Thursday, March 21, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்வோம் -பகுதி4

 



விசுவல் ஸ்டுடியோ கோடை ஓபன் செய்யவும்.

File-> open folder

ஆப்சன் செல்லவும்.

நான் ஏற்கனவே E டிரைவில் node prgs என்றொரு ஃபோல்டர் உருவாக்கி வைத்துள்ளேன்.

அதை ஒபன் செய்து கொள்கின்றேன்.

அந்த ஃபோல்டரில் newprg.js என்றொரு ஜாவா ஸ்கிரிப்ட் ஃபைல் உருவாக்கவும்.

Console.log(“Welcome by Muthu karthikeyan”);

என்று டைப் செய்யவும்.

Ctrl+s கொடுத்து ஃபைலை சேவ் செய்யவும்.

Terminal-> New Terminal

செல்லவும்.

டெர்மினலில்

Node newprg.js எனக் கொடுத்தால்

Welcome by Muthu karthikeyan

என வெளீயீடு செய்யும்.

அடுத்து input.js என புதிய ஃபைலை உருவாக்கவும்.

இதில் இன்புட் வாங்குவது எப்படி என பார்க்க இருக்கின்றோம்.

const readline = require('readline');

const rl = readline.createInterface({

    input: process.stdin,

    output: process.stdout

})

கொடுத்துள்ளோம் . அதாவது முதலில் readline என்றஆப்ஜெக்டை இம்போர்ட் செய்துள்ளோம். அதை readline என்ற கான்ஸ்டண்டில் மதிப்பிருத்தியுள்ளோம்.

பிறகு அதைப் பயன்படுத்தி ஒரு இன்புட் அவுட்புட் செய்ய ஒரு இன்டெர்ஃபேசை உருவாக்கியுள்ளோம்.

அடுத்து

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

 

})

இப்பொழுது rl என்ற கான்ஸ்டண்டில் இன்புட் வாங்க வேண்டி முதலில் பிராம்ப்ட் , அடுத்த்து அதை log செய்து ஒரு கமாண்ட் என(callback ஃபங்க்சன்)

கொடுத்துள்ளோம்.

இப்பொது டெர்மினலில்.

Node input.js

எனக் கொடுத்தால்.

What’s your age

எனக்காட்டும்

45

என உள்ளீடு செய்தால்

You are 45 years old

வெளியீடு செய்யும் ஆனால் அது அந்த பிராசசை விட்டு வெளியேறியிருக்காது.

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

    rl.close();

})

அதாவது rl.close() என்ற ஃபங்க்சனை அழைத்துள்ளோம்.

இப்பொழுது கோடை ரன் செய்தால் இன்புட் மற்றும் அவுட்புட்டிற்கு பிறகு பிராசசை விட்டு வெளியேறியிருக்கும்.

அடுத்து close ஈவண்டில் ஒரு கோடிங்கை இயக்குவதற்கு கூடுதல் நிரல் வரிகள் சேர்த்து முழுமையான நிரலாக பின் வருமாரு எழுதுவோம்.

const readline = require('readline');

const rl = readline.createInterface({

    input: process.stdin,

    output: process.stdout

})

rl.question("What's your age", (age) => {

    console.log("you are " + age + " years old");

    rl.close();

})

rl.on("close", () => {

    console.log("bye visit again!");

    process.exit(0);

}

)

வெளியீடு:

PS E:\node prgs> node input.js

What's your age45

you are 45 years old

bye visit again!

PS E:\node prgs>

அதாவது rl ஆனது close ஆகும் பொழுது bye visit again! என log செய்துள்ளேன்.

பிறகு மொத்த பிராசசை விட்டு வெளியேற

Process.exit(0);

எனக் கொடுத்துள்ளேன்.

தொடரும்.

நன்றி

முத்துக் கார்த்திகேயன், மதுரை

 

 

 


ads Udanz

Tuesday, March 19, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்ளலாம். பகுதி-3

 


இப்பொழுது REPL என்றால் என்னவென்று பார்ப்போம்.

R—READ INPUT

E-EVALUATE

P-PRINT OUTPUT

L-LOOPING

முதலில் கமாண்ட் பிராம்ப்டிற்க்கு செல்லவும்.

Node

எனக்கொடுக்கவும்.

நோட் ஜெ எஸ் பணிபுரிய ஆரம்பிக்கும்.

10+15 எனக் கொடுத்தால்

25 என பிரிண்ட் செய்து அடுத்த இன்புட்டிற்க்கு தயாராய் இருக்கும்.

அதாவது முதலில் ரீட் செய்து பிறகு Evaluate செய்து பிற்கு அவுட்புட் செய்து அடுத்து லூப் செய்து அடுத்த இன்புட்டிற்கு தயாராக இருக்கின்றது. இதுவே REPL என்ப்படுகின்றது.

இப்பொழுது

Let student={Name:”Karthikeyan”, mark:98}

என ஒரு ஆப்ஜெக்ட் உருவாக்குகின்றோம்.

இப்பொழுது

Student. Name எனக்கொடுத்தால்

Karthikeyan என பிரிண்ட் செய்யும்.

Ctrl+c கொடுத்து வெளியே வரவும்.

மீண்டும் node கொடுத்து உள்ளே செல்லவும்.

இப்பொழுது

Student.Name எனக் கொடுத்தால்

Undefined

எனக்காட்டும்.

இதில் இருந்து நோட் பிராம்ப்டில் நாம் கொடுப்பபை பெர்மனண்ட் ஸ்டோர் ஆவதில்லை என்பதை தெரிந்து கொள்ளவும்.

இப்பொழுது visual studio code எடிட்டர் சென்று மெனுவில் Terminal->new Terminal செல்லவும்.

இப்பொழுது node என டெர்மினலில் கொடுக்கவும்.

10+16    //input

26  // output

Let student={Name:”Muthu”,Mark:85}  //input

 

Student.Mark  //input

85   // output

இப்பொழுது

15+10 எனக்கொடுக்கவும்

25 என அவுட்புட் காட்டும்

_ எனக்கொடுத்தால் 25 என் மீண்டும் காட்டும்.

இதில் இருந்து _(அண்டர் ஸ்கோர்) என்பது முந்தைய அவுட்புட்டின் மதிப்பை தக்கவைக்கும் என அறிந்து கொள்ளலாம்.

10+15  // input

25      //output

_+25  //input

50     //output.

Node-ல் இருந்து வெளியேற .exit கொடுக்கவும்.

நன்றி

தொடரும்

முத்து கார்த்திகேயன், மதுரை.

 

 

 

ads Udanz

Monday, March 18, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்ளலாம். பகுதி-2

 


நோட் ஜெ எஸ் நிறுவுதல்.



கூகுளில் Node js எனத் தந்து தேடவும். வரும் ரிசல்டில் nodejs.org செல்லவும்.

கீழ் வரும் பக்கம் காண்பிக்கப்படும்.



இதில் lts வெர்சன் , current வெர்சன் என இரண்டு காட்டப்படும்.

இதில் lts வெர்சன் தேர்ந்தெடுக்கவும்.

இந்தப்பக்கமானது os -ஐ அதுவே கண்டுபிடித்து காட்டும். உதாரணத்துக்கு மேலே உள்ள பக்கம் விண்டோசில் தேடிப்பார்க்கும் பொழுது தானாகவே காண்பிக்கப்படுகின்றது.

வேறு os எனில் download லிங்கை கிளிக் செய்யவும்.

இதில் os-க்கு ஏற்றார் போல் தேர்ந்த்தெடுத்து டவுன் லோட் செய்து கொள்ளவும்.

இப்பொழுது ஃபைலை ரன் செய்யவும்.







சுலபமான நெக்ஸ்ட் , நெக்ஸ்ட் நிறுவுதல்-தான்.

நிறுவிய பிறகு கமாண்ட் பிராம்ப்ட் சென்று நோட் நிறுவப்பட்டிருக்கின்றதா என்று உறுதி செய்யவும் .

கமாண்ட் ப்ராம்ப்டில் node -v எனக் கொடுக்கவும்.

Node வெர்சன் காட்டப்படும்.



பிழைச் செய்தி காட்டப்பட்டால் நோடை மறுபடியும் நிறுவவும்.

நன்றி

தொடரும்.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

Saturday, March 16, 2024

ரியாக்ட் ஜெ எஸ் கற்றுக் கொள்வோம் புதிய தொடர் பகுதி-1

 



ரியாக்ட் ஜெ எஸ் என்பது ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி . இதுன் ஃபேஸ் புக்கால் உருவாக்கப்பட்டது. 2011-ல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து நிறைய அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரியாக்ட் ஜெ எஸ் என்பது யூசர் இன்டெர்ஃபேஸ்கள் உருவாக்கப் பயன்படுகின்றது.

ரியாக்ட் என்பது என்ன?

 

ரியாக்ட் ஜெ எஸ் சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்கள் உருவாக்கப் பயன்படுகின்றது.

ரியாக்ட் ஜெ எஸ் என்பது ஜாவா ஸ்கிரிப்ட் லைப்ரரி.

இது டெக்லரேடிவ் ஆனது

திறன் வாய்ந்தது.

ஃப்ளெக்சிபிள் ஆனது.

இது சிக்கலான யூசர் இண்டர்பேஸ்களை தனிதனி காம்பனண்டுகளாக பிரித்து பிறகு ஒன்றாக்கி உருவாக்குகின்றது.

குறிப்பிடத் தக்க விசயம் என்னவென்றால் ரியாக்ட் என்பது ஒரு லைப்ரரி தானே அன்றி ஆங்குலரைப்போன்று ஃப்ரேம் வொர்க் கிடையாது.

ரியாக்ட் ஆனது html,css, javascript ஆகியவற்றைப் பயன்படுத்தி காம்பனண்டுகளை உருவாக்குகின்றது.

இது காம்பனண்டு அடிப்படையிலான்ச UI லைப்ரரி.

ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் ஜெகொரி பயன்படுத்தியே டைனமிக் யூசர் இன்டெஃபேஸ்களை உருவாக்கலாம்.அப்படி இருக்கும் ரியாக்ட் எதற்கு?

1.    ரியாக்ட் என்பது வளமான அம்சங்கள் நிறைந்த ஜாவா ஸ்கிரிப்ட் லைப்ரரி. இது நிறைய ரியூஸ் செய்யக் கூடிய யுடிலிட்டி கோட்களை தருகின்றது.

2.    இது ஒரு பயன்பாட்டை சிறிய தனித்தனி காம்பனடுகளாக பிரித்து உருவாக்குகின்றது. இந்த காம்பனண்டுகள் ஒன்றுக்கொன்று இண்டிபெண்டெண்ட் ஆனது. இதனால் நிர்வாகிக்க எளிது. டெஸ்ட் செய்யவும் எளிது.

3.    ஜாவாஸ்கிரிப்டை விட குறைவான நிரல் வரிகள்.இதனால் வேகமாகவும் பிரடக்டிவ் ஆகவும் விளங்குகின்றது.

சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்.

 

பாரம்பரிய வெப் சைட்டுகளில் கோரிக்கையானது பிரவுசரில் இருந்து சர்வருக்கு அனுப்பப்படுகின்றது. சர்வர் அந்த பக்கத்தை ரெஸ்பான்ஸ் ஆக அனுப்பும்.About பக்கத்தை பற்றி கோரிக்கை அனுப்பினால் சர்வர் about.html பக்கத்தை அனுப்பி வைக்கும்.

பிறகு contact பக்கத்திற்கு கோரிக்கை அனுப்பினால் contact.html பக்கமானது சர்வரில் இருந்து அனுப்பப்படும்.

இந்த வகையிலான ரெகுவஸ்ட் மற்றும் ரெஸ்பான்ஸ் பயன்பாட்டை மெதுவாக்குகின்றது. ஒவ்வொரு தடவை புதிய தகவல் தேவைப்படும் பொழுது கிளையண்ட் ஆனது சர்வருக்கு ரெகுவஸ்ட் அனுப்புகின்றது. சர்வர் ரெஸ்பான்ஸ் செய்கின்றது.

இதற்கு மாறாக சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்கள் ஒரு html பக்கத்தைக் கொண்டது.


சரியான உதாரணம் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜிமெயில். புதிய தகவல் தேவைப்படும் பொழுது சர்வருக்கு கோரிக்கை அனுப்பப்படுவதில்லை.அதே ஃபைல் தான் ஆனால் அதன் கண்டண்ட் மாற்றப்படுகின்றது.

url மாறுகின்றது

கண்டண்ட் மாறுகின்றது

ஆனால் அதே ஃபைல்.

கண்டண்ட் ஆனது ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தி மாற்றப்படுகின்றது.

Home பேஜில் இருக்கும் பொழுது url ஆனது karthikeyanblogspot.com/about.

கண்டண்ட் ஆனது home பேஜ்.

ஃபைல் index.html.

Contact பக்கத்தில் இருக்கும் பொழுது url ஆனது karthikeyanblogspot.com/contact

கண்டண்ட் contact பேஜ்.

ஃபைல் அதே index.html

ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி கண்டண்டை மாற்றுவதால் பயன்பாடு வேகமாக விளங்குகின்றது.

இங்கு ஒவ்வொரு ரெகுவஸ்ட்டுக்கும் சர்வரை அனுகத் தேவையில்லை.

இதனால் அப்ளிகேசன் வேகமாகாவும் ரியாக்டிவ் ஆகவும் உள்ளது.

React vs Angular vs vue

React:

ரியாக்ட் என்பது UI அடிப்படையிலான ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி. இது எல்லா அம்சங்களும் நிறைந்தது அல்ல . மூன்றாவது நபர் பேக்கேஜுகளை தேவைப்பட்டால் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். உதாரணமாக ரியாக்டிற்கு ரவுட்டிங்க் திறமை கிடையாது.கூடுதல் பேக்கேஜுகளை இன்ஸ்டால் செய்து ரவுட்டிங்க் செய்யலாம்.

Angular

ஆங்குலர் என்பது முழுமையான காம்பனண்ட் அடிப்படையிலான UI ஃப்ரேம் வொர்க் ஆகும்.இது ரவுட்டிங்க், அதண்டிகேசன், அதாரைசேசன் என நிறைய அம்சங்கள் நிறைந்தது.ஆங்குலர் என்பது ரியாக்டிற்கு சிறந்த மாற்றுத்தேர்வு ஆகும்.

Vue

Vue என்பது காம்பனண்ட் அடிப்ப்டையிலான UI ஃப்ரேம் வொர்க் ஆகும். இது ஆங்குலரைக் காட்டிலும் குறைவான அம்சங்கள் கொண்டது. ஆனால் ரியாக்டைக் காட்டிலும் கூடுதல் அம்சங்கள் கொண்டதாகும்.

தொடரும்

முத்து கார்த்திகேயன், மதுரை.

 

 

 

 

ads Udanz

Friday, March 15, 2024

ஆங்குலர் கற்றுக் கொள்வோம். புதிய தொடர் பகுதி-1

 



ஆங்குலர் என்பது கிளையண்ட் பக்க வெப் பயன்பாடுகள் உருவாக்குவதற்கான பிரபலமான ஜாவா ஸ்கிரிப்ட் பிரேம் வொர்க் ஆகும்.

இந்த ஃப்ரேம் வொர்க் ஆனது டைனமிக் வெப் பயன்பாடுகள் உருவாக்கப் பயன்படக் கூடிய திரும்ப பயன்படுத்தக் கூடிய மெத்தடுகள், கிளாஸ்கள், இன்டெர்ஃபேஸ்கள் ஆகியவற்றைத் தருகின்றது.

பொதுவாக ஆங்குலரை சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்கள் உருவாக்குவதற்கு பயன்படுத்துகின்றோம்.

ஆங்குலரை மொபைல் மற்றும் டெஸ்க் டாப் சிங்கிள் பக்க பயன்பாடுகள் உருவாக்குவதற்கும் பயன்படுத்துகின்றோம்.

ஆங்குலரை நாம் Html, css மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது டைப் ஸ்கிரிப்ட் பயன்படுத்தி கிளையண்ட் பக்க பயன்பாடுகள் உருவாக்குகின்றோம்.

ஆங்குலர் என்பது ஜாவாஸ்கிரிப்ட் போன்று நிரலாக்க மொழி அல்ல.

ஆங்குலர் என்பது சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்கள் உருவாக்க உதவும் ஜாவா ஸ்கிரிப்ட் ஃப்ரேம் வொர்க் ஆகும்.

ஃப்ரேம் வொர்க் என்பது என்ன?

ஃப்ரேம் வொர்க் என்பது சாஃப்ட்வேர் பயன்பாடுகள் உருவாக்குவதற்கான ப்ளாட்ஃபார்ம் போன்றது.

இது ஒரு நிரலை தொடக்கத்தில் இருந்து எழுதாமல் முன் கூட்டியே எழுதப்பட்ட திரும்ப பயன்படக்கூடிய  கிளாஸ்கள், மெத்தட்கள் ஆகியவற்றை பயன்படுத்துதல் ஆகும்.

பொதுவாக நாம் கிளையண்டில் இருந்து ஒரு ரெக்குவஸ்ட் அனுப்புகின்றோம். சர்வர் அதற்கு பதிலுக்கு ரெஸ்பான்ஸ் அனுப்புகின்ற்து.

இதை ஜாவா ஸ்கிரிப்டில் எழுதினால் நிறைய கோடிங்க் எழுத வேண்டியிருக்கும். ஆங்குலர் போன்ற ஃப்ரேம் வொர்க் பயன்படுத்தி சர்வருடன் கனக்ட் செய்ய கிளாஸ்கள் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் மூலம் எளிதாகின்றது.

ஃப்ரேம் வொர்க் என்பது முன் கூட்டியே எழுதப்பட்ட கிளாஸ்கள