Thursday, May 5, 2022


அடிப்படை ASP.NET

கிளாசிக் ASP.NET அறிமுகம் புதியவர்களுக்கு

 

.

 

ASP.NET என்பது மைக்ரோசாஃப்டால் உருவாக்கப்பட்ட வெப் அப்ளிகேசன் ஃப்ரேம் வொர்க் ஆகும். இது டைனமிக் டேட்டா டிரைவென் வெப் அப்ளிகேசன் மற்றும் வெப் சர்வீஸ்களை உருவாக்கபயன்படுகின்றது.

ASP.NET ஃப்ரேம்வொர்க் என்பது .NET ஃப்ரேம் வொர்க்கின் சப் செட் ஆகும்.

ஃப்ரேம் வொர்க் என்பது கிளாஸ்களின் தொகுப்பாகும்.

வெப் அப்ளிகேசன் உருவாக்கப்பயன்படும் வேறு தொழில் நுட்பங்கள்.

1. PHP
2. Java
3. CGI
4. Ruby on Rails
5. Perl

வெப் அப்ளிகேசன் என்பது என்ன?

பிரவுசர் மூலம் ஆக்சஸ் செய்யப்படும் அப்ளிகேசன்கள் வெப் அப்ளிகேசன்கள் எனப்படுகின்றது.

பிரவுசர்கள் சான்று.

1. Microsoft Internet Explorer
2. Google Chrome
3. Mozilla FireFox
4. Apple Safari
5. Netscape Navigator

வெப் அப்ளிகேசன்களின் பயன்கள்.

வெப் அப்ளிகேசனை சர்வரில் மட்டும் நிறுவினால் போதும். விண்டோஸ் அப்ளிகேசன் என்றால் எல்லா கணினியிலும் நிறுவ வேண்டும்.

நிர்வாக்கிப்பது, சப்போர்ட் செய்தல் மற்றும் பேட்ச் ஃபைல்கள் கொடுத்தல் என அணைத்தும் எளிதாகும்.

அப்ளிகேசனை அணுக கிளையண்ட் மெசினில் பிரவுசர் மட்டும் இருந்தால் போதும்.

இன்டெர்நெட் கனக்சன் மட்டும் இருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆக்சஸ் செய்யலாம்.

எந்த பிளாட்ஃபார்மில் இருந்து வேண்டுமானாலும் ஆக்சஸ் செய்யலாம்.

வெப் அப்ளிகேசன்கள் எவ்வாறு வேலை செய்கின்றன?

1.      வெப் அப்ளிகேசன் என்பது கிளையண்ட் சர்வர் முறையில் செயற்படுகின்றன.

2.      கிளையண்ட் ஆக HTML மட்டும் அறிந்துள்ள பிரவுசர் செயற்படுகின்றது.

3.      சர்வர் சைடில் இன்டெர்நெட் இன்ஃபர்மேசன் செர்வீசஸ் எனப்படும் IIS சர்வர் பயன்படுகின்றது.



பிரவுசரில் அட்ரஸ் பாரில் URL என்பதை எண்டர் செய்தவுடன் ரிக்வெஸ்ட் ஆனது சர்வருக்கு அனுப்பப்படுகின்றது.IIS சர்வரில் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கும் வெப் அப்ளிகேசன் கோரிக்கையை பெறுகின்றது.

ரிக்வெஸ்ட் பிராசஸ் செய்யப்பட்டு பிளைன் HTML ஆக மாற்ற்ப்பட்டு சர்வருக்கு அனுப்பப்படுகின்றது. IIS ஆனது HTML என்பதை கிளையண்டுக்கு அனுப்புகின்றது.பிரவுசர் HTML கோடிங்கை பார்ஸ் செய்து இன்டெர்ஃபேசை பிரவுசரில் காட்சிபடுத்துகின்றது.

இந்த கம்யூனிகேசன் எல்லாமே HTTP புரோட்டாக்காலை பயன்படுத்தி நிகழ்கின்றது. புரோட்டா கால் என்பது ஒரு நெட் வொர்கில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மெசின்கள் கம்யூனிகேட் செய்வதற்கான விதிமுறைகள் ஆகும்.

நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

No comments:

Post a Comment