Monday, October 10, 2011

c# chapter-2 .NET பயன்பாடுகள்


.
.NET கொண்டுவெவ்வேறு விதமான பயன்பாடுகளை உருவாக்கலாம். மேலும் ஒரு டாட் நெட் solution வெவ்வேறு  மொழியில் எழுதப்பட்ட திட்டங்களை கொண்டிருக்கலாம். இது டாட் நெட்டின் interoperability பண்பு மூலம் சாத்தியமாகிறது.
கன்சோல்  பயன்பாடுகள்.
Console பயன்பாடுகள் graphics இருக்காது. Characters மட்டுமே இருக்கும்.
Public static void Main(String args)
என்ற வாக்கியம் console பயன்பாடுகளின் நுழைவாயிலாக உள்ளது. Read,ReadLine,write,WriteLine ஆகிய system.console ல் உள்ள method களை
கன்சோல்  பயன்பாடுகள் உபயோகித்து கொள்கின்றன.
விண்டோஸ் பயன்பாடுகள்.
விண்டோஸ் பயன்பாடுகளுக்கு ஒரு உதாரணம் ms-word ஆகும்.
பொதுவாக கட்டளைகள் graphics மூலம் icon ஆக கொடுக்கப் பட்டிருக்கும்.
அவற்றை சொடுக்குவதன் மூலம் நாம் அவற்றை இயக்கலாம். டாட் நெட் கொண்டு இது போன்ற விண்டோஸ் பயன்பாடுகளை உருவாக்கலாம்.
Windows control
Tool box ல் உள்ள ஒரு கன்ரட்ரோல் அல்லது அதிக கன்ட்ரோல்களை கொண்டு புதிய  கன்ட்ரோல்களை உருவாக்கலாம். vb6 அல்லது vc++ கொண்டு  activex control  உருவாக்குவதை அறிந்தவர்கள் .நெட் கொண்டு உருவாக்குவது எளிது.
இணைய பயன்பாடுகள்.
இணைய தளங்க்களை asp.net கொண்டு உருவாக்கலாம்.வெப் சர்வரில் உள்ள asp.net engine,  asp.net வரிகளை இயக்கி html வரிகளாக மாற்றுகிறது.
இணைய உலாவி(browser) அவற்றை இயக்கி இணைய பக்கங்களாக மாற்றுகிறது. Asp.net கொண்டு நிகழ் நேர(dynamic) வெப் தளங்க்களை உருவாக்கலாம்.
இணைய சேவைகள்.
Web services எனபது மற்ற வெப் தளங்களுக்கு தகவள்களை பகிர்ந்து கொள்வது ஆகும். உதாரணமாக climate,stock market report  ஆகியவற்றை webservices மற்ற வெப் தளங்களுக்கு சேவையாக வழங்குகிறது.
பொதுவாக டாட் நெட்டின் நோக்கமே மென்பொருள்களை வழங்குவதே ஆகும். (software as services).
o

 

ads Udanz

No comments:

Post a Comment