Friday, May 6, 2022

 

அட்வான்ஸ்டு ASP.NET புரோக்கிராமிங்க்

ASP.NET அட்வான்ஸ்டு கண்ட் ரோல்கள்


 

இந்த கட்டுரையில் இரண்டு ASP.NET கண்ட் ரோல்களை பற்றி காண இருக்கின்றோம்.

1.ஃபைல் அப்லோட் கண்ட் ரோல்

2.ஆட் ரொட்டேட்டர் கண்ட் ரோல்.

1.ஃபைல் அப்லோட் கண்ட் ரோல்

இந்த கனட் ரோல் ஃபைல்களை சர்வருக்கு பதிவேற்றம் செய்ய அந்த ஃபைலை தேர்ந்தெடுப்பதற்கு  பயன்படுகின்றது.இது ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் மற்றும் பிரவுஸ் பட்டனின் தொகுப்பாகும்.

முதலில் வெப் ஃபார்மில் ஒரு ஃபைல் அப்லோட் கண்ட் ரோலை தேவு செய்து டிராக் அண்ட் டிராப் செய்யவும்.

ஃபைலை அப்லோட் செய்வதற்கு ஒரு பட்டனை செலெக்ட் செய்து ஃபார்மில் டிராக் அண்ட் டிராப் செய்யவும். அதற்கு btnUpload என பெயரிடவும். அதன் டெக்ஸ்ட் பிராப்பர்ட்டியை upload file என மாற்றவும்.

ஒரு லேபெல் கண்ட் ரோலை செலெக்ட் செய்து ஃபார்மில் டிராக் அண்ட் டிராப் செய்யவும் அதன் பெயராக lblMessage என மாற்றவும்.

இதன் html source பின் வருமாரு இருக்கும்.

<asp:FileUpload ID="FileUpload1" runat="server" />
&nbsp;
<asp:Button ID="btnUpload" runat="server" Text="Upload File" 
    onclick="btnUpload_Click" />
<br />
<asp:Label ID="lblMessage" Font-Bold="true" runat="server">
</asp:Label>

இப்பொழுது ஃபைல்அப்லோட் கனட்ரோலை பயன்படுத்தி ஒரு ஃபைலை செலெக்ட் செய்யவும்.

பிறகு பட்டனை கிளிக் செய்யவும்.

இப்பொழுது பட்டன் கிளிக் ஈவண்டில் மூன்று விதமான வாலிடேசன்கள் செய்ய வேண்டும்.

1.      ஃபைல் அப்லோட்  கனட் ரோல் மூலம் ஒரு ஃபைல் செலெக்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2.      ஃபைல் குறிப்பிட்ட டைப்பாய் இருக்க வேண்டும்

3.      ஃபைலின் மெமரி சைஸ் குறிபிட்ட அளவு இருக்க வேண்டும்.

 

இந்த மூன்றையும் வேலிடேட் செய்து வரும் நிரல் வரிகள்.

if (FileUpload1.HasFile)
{
    // Get the file extension
    string fileExtension = System.IO.Path.GetExtension(FileUpload1.FileName);

    if (fileExtension.ToLower() != ".doc" && fileExtension.ToUpper() != ".docx")
    {
        lblMessage.ForeColor = System.Drawing.Color.Red;
        lblMessage.Text = "Only files with .doc and .docx extension are allowed";
    }
    else
    {
        // Get the file size
        int fileSize = FileUpload1.PostedFile.ContentLength;
        // If file size is greater than 2 MB
        if (fileSize > 2097152)
        {
            lblMessage.ForeColor = System.Drawing.Color.Red;
            lblMessage.Text = "File size cannot be greater than 2 MB";
        }
        else
        {
            // Upload the file
            FileUpload1.SaveAs(Server.MapPath("~/Uploads/" + FileUpload1.FileName));
            lblMessage.ForeColor = System.Drawing.Color.Green;
            lblMessage.Text = "File uploaded successfully";
        }
    }
}
else
{
    lblMessage.ForeColor = System.Drawing.Color.Red;
    lblMessage.Text = "Please select a file";
}

மேலே உள்ள நிரல் ஒரு டாக்குமெண்ட்டை மட்டும் தேந்த்தெடுக்க மற்றும் அதன் மெமரி சைஸ் 2mb யை தாண்டாதிருக்க பயன்படுகின்றது.

2.Adrotator control

இந்த கண்ட்ட் ரோல் விளம்பரங்களை ரேண்டம் ஆக காட்சி படுத்த பயன்படுகின்றது.

விளம்பரங்கள் பற்றிய தகவல் xml file அல்லது database file ஆக இருக்கலாம்.

இந்த கட்டுரையில் xml file பயன்படுத்த இருக்கின்றோம்.

Xml file ஆனது பின் வருல் தகவல்களை கொண்டிருக்கும்.

1.      ImageUrl

இது இமேஜின் பாத்தை குறிப்பிட உதவுகின்றது.

2.      Navaigate url

இது இமேஜை கிளிக் செய்யும் பொழுது எந்த வெப் பக்கம் காட்டப்பட வேண்டும் என்பதை குறிப்பிட உதவுகின்றது.

3.      AlternateText

இது இமேஜ் பயன்பாட்டில் இல்லாவிட்டால் என்ன டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்பதை குறிக்கின்றது.

4.      Keyword

இது இமேஜை ஃபில்டெர் செய்யபயன்படுகின்றது.

5.      Impressions

ஒரு விளம்பரம் ஆனது எத்தனை த்டவை வெளியிடலாம் என்பதற்கான சாத்தியக் கூற்றை குறிப்பிடஉதவும் நியூமரிக் மதிப்பாகும்.

 

ஒரு asp.net பிராஜெக்டில் ஒரு xml file ஒன்றை இணைத்து பின் வருமாரு நிரல் எழுதவும்.

<?xml version="1.0" encoding="utf-8" ?>
<Advertisements>
  <Ad>
    <ImageUrl>~/Images/Google.png</ImageUrl>
    <NavigateUrl>http://google.com</NavigateUrl>
    <AlternateText>Please visit http://www.Google.com</AlternateText>
    <Impressions>10</Impressions>
  </Ad>
  <Ad>
    <ImageUrl>~/Images/Pragim.png</ImageUrl>
    <NavigateUrl>http://pragimtech.com</NavigateUrl>
    <AlternateText>Please visit http://www.pragimtech.com</AlternateText>
    <Impressions>20</Impressions>
  </Ad>
  <Ad>
    <ImageUrl>~/Images/Youtube.png</ImageUrl>
    <NavigateUrl>http://Youtube.com</NavigateUrl>
    <AlternateText>Please visit http://www.Youtube.com</AlternateText>
    <Impressions>40</Impressions>
  </Ad>

பிரஜெக்டில் ஒரு இமேஜ்  ஃபோல்டர் உருவாக்கி பின் வரும் இமேஜ்களை உருவாக்கிகொள்ளவும்..





ஒரு adrotator கண்ட் ரோலை செலெக்ட் செய்து டிராக் மற்றும் டிராப் செய்யவும் . அதன் AdvertisementFile  பண்பிற்கு நாம் உருவாக்கிய xml file பெயரை குறிப்பிடவும்.

இப்பொழுது html code கீழ்வருமாரு இருக்கும்.

<asp:AdRotator AdvertisementFile="~/AdsData.xml" ID="AdRotator1" runat="server" />

ஒரு விளம்பரமானது அது கிளிக் செய்யப்பட்டும் பொழுது தனி விண்டோவில் காட்டப்பட பின் வருமாரு நிரல் எழுதவும்.

Target=”_blank”

இவ்வாறு இரு கண்ட் ரோல்களும் ஏஎஸ்பி.நெட்டில் பயன்படுகின்றது.

நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

 

ads Udanz

No comments:

Post a Comment