Saturday, September 22, 2012

Java 13ம் பாடம். மெத்தட்ஸ்(methods)


 

 

அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது மெத்தட்ஸ் பற்றி . ஒவ்வொரு கிளாஸிலும் வேரியபிள்ஸ் மற்றும் மெத்தட்ஸ் இருக்கும் என்பதை அறிவோம்.

இதில் மெத்தட் ஆனது நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. அவையாவன

  1. மெத்தட் பெயர்
  2. மெத்தட் திருப்பி அனுப்பும் இனம்(return type)
  3. பராமீட்டர்ஸ் தொகுதி(parameters list)
  4. method body.

 

பொதுவாக மெத்தட் signature எனப்படுவது மெத்தட் பெயர், மெத்தட் திருப்பி அனுப்பும் இனம் மற்றும் பராமீட்டர்ஸ் தொகுதி ஆகியவை இணைந்த்ததாகும். ஜாவாவில் வெவ்வேறு மெத்தட்கள் ஒரே பெயரில் இருக்க முடியும்.ஆனால் அவை ஏற்கும் பராமீட்டர்ஸ் தொகுதி வேறுபடும். இது method overloading எனப்படுகின்றது.

 

Syntax:

 

Returntype methodname (type1 arg1, type2 arg2, type3 arg3….)

{

       //body of the method

}

 

Method திருப்பி அனுப்பும் இனமானது primitive type ஆகவோ அல்லது class பெயராகவோ இருக்கலாம். ஒரு மெத்தட் ஆனது எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாமலும் இருக்கலாம் .அப்பொழுது return type ஆனது void என குறிப்பிடப்படுகின்றது.

 

Parameter list ஆனது variable declaration தொகுப்பாகும். பராமீட்டர் இல்லாமலே ஒரு மெத்தட் அழைக்கப்படலாம்.

 

 

 

 

நிரல்:

 

class Box

{

    double width;

    double height;

    double depth;

   

    double volume()

    {

        return width*height*depth;

    }

    void setdim(double w, double h, double d)

    {

        width=w;

        height=h;

        depth=d;

    }

}

public class BoxDemo {

 

  

    public static void main(String[] args) {

       

        Box mybox1=new Box();

        Box mybox2=new Box();

        double vol;

       

     mybox1.setdim(10,20,15);  

     mybox2.setdim(3,6,9);

    

    

     vol=mybox1.volume();

     System.out.println("volume is" + vol);

    

     vol=mybox2.volume();

     System.out.println("volume is" + vol);

       

    }

}

மேலே உள்ள நிரலில் Box class ஆனது இரு மெத்தட்களை கொண்டுள்ளது . முதலில் உள்ளது volume(). இது அழைக்கப்படும் பொழுது எந்த parameterம் அனுப்பபட வில்லை.அதே நேரத்தில் volume கணக்கிடப்பட்டு double type value ஆனது திருப்பி அனுப்பபடுகின்றது. இரண்டாவதாக உள்ள மெத்தட் setdim ஆகும் இதற்கு மூன்று double மதிப்புகள் அனுப்பபடுகின்றது. இந்த மெத்தட் எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பவில்லை எனவே void  என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 
ads Udanz

No comments:

Post a Comment