Wednesday, June 20, 2018

டாட் நெட் கற்றுக் கொள்ளலாம்.-பகுதி-3



உங்கள் முதல் சி # நிரல்:
இப்பொழுது விசுவல் ஸ்டுடியோவில் எவ்வாறு விண்டோஸ் அப்ளிகேசன் உருவாக்கலாம் என்று பார்ப்போம்.
Form என்பது அதில் முதலாவதாக உள்ளது. அதில் நாம் லேபிள், டெக்ஸ்ட் பாக்ஸ், பட்டன், ரேடியோ பட்டன், செக்பாக்ஸ், போன்ற வற்றிற்கு கண்டைனராக ஃபார்ம் செயல் படுகின்றது..விசுவல் அப்ளிகேசனுக்கும் கன்சோல் அப்ளிகேசனுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஃபார்ம் தான்.
முதல் அப்ளிகேசனை உருவாக்க ஃபைல் மெனுவை க்ளிக் செய்து new project என்பதை க்ளிக் செய்யவும். டையலாக் பாக்ஸ் ஒன்று ஓபன் ஆகும்.இடது புறம் templates என்பதன் கீழ் உள்ள visual c# என்பதை செலக்ட் செய்யவும்.

வலது புறம் Windows Forms Application என்பதை தேந்தெடுக்கவும்.கீழே உள்ள name என்பதில் பெயர் மாற்றுவதாக இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். Ok  கிளிக் செய்யும் பொக்ஷ்ழுது கீழே உள்ளவாறு தோன்றும்.
டூல் பாக்ஸ் இடது புறத்தில் தோன்றும். வலது புறம் ஃபார்ம் இருக்கும்.
டூல் பாக்ஸில் உள்ள தலைப்பில் வலது புறம் pin சிம்பளை கிளிக் செய்தால் டூல் பாக்ஸ் நிரந்தரமாக தோன்றும்.
கீழே உள்ள படங்களில் Solution Explorer உள்ளது.    



முதலாவதாக உள்ளது கன்சோல் அப்ளிகேசனின் SOLUTION EXPLORER. Iஇரண்டாவதாக உள்ளது விண்டோஸ் அப்ளிகேசனுக்குடையதாகும்.இரண்டாவதில் Fom1.cs என்ற பெயரில் ஒன்று இருப்பதை கவனிக்கவும். இரண்டுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசம் அது தான்.
And here's the code from the Console Application:



மேலே லைப்ரரி கிளாஸ்களை இம்போர்ட் செய்ய using பயன்படுகின்றது.
prograqm.cs –ல்  Main மெத்தட் தான் ஒரு நிரலின் துவக்கம் ஆகும். அதில் உள்ள கோடிங்க் தான் முதன் முதலாய் execute ஆகும். அதில் முடிவில் Application.Run(new Form1()) என்று இருப்பதைக் கவனிக்கவும். எனவே அப்ளிகேசன் தொடங்கும் பொழுது  முதலில்  form1 தான் முதலில் இயங்கும்..
சொல்யூசன் எக்ஸ்ப்ளோரரில் form1.cs என்பதில் வலது கிளிக் செய்து view code என்பதை தேர்வு செய்தால் அதற்குறிய கோடிங்க் விண்டோ ஓபன் ஆகும். View Designer என்பதில் கிளிக் செய்தால் டிசைனிங் விண்டோ ஓபன் ஆகும்.
கீழே உள்ளது கோடிங் விண்டோ ஆகும்.

கீழே உள்ளது டிசைனிங் விண்டோ ஆகும்.


மேலே உள்ள டிசைனர் விண்டோ ஃபார்மில் பட்டன், டெக்ஸ்ட் பாக்ஸ் முதலியவற்றை சேர்த்திக் கொள்ளலாம். இதை ரன் செய்ய f5 கீயை பிரஸ் செய்யவும்.
அல்லது Debug மெனுவில் உள்ள start Debugging என்பதை கிளிக் செய்யவும்.
சான்று நிரல்-1
கீழே உள்ளவாறு டிசைன் செய்து கொள்ளவும்.அதாவது ஒரு லேபிள்,பட்டன்,டெக்ஸ்ட்பாக்ஸ் முதலியவற்றை டூல் பாக்ஸில் செலெக்ட் செய்து ஃபார்மில் டிராக் செய்து கொள்ளவும்.
F4 என்கின்ற கீயை பிரஸ் செய்தால் ப்ராப்பர்டி விண்டோ தோன்றும். அதில் உள்ள டெக்ஸ்ட் பிராப்பர்டிக்கு லேபிளில் Enter your Name என்றும் பட்டனுக்கு click என்றும் மாற்றவும். டெக்ஸ்ட் கன்ட்ரோலின் name  இயல்பாக textBox1 என்று இருக்கும். அதை மாற்றுவது என்றால் மாற்றிக் கொள்ளலாம்.
பட்டனை டபிள் கிளிக் செய்தால் பட்டன் கிளிக் ஈவென்ட் கோடிங்க்  தோன்றும்.
அதில் பின் வருமாறு கோடிங் எழுதவும்.
private void button1_Click(object sender, EventArgs e)
        {
            MessageBox.Show("hello " + textBox1.Text);
        }
நாம் டெக்ஸ்ட் பாக்ஸில் டெக்ஸ்ட் என்டர் செய்யும் பொழுது (உதாரணமாக முத்து கார்த்திகேயன்) hello என்பதுடன் பெயர் சேர்த்து மெசேஜ் பாக்ஸில் தோன்றும்.
சான்று நிரல்-2
கீழே உள்ள நிரலில் இரண்டு எண்கள் இன்புட் வாங்கப்பட்டு அதை கூட்டல் செய்து மெசேஜ் பாக்ஸில் வெளியீடு செய்வதற்கு இது பயன்படுகின்றது
கீழே உள்ளவாறு டிசைன் செய்து கொள்ளவும்.







முதல் டெக்ஸ்ட்பாக்ஸ் பெயர் txtFirstNumber என்றும் இரண்டாவது டெக்ஸ்பாக்ஸ் பெயர் txtSecondNumber என்றும் மாற்றிக் கொள்ளவும்.
பின் பட்டன் கிளிக் ஈவண்டில் கீழ் வருமாறு கோடிங் எழுதவும்.

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            int FNumber = int.Parse(txtFirstNumber.Text);
            int SNumber = int.Parse(txtSecondNumber.Text);
            int sum = FNumber + SNumber;
            MessageBox.Show("sum=" + sum);

           
         }



டெக்ஸ்பாக்ஸில் நாம் வாங்கும் பெயர் string ஆக இருக்கும். எனவே அதை int ஆக மாற்றிக் கொள்வதற்கு int.parse மெத்தட் பயன்படுகின்றது.
வெளியீடு:


               நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment