Saturday, August 20, 2022

Wasm ஜாவா ஸ்கிரிப்டிற்கு மாற்றாக அமையுமா?

 




ஜாவா ஸ்கிரிப்டில் உள்ள குறைகள்.

ஜாவா ஸ்கிரிப்ட் ஆனது டைனமிக் டைப்டு மொழி ஆகும்.இது இயக்க நேரத்தில் கம்பைல் செய்யப்பட்டு v8 எஞ்சினால் ரன் ஆகின்றது. இதனால் json encoding, encryption ஆகியவற்றை திறனாக கையாள் இயலவில்லை.

இதனால் சிபீயு இன்டென்சிவ் செயல்கள கையாள முடியாது.

சி++

ரஸ்ட்

இந்த மொழிகள் முழு கணினியையும் கையாள் முடியும்.இவை கம்பைலரால் மெசின் கோடாக மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றது.இதனால் cpu intensive செயல்களை கையாள முடியும்.

ஆனால் பிரவுசரால் இவற்றை ஆக்சஸ் செய்ய இயலாது.

பிரவுசரானது  ஜாவாஸ்கிரிப்டை மட்டுமே கையாள் முடியும்.

அதுவும் sand box மூலம்.

இதற்கான தீர்வு தான் வெப் அசெம்ப்ளி.

வாஸ்ம் (வெப் அசெம்ப்ளி) ஒரு மொழியல்ல இது ஒரு கம்பைல்டு டார்கெட்.

சி++ போன்று எந்த மொழியிலும் நிரல் எழுதி வாஸ்ம் மூலம் .asm ஃபைலாக மாற்றலாம்.

Cpu intensive செயல்களை உதாரணமாக ffempeg மென்பொருள்.

இதற்கு ஒரு வீடியோ ஃபைல்களை இன்புட்டாக கொடுத்தால் அதை எடிட் செய்யவோ அல்லது ஆடியோ ஃபைலாக மாற்றவோ முடியும்.

Ffempeg ஆனது சி++ ல் எழுதப்பட்டது.

இதை வாஸ்ம் கொண்டு மொழி பெயர்த்து பைனரி கோடாக மாற்றி பிரவுசரில் இயக்க முடியும்.அதுவும் சாண்ட் பாக்சில் தான் ரன் ஆகும்.

இந்த பைனரி ஃபைலால் பிரவுசர் தவிர்த்து மற்றவற்றை அணுக முடியாது. ஏனெனில் இதுவும் சாண்ட்பாக்சில் இயங்குவது தான்.

எனவே இதன் முதல் பிளஸ் பாயிண்ட் செக்யூரிட்டி. அடுத்தது செயல்திறன்.

இதற்கு v8 Engine தேவையில்லை.

நேரடியாக இயங்கும்.

 

இது ஒரு 5mb உள்ள  வாஸ்ம் பைனரி ஃபைலை டவுன் லோட் செய்தால் டவுன் லோட் ஆகும் பொழுதே கம்பைலும் ஆகும் இதனால் நிரல் வேகமாக இயங்கும்.

இப்பொழுதைய கேள்வி என்னவென்றால் வெப் அசெம்ப்ளி எதிர்காலத்தில் ஜாவாஸ்கிரிப்டிற்கு மாற்றாக அமையுமா?

இல்லை.

ஏனெனில் வாஸ்ம் ஆனது ஜாவாஸ்கிரிப்ட் உடன் சேர்ந்தே இயங்குகின்றது.

ஒரு ஃபைலை பிரவுசர் இயக்கும் பொழுது ஜாவாஸ்கிரிப்ட் ஆனது cpu intensive செயல்களை வெப் அசெம்ப்ளிக்கு அனுப்புகின்றது.வாஸ்ம் அதை இயக்கி ஜாவாஸ்கிரிப்டிற்கு திரும்ப அனுப்புகின்றது.

மேலும் வெப் அசெம்ப்ளியால் DOM-ஐ அணுக முடியாது.ஜாவாஸ்கிரிப்ட் மட்டுமே அணுக முடியும்.

சரி

இறுதியாக முடிவிற்கு வருவோம்.

வெப் அசெம்ப்ளீ ஆனது ஜாவாஸ்கிரிப்டுடன் இணைந்தே இயங்குகின்றது.

எனவே வெப் அசெம்ப்ளியால் ஜாவாஸ்கிரிப்டின் எதிர்காலம் பாதிக்கப்படாது.

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

 

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment