லும் ஆனால் அதற்கு பின் வரும் ஒவ்வொரு மெம்பரும்

ஒவ்வொரு சர்வரில் இருப்பதால் இவற்றை இயல்பாக அனுக

முடியாது.

இங்கு தான் nginx –ன் தேவை வருகின்றது.

கிளையண்டிலிருந்து வரும் கோரிக்கை முதலில் ரிவர்ஸ் பிராசிக்கு

வரும். இங்கு nginx ஒரு ரிவரிஸ் பிராக்சி இதன் வேலை

ஒவ்வொரு url அதாவது வெவ்வேறு சர்வருக்கு ரிடைரக்ட்

செய்வது தான்.

இவற்றை வெவ்வேறு போர்ட் நம்பர்களை குறிப்பிட்டும் எளீதாக

அனுகலாம்.

ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறுபோர்ட் நம்பர்கள்

உதாரணமாக 1234, 1235, 1236.

இவற்றை ரிவர்ஸ் பிராக்சி மூலமாக அனுக முடியுமே தவிர

நேரடியாக அணுக முடியாது.

லொக்கேசன், பிராக்சி போர்ட் ஆகியவற்றீன் மூலம் ரிடைரக்ட்

செய்யப்படுகின்றது.

மேலும் ரிவர்ஸ் ப்ராக்சி ஆனது லோட் பேலன்ஸ் போன்ற

வற்றிற்கும் பயன்படுகின்றது.

ஏன் 2021-லும் PHP கற்க வேண்டும்?


PHP ஆனது வெப் டெவலப்மெண்டில் பரவலாக

பயன்படுத்தப்படுகின்றது.

இது வேகமாக இருக்கின்றது.

புதிய வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது(PHP8).

இதில் JIT கம்பைலர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிறைய FREELANCER வேலைகள் PHP –க்கு

இணையதளங்களில் உள்ளது.

இவையே இப்பொழுதும் நாம் PHP கற்க வேண்டிய தேவைகள்

ஆகும்.

Node js மற்றும் javascript என்ன வித்தியாசம்.

நோட் ஜெ எஸ் ஒரு புரோக்கிராமிங்க் மொழியல்ல அது ரன் டைம்

என்விரான்மெண்ட். அதாவது இது ஜாவாஸ்கிரிப்ட் நிரல்

இயங்குவதற்குறிய ரண்டைமை வழங்குகின்றது.

இதற்கு மாறாக ஜாவாஸ்கிரிப்ட் ஒரு நிரலாக்க மொழியாகும்.


நன்றி

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

ads Udanz

Wasm ஜாவா ஸ்கிரிப்டிற்கு மாற்றாக அமையுமா?

 




ஜாவா ஸ்கிரிப்டில் உள்ள குறைகள்.

ஜாவா ஸ்கிரிப்ட் ஆனது டைனமிக் டைப்டு மொழி ஆகும்.இது இயக்க நேரத்தில் கம்பைல் செய்யப்பட்டு v8 எஞ்சினால் ரன் ஆகின்றது. இதனால் json encoding, encryption ஆகியவற்றை திறனாக கையாள் இயலவில்லை.

இதனால் சிபீயு இன்டென்சிவ் செயல்கள கையாள முடியாது.

சி++

ரஸ்ட்

இந்த மொழிகள் முழு கணினியையும் கையாள் முடியும்.இவை கம்பைலரால் மெசின் கோடாக மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றது.இதனால் cpu intensive செயல்களை கையாள முடியும்.

ஆனால் பிரவுசரால் இவற்றை ஆக்சஸ் செய்ய இயலாது.

பிரவுசரானது  ஜாவாஸ்கிரிப்டை மட்டுமே கையாள் முடியும்.

அதுவும் sand box மூலம்.

இதற்கான தீர்வு தான் வெப் அசெம்ப்ளி.

வாஸ்ம் (வெப் அசெம்ப்ளி) ஒரு மொழியல்ல இது ஒரு கம்பைல்டு டார்கெட்.

சி++ போன்று எந்த மொழியிலும் நிரல் எழுதி வாஸ்ம் மூலம் .asm ஃபைலாக மாற்றலாம்.

Cpu intensive செயல்களை உதாரணமாக ffempeg மென்பொருள்.

இதற்கு ஒரு வீடியோ ஃபைல்களை இன்புட்டாக கொடுத்தால் அதை எடிட் செய்யவோ அல்லது ஆடியோ ஃபைலாக மாற்றவோ முடியும்.

Ffempeg ஆனது சி++ ல் எழுதப்பட்டது.

இதை வாஸ்ம் கொண்டு மொழி பெயர்த்து பைனரி கோடாக மாற்றி பிரவுசரில் இயக்க முடியும்.அதுவும் சாண்ட் பாக்சில் தான் ரன் ஆகும்.

இந்த பைனரி ஃபைலால் பிரவுசர் தவிர்த்து மற்றவற்றை அணுக முடியாது. ஏனெனில் இதுவும் சாண்ட்பாக்சில் இயங்குவது தான்.

எனவே இதன் முதல் பிளஸ் பாயிண்ட் செக்யூரிட்டி. அடுத்தது செயல்திறன்.

இதற்கு v8 Engine தேவையில்லை.

நேரடியாக இயங்கும்.

 

இது ஒரு 5mb உள்ள  வாஸ்ம் பைனரி ஃபைலை டவுன் லோட் செய்தால் டவுன் லோட் ஆகும் பொழுதே கம்பைலும் ஆகும் இதனால் நிரல் வேகமாக இயங்கும்.

இப்பொழுதைய கேள்வி என்னவென்றால் வெப் அசெம்ப்ளி எதிர்காலத்தில் ஜாவாஸ்கிரிப்டிற்கு மாற்றாக அமையுமா?

இல்லை.

ஏனெனில் வாஸ்ம் ஆனது ஜாவாஸ்கிரிப்ட் உடன் சேர்ந்தே இயங்குகின்றது.

ஒரு ஃபைலை பிரவுசர் இயக்கும் பொழுது ஜாவாஸ்கிரிப்ட் ஆனது cpu intensive செயல்களை வெப் அசெம்ப்ளிக்கு அனுப்புகின்றது.வாஸ்ம் அதை இயக்கி ஜாவாஸ்கிரிப்டிற்கு திரும்ப அனுப்புகின்றது.

மேலும் வெப் அசெம்ப்ளியால் DOM-ஐ அணுக முடியாது.ஜாவாஸ்கிரிப்ட் மட்டுமே அணுக முடியும்.

சரி

இறுதியாக முடிவிற்கு வருவோம்.

வெப் அசெம்ப்ளீ ஆனது ஜாவாஸ்கிரிப்டுடன் இணைந்தே இயங்குகின்றது.

எனவே வெப் அசெம்ப்ளியால் ஜாவாஸ்கிரிப்டின் எதிர்காலம் பாதிக்கப்படாது.

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

 

 

 

 

ads Udanz