சிஷார்ப் -டாட் நெட்க்கென பிரெத்யேகமாக உருவாக்கப்பட்ட மொழியாகும்.
இது பொருள் நோக்கு நிரலாக்கமாகும்.(object oriente dlanguage)
c மற்றும் c++ ஆகியவற்றை அடிப்ப்டையாகக் கொண்டது.
vbயின் எளிமையும் , சி++ உடைய திறன்களையும் ஜாவா வின் அழகையும் கொண்டது.
பயன்கள்:
டாஸ் அடிப்படையிலான பயன்பாடுகள்.
விண்டோஸ் பயன்பாடுகள்.
விண்டோஸ் கண்ட்ரரோல்கள் உருவாக்குதல்.
ASP.NET திட்டங்கள்(ப்ரொஜெக்ட்)
web controls
இணைய சேவைகள்.
டாட்நெட் ஒரு அறிமுகம்.
இணையம் அறிமுகப் படுத்தப்பட்ட பின் இணைய பயன்பாடுகள்(applications) உருவாக்குவதற்காக ஜாவா அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஜாவா பெரிய வெற்றி பெற்ரது. மைக்ரோஃஸாப்ட் சார்பாக இணைய மொழி யேதும் இல்லை.
மைக்ரோஃஸாப்ட் அப்போது புகழ் பெற்றிருந்த தனது மொழியான vb6ல் இணைய கருத்துருக்களை உட்புகுத்தியது.
ஆனால் அது வெற்றி பெறவில்லை.அதன் பின்னர் டாட்நெட்டை அறிமுகப்படுத்தியது.
ஜாவாவைப் பொருத்தவரை பொதுவாக இப்படிச் சொல்வர்கள்."write once in java and run any where".அதாவது ஜாவா ஒரு portable மொழியாகும்.ஒரு பிளாட்ஃபார்மில் எழுதிய நிரலை(program) எந்த பிளாட்ஃபார்மிலும் அப்ப்டியே இயக்கலாம். ஆனால் டாட்நெட்டிலோ எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆம் டாட்நெட் c#,c++,vb,cobol என நிறைய மொழிகளை ஆதரிக்கிறது.
டாட்நெட்டில் எந்த மொழியில் எழுதினாலும் அவை முதலில் complie செய்யப் ப்ட்டு il(intermediate language) ஆக மாற்றப் படுகிறது. இந்தIL(MSIL) ஜாவாவின் class ஃபைல்கள் போன்றதன்று. ஏனென்றல் class ஃபைல்கள் படிக்க முடியாதவை.ஆனால்MSIL தனி மொழியாகும். இதற்கென்றே தனியாக புத்தகங்ககள் உண்டு.
டாட்நெட் பின்வரும் மொழிகளை ஆதரிக்கின்றது.
c#
c++
visual basic
jscript.
மேலும் மூன்ராம் நபர் மொழிகளான
cobol
eiffel
perl
phython
small talk.
mercury
ஆகியவற்றையும் அதரிக்கின்றது.
டாட்நெட்டின் பயன்கள்
1. எளிதானது.
2. விரைவானது.
3. நிறைய library class ஐ உள்ளடக்கியது.இவை எல்லா மொழிக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.
4. நிறுவது எளிது.
5. குறைந்த பட்ச பிழைகள் கொண்டது.
c#ம் டாட்நெட்டும்
சி ஷார்ப் -டாட் நெட்க்கென பிரெத்யேகமாக உருவாக்கப்பட்ட மொழியாகும். டாட்நெட்டில் பயன்பாடுகள் உருவாக்கும் போது நிரலாளர்கள் (project) பெரும் பாலும் தேர்ந்து எடுக்கும் மொழி c# ஆகும்.சமீபத்திய பதிப்பு (version ) c# 4.0 ஆகும்.
No comments:
Post a Comment