Wednesday, February 26, 2020

பைத்தான் பக்கங்கள்.-2





பைத்தான் டேட்டா டைப்கள்.

ஒரு வேரியபிள் ஆனது பல விதமான டேட்டாக்களை சேமிக்க பயன்படுகின்றது.ஒவ்வொரு நிரலாக்க மொழியும் வெவ்வேறு விதமான டேட்டா டைப்களை ஆதரிக்கின்றன்.
பைத்தானில் டேட்டாவானது முன் கூட்டியே என்ன டைப் என்று அறிவிக்க தேவையில்லை.இயக்க நேரத்தில் இன்டெர்பிரட்டெர்  ஆனது வேரியபிளை எந்த டைப்பில் பைண்ட் செய்கின்றோமோ அந்த டைப்பாக எடுத்துக்கொள்ளும்.
பைத்தானில் மொத்தம் 5 விதமான டேட்டா டைப்கள் இருக்கின்றன.
அவையாவன:
1, நம்பர்கள்.
2.ஸ்ட்ரிங்க்
3.லிஸ்ட்
4.டுபிள்.
5.டிக்ஸ்னரி.
1.நம்பர் டேட்டா டைப்:
நம்பர் டேட்டா டைப் ஆனது எண்களை ஒரு வேரியபிளுக்கு மதிப்பிருத்த பயன்படுகின்றது.
சான்று:
A=5
B=4.7
மேலே உள்ள இரண்டு வரிகளிலும் A என்ற வேரியபிளுக்கு 5 என்ற முழு எண் ஆனது மதிப்பிருத்தப்படுகின்றது. B என்ற வேரியபிளுக்கு 4.7 என்ற எண் மதிப்பிருத்தப்படுகின்றது.இரண்டுமே நம்பர் டேட்டா டைப்பாக தான் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
2.ஸ்டிரிங்க்.
இது எழுத்துக் கோவைகளை ஒரு வேரியபிளுக்கு மதிப்பிருத்தும் பொழுது ஆகும் டேட்டா டைப் ஆகும்.
X=”hello”
Y=’welcome’.
இவை சிங்கிள் கோட்டிற்க்குள்ளோ டபுள் கோட்டிற்குள்ளோ இடப்படுகின்றது .
ஸ்டிரிங்குகளை கையாள நிறைய லைப்ரரி ஃபங்க்சன்கள் உள்ளன.
+ ஆபரேட்டர் ஆனது ஒன்ற்க்கு மேற்பட்ட  ஸ்ட்ரிங்குகளை ஒன்றினைக்க பயன்படுகின்றது.
ஆபரேட்டர் * ஆனது ரிப்பிட்டைசன் ஆபரேட்டர் எனப்படுகின்றது. உதாரணமாக python *2 என்பது python python என வெளியீடு செய்யப்படுகின்றது.
  1. str1 = 'hello javatpoint' #string str1  
  2. str2 = ' how are you' #string str2  
  3. print (str1[0:2]) #printing first two character using slice operator  
  4. print (str1[4]) #printing 4th character of the string  
  5. print (str1*2) #printing the string twice  
  6. print (str1 + str2) #printing the concatenation of str1 and str2  
வெளியீடு:
he
o
hello javatpointhello javatpoint
hello javatpoint how are you

லிஸ்ட்:
இந்த டேட்டா டைப் ஆனது அர்ரே போல் ஒன்றுக்கு மேற்பட்ட டேட்டாவை ஒரே வேரியபிளில் சேமிக்கும் ஆனால் அர்ரே போல் இல்லாமல் வெவ்வேறு விதமான டேட்டாவை சேமிக்கின்றது.ஒவ்வொரு ஐட்டமும் , ஆபரேட்டாரால் பிரிக்கப்படுகின்றது. மொத்தமாக [] ஸ்குயர் பிராக்கெட்டுக்குள் ஸ்டோர் செய்யப்படுகின்றது.
இதில் [:] என்ற  ஸ்லைசிங்க் ஆபரேட்டர் பயன்படுத்தி தனித் தனியாக பிரித்தெடுக்கலாம்.
சான்று:
  1. l  = [1, "hi", "python", 2]  
  2. print (l[3:]);  
  3. print (l[0:2]);  
  4. print (l);  
  5. print (l + l);  
  6. print (l * 3);   
வெளியீடு:
[2]
[1, 'hi']
[1, 'hi', 'python', 2]
[1, 'hi', 'python', 2, 1, 'hi', 'python', 2]
[1, 'hi', 'python', 2, 1, 'hi', 'python', 2, 1, 'hi', 'python', 2]
டுபிள்.
இதுவும் லிஸ்ட் போன்று தான் செயற்படுகின்றது. ஆனால் இதில் உள்ள டேட்டா ஆனது ரீட் ஒன்லி டேட்டா ஆகும். அதை மாற்றியமைக்க முடியாது.இது () என்ற ஆர்டினரி பிராக்கெட்டுக்குள் இடப்படுகின்றது.
சான்று.
  1. t  = ("hi", "python", 2)  
  2. print (t[1:]);  
  3. print (t[0:1]);  
  4. print (t);  
  5. print (t + t);  
  6. print (t * 3);   
  7. print (type(t))  
  8. t[2] = "hi";  
வெளியீடு:
('python', 2)
('hi',)
('hi', 'python', 2)
('hi', 'python', 2, 'hi', 'python', 2)
('hi', 'python', 2, 'hi', 'python', 2, 'hi', 'python', 2)
<type 'tuple'>
Traceback (most recent call last):
  File "main.py", line 8, in <module>
    t[2] = "hi";
TypeError: 'tuple' object does not support item assignment
டிக்ஸ்னரி:
இது கீ வேல்யூ அடிப்படையில் டேட்டாக்களை சேமிக்க பயன்படுகின்றது.
இது {} என்ற அடைப்புக்குறிக்குள் இடப்படுகின்றது..
ஒரு கீயை கொண்டு அதன் வேல்யூவை ஆக்சஸ் செய்யலாம்.
சான்று:
  1. d = {1:'Jimmy', 2:'Alex', 3:'john', 4:'mike'};   
  2. print("1st name is "+d[1]);  
  3. print("2nd name is "+ d[4]);  
  4. print (d);  
  5. print (d.keys());  
  6. print (d.values());  
வெளியீடு:
1st name is Jimmy
2nd name is mike
{1: 'Jimmy', 2: 'Alex', 3: 'john', 4: 'mike'}
[1, 2, 3, 4]
['Jimmy', 'Alex', 'john', 'mike']
இவ்வாறாக பைத்தாலில் டேட்டா டைப்கள் செயல் படுகின்றன.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment