Monday, June 1, 2015

சி ஷார்ப் டெலிகேட்ஸ்(DELEGATES)


DELEGATE என்ற வார்த்தையின் அர்த்தம் பிரதிநிதி என்பதாகும். அதாவது ஒருவர் மற்றொருவரின் சார்பாக செயல்படுதலாகும். DELEGATE என்பது ஒரு மெத்தடின் சார்பாக செயல்படும் ஒரு reference object ஆகும். இது c++-ன் function pointer-க்கு இணையானதாகும். DELEGATE –ஐ இயக்கினால் மெத்தட் கால் ஆகும்.

DELEGATE-ன் signature-ம் மெத்தடின் signatureம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
  1. DELEGATE அறிவித்தல்
  2. DELEGATE –ன் instance உருவாக்கி மெத்தடிக்கு assign செய்தல்
  3. DELEGATE அழைத்தல்

syntax:
 
 delegate returntype delegateName (parameter); 

இதில் delegate என்பது keyword ஆகும். returntype, parameter என்பது மெத்தடின் signature
ஆகும். இதுவும் எந்த மெத்தட் சார்பாக இந்த மெத்தட் செயல் பட போகின்றதோ அதன் signature-ம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
2. DELEGATE –ன் instance உருவாக்கி மெத்தடிக்கு assign செய்தல்
இதன் இரண்டு படிகள்
முதல் படி:

delegateName objectOfDelegate=null; 

இரண்டாவது படி

objectOfDelegate=functionName;

     3,       DELEGATE அழைத்தல்
invoke மூலம் டெலிகேட்டை அழைக்கலாம்.

objectOfDelegate.Invoke(parameterValue); 

உதாரணம்:

using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;

namespace Delegates
{
    delegate int  Arithop(int x,int y);
    class MathOPeration
    {
        public static int Add(int a, int b)
        {
            return (a + b);
        }

    }

    class Program
    {
        static void Main(string[] args)
        {
            Arithop op1 = new Arithop(MathOPeration.Add);
            int result = op1.Invoke(10, 20);
            Console.WriteLine("result=" + result);
            Console.ReadLine();
        }
    }
}

delegate int  Arithop(int x,int y);  என்பது Arithop என்ற டெலிகேட்டின் அறிவிப்பு ஆகும். இதன் return type ஆனது int ஆகும். இரண்டு int parameters ஐ ஏற்கின்றது.


MathOPeration என்ற கிளாஸில் Add என்கின்ற static மெத்தட் உள்ளது . இதன் return type ஆனது int ஆகும். இரண்டு int parameters ஐ ஏற்கின்றது.ஆகவே டெலிகேட்டின் signature-ம் மெத்தடின் signature-ம் ஒரே மாதிரியாக உள்ளது.

 Arithop op1 = new Arithop(MathOPeration.Add);

என்பது Arithop  டெலிகேட்டின் op1 என்கின்ற instance உருவாக்கி அதற்கு Add  மெத்தடை assign செய்கின்றது. பின்

            int result = op1.Invoke(10, 20);

என்பது op1 என்கின்ற instance மூல்ம் Add method call ஆகின்றது.

 நான் மதுரையில் FULL DOTNET பாடங்கள் வ்குப்புகள் நடத்தி வருகின்றேன்

CONTENTS:

C#, VISUAL C#,VB.NET,ASP.NET,ADO.NET,WPF WCF ,AJAX ,MVC,RAZOR, JQUERY,LINQ, GRID VIEW,CHART SQL SERVER ஆகியவை ஆகும் 

தொடர்புக்கு:
91 96293 29142
please also visit:
http://karthikeyantutorials.com/
ads Udanz

No comments:

Post a Comment