Saturday, February 8, 2020

Html பக்கங்கள்-1


Html 5 பக்கங்கள்.
Html 5 என்பது என்ன் ? நாம் ஏன் அதை பயன்படுத்த வேண்டும்?
Html5 என்பது  html4 மற்றும் xhtml ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதில் html4-ன் தொந்தரவு கொடுக்கக் கூறிய கருத்துக்கள் நீக்கப் பட்டுள்ளன. இதில் மேலும் டிராயிங்க், வீடியோ மற்றும் ஆடியோ போன்றவை உள்ளினைக்கப்பட்டுள்ளன.
இதை எல்லா நவீன உலாவிகளும் ஆதரிக்கின்றன.
இதை டெவலப்பர் ஃப்ரெண்ட்லி என்று கூறலாம். இதுஇணைய உலகத்திற்கு புதிய பரிமானத்தை கொடுத்திருக்கின்றது.
வீடியோ இணைப்பதற்கு தனியான ப்ளக் இன் (flash) போன்றவை தேவையில்லை.
html5  graphics என்பது என்ன?
Html 5-ல் இரு விதமான கிராப்பிக்ஸ் இருக்கின்றன.
1.      மேம்பட்ட வெக்டார் கிராப்பிக்ஸ்.
2.      கேன்வாஸ்.
மேம்பட்ட வெக்டார் கிராப்பிக்ஸ்.
இப்பொழுது ரிசொலுசன் கூடிய கருவிகள் வரத் தொடங்கி விட்டன.
அதற்கேற்றார் போல் கவனத்தை கவரக் கூடிய வகையில் இமேஜெஸ், லொகோ, சார்ட் ஆகியவற்றை உருவாக்க உள்ளது. இதற்கு html tag  ஆகியச் svg பயன்படுகின்றது. இதன் மூலம் வட்டம், கோடு, சதுரம் போன்ற வற்றை வரையலாம்.
கேன்வாஸ்.
கேன்வாஸ் என்பது செவ்வக வடிவிலான மற்றும் படம்(ஜாவா ஸ்கிரிப்ட் மூலம்) வரையக் கூடிய  திரை ஆகும்.இதன் டிஃபால்ட் மதிப்பு 300px*150px (அகலம்* உயரம்).
கேன்வாஸைக் காட்டிலும் svgயை பயன் படுத்துதல் நல்லது ஏனெனில் svg என்பது மேம்பட்டதாகும்.ஆட்டோ ஸ்கேலிங்க் படங்களை svg உருவாக்கும்.நிரலாக்க மொழிகள் svg ஆனதை ஆதரிப்பதில்லை. கேன்வாஸ் கிளையண்ட் சைட் ஜாவா ஸ்கிரிப்டை ப்யன்படுத்துகின்றது.
டேட்டா லிஸ்ட் டேக் என்பது என்ன?
இது இன்புட் எலிமெண்டுகளுக்கு ஆட்டோ கம்ப்ளீட்டிங்க் தன்மையை கொடுக்கின்றது. இது datalist என்ற மூலம் ஒரு லிஸ்ட் உருவாக்கப்படுகின்றது. பின் அந்த லிஸ்டின் பெயரானது list பண்பாக இன்புட் எலிமெண்டுகளுக்கு மதிப்பிருத்தப்படுகின்றது.
அதன் பின் இன்புட் எலெமெண்டில் நீங்கள் உள்ளீடு செய்யும் பொழுது data ஆனது அந்த லிஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள டேட்டாகளில் இருந்து எடுத்து ஆட்டோ கம்ப்ளீட் செய்யப் படுகின்றது.
சான்று நிரல்.
1.    <!DOCTYPE html>  
2.    <html lang="en">  
3.      
4.    <body>  
5.        Please Select Country: <input type="text" list="countries" name="country" />  
6.        <datalist id="countries">   
7.            <option value="India">India</option>   
8.            <option value="United States"></option>   
9.            <option value="United Kingdom"></option>   
10.                               <option value="China"></option>   
11.                               <option value="Nepal"></option>   
12.                               <option value="Afghanistan"></option>   
13.                               <option value="Iceland"></option>   
14.                               <option value="Indonesia"></option>   
15.                               <option value="Iraq"></option>   
16.                               <option value="Ireland"></option>   
17.                               <option value="Israel"></option>   
18.                               <option value="Italy"></option>   
19.                               <option value="Swaziland"></option>   
20.                           </datalist>  
21.                       </body>  
22.                         
23.                       </html>  
-நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.





ads Udanz

No comments:

Post a Comment