Saturday, October 8, 2022

பைத்தான் ட்ஜாங்கோ அறிமுகம்.

 



பைத்தான் என்பது இலவசம் மற்றும் ஒபென் ஸ்சோர்ஸ்  வெப் டெவலெப்மென்ட் ஃப்ரேம் வொர்க் ஆகும்.

நாம் இலவசம் மற்றும் ஒபென் சோர்ஸ் என்றால் என்னவென்று அறிவோம் .ஆனால் அது என்ன ஃப்ரேம் வொர்க்.

ஃப்ரேம்வொர்க் என்பது காம்பனண்ட்ஸ் மற்றும் பேக்கேஜின் கலவையாகும்.

ஏன் ஃபரேம் வொர்க்.

நாம் தொடக்கத்தில் இருந்து முற்றும் நிரல் எழுத தேவையில்லை.

லாக் இன் மற்றும் டேட்டா பேஸ் கனக்டிவிட்டி என வெவ்வேறு காம்பனண்டுகளை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக MVC பற்றி நாம் அறிவோம்.

அதாவது மாடல் வியூ கன்ட் ரோலர்.

மாடல் என்பது டேட்டா , வியூ என்பதுஃப்ரண்ட் எண்ட் இன்டெர்ஃபேஸ், கண்ட் ரோலர்  இவற்றை கையாளுவது.

ஆனால் ட்ஜாங்கோவில் சற்றே வித்தியாசமாக MVT பயன்படுகின்றது அதாவது மாடல் ,வியூ, டெம்ப்லேட்.

இங்கு MVT-யில்  வியூ என்பது டெம்ப்லேட்டையும், கண்ட் ரோலர் என்பது வியூவையும் ரிப்லேஸ் செய்கின்றது.

இன்றைய கால கட்டத்தில் எல்லா நிறுவனங்களும் அதற்கென்று இணையதளங்களை வைத்திருக்கின்றன.

ஆன்லைன் இகாமர்ஸ்  வெப்சைட் இருக்கின்றன. அமேசான் ,ஃப்ளிப்கார்ட் என்று. வாகனம் புக் செய்ய உபெர் போன்ற தளன்ங்கள் இருக்கின்றன . இவற்றுக் கெல்லாம் தொடக்கத்தில் இருந்து நிரல் எழுதாமல் ஃப்ரேம் வொர்க்குகளை பயன்படுத்தலாம்.

ஒரு இணைய தளத்தை  உருவாக்க  ஃப்ரண்ட் எண்டில் HTML, CSS, JAVA SCRIPT போன்றவை பயன்படுகின்றன.

HTML என்பது ஒரு வெப் பக்கத்தில் கட்டமைப்பையும் CSS என்பது அதை டிசைன் செய்யவும் ஜாவாஸ்கிரிட் இன்டெர் ஆக்டிவ் ஆக வெப் சைட்டை பயன்படுத்தவும் பயன்படுகின்றன.

பேக் எண்டில் ஜாவா, ஏஎஸ்பி .நெட், பிஹெஸ்பி,பைத்தான் போன்றவை பயன்படுத்தப்படுகின்றது.

பைத்தானில் உள்ள ஃப்ரேம் வொர்க்கில் பிரபலமானது ட்ஜாங்கோ ஆகும்.

இதை ஏன் பயன்படுத்த வேண்ட்மென்றால் வேகமானது, பாதுகாப்பானது, பல்மடங்கு உருவாக்க தக்கது ஆகும். பல் மடங்கு என்றால் ஒரு வெப் சைட்டின் பயனர்கள் வருங்காலத்தில் பெருகலாம் இணையதளக்களும் அதற்கு ஏற்றாற் போல் பல்மடங்கு பெருகத்தக்கதாக இருக்க வேண்டும்.

நிறுவுதல்.

 முதலில் பைத்தானை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.அதற்கு கூகுளில் python என கொடுத்து முதல் வரும் லிங்கின் மூலம் பைத்தானை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

விண்டொஸ்,மற்றும் லினக்ஸ் ஆகியவற்றிற்கு வெவ்வேறு செட் அப் பைல்கள் உள்ளன. அதே போல் 32 பிட், 64 பிட் என் இரண்டுக்கும் வெவ்வேறு செட் அப் உள்ளது.

வழக்கமான நெக்ஸ்ட், நெக்ஸ்ட் இன்ஸ்டாலேசன் தான். நிற்வும் பொழுது முதல் பக்கத்தில் add python to path என்ற செக் பட்டனை மறக்காமல் செக் செய்ய வேண்டும்.

கமாண்ட் பிராம்ப்டில் python ---version எனக்கொடுத்தால் வெர்சன் எண் காட்டும் அதே போல் pip –version எனக்கொடுத்தால் வெர்சன் எண் காட்டும்.

அவ்வாறு காட்ட வில்லையெனில் இன்ஸ்டால் ஆகவில்லை என் அர்த்தம்.

Django-admin –versionஎனக்கொடுத்தால் பிழை சுட்டப்படும் ஏனெனில் நாம் பைத்தான் இன்ஸ்டால் செய்ய வில்லை.

நாம் இப்பொழுது ட்ஜாங்கோவை நிறுவுவதற்கு முன் ஒரு விர்ச்சுவல் என்விரான்மெண்டை உறுவாக்கி அதற்குள் நிறுவலாம். இதன் மூலம் ஒவ்வொரு பிராஜெக்டிற்கும் வெவ்வேறு கான்பிக்ரேசன்  உருவாக்கலாம்.

கமாண்ட் பிராம்ப்டில் pip install virtualenvwrapper-win என டைப் செய்து எண்டர் தட்டவும்.

அதற்கடுத்து இப்பொழுது விர்ச்சுவல் என்விரான்மெண்டிற்கான செட் அப் கிடைத்திருக்கின்றது. இப்பொழுது test என்ற என்விரன்மெண்டை உருவாக்குவோம்.

அதற்கு mkvirtualenv test எனக்க் கொடுத்து எண்டர் தட்டவும்.

இப்பொழுது டெஸ்ட் என ஒரு விர்ச்சுவல் என்விராண்ட் மெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

pip install django

எனக்கொடுக்கவும். இப்பொழுது test என்ற என்விரான்மெண்டில் ட்ஜாங்கோ நிறுவ பட்டு விட்டது.

இப்பொழுது django-admin –version எனக்கொடுத்தால் வெர்சன் எண் காட்டப்படும்.

பிராஜெக்டிற்கான ஒரு டைரக்டரியை உருவாக்கவும்.

இப்பொழுது ட்ஜாங்கோ ஆனது test என்ற விர்ச்சுவல் என்விரான்மெண்டில் மற்றும் நிறுவப்பட்டுள்ளது முழுக் கணினியில் மட்டுமல்ல என்பதக் கவனத்தில் கொள்ளவும்.

mkdir projects

எனக்கொடுத்து ஒரு டைரக்டரி உருவாக்கவும்.

cd projects

எனக் கொடுத்து அந்த டைரக்டரிக்குள் செல்லவும்.

இப்பொழுது projects டைரக்டரிக்குள் சென்றால் அது காலியாக இருக்கும்

django-admin startproject karthikeyan

எனக் கொடுத்தால் கார்த்திகேயன் என்ற ட்ஜாங்கோ பிராஜெக்ட் உருவாக்கப்படும்.

இப்பொழுது projects டைரக்டரிக்குள் சென்றால் manage.py என்றொரு ஃபைலும் karthikeyan என்ற ஃபோல்டரும் இருக்கும்.

Karthikeyan என்ற டைரக்டரிக்குள்

--init—

Settings

Urls

Wsgi

என்று ஃபைல்கள் இருக்கும்.

இவற்றில் செட்டிங்க்ஸ் என்பது டேட்டா பேஸ் கனக்டிவிட்டி போன்ற செட்டிங்க்சிற்க்கு பயன்படுகின்றது.

Urls என்பது பிரவுசரில் நாம் பயன்படுத்த வேண்டிய urls-ன் லிஸ்ட் இருக்கும்.

Wsgi என்பது டிபிளாய்மெண்ட் சம்பந்தப்பட்டது ஆகும்.

Cd klarthikeyan

எனக்கொடுத்து பிராஜெக்டிற்குள் செல்லவும்.

பிராஜெக்டை இயக்க பின் வரும் கமாண்டை பயன்படுத்தவும்

Python manage.py runserver

எனக்கொடுத்டு எண்டர் தட்டவும்.

பிறகு ஸ்கிரீனில் உள்ளவாறு

http://127.0.0.1:8000

என இருக்கும்.

இந்த url –ஐ பிரவுசர் அட்ரஸ்பாரில் டைப் செய்தால் வெளியீடு கிடைக்கும்.



நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

பின் குறிப்பு:

பைத்தான் ஆன்லைனில் கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்:

91 9629329142


ads Udanz

No comments:

Post a Comment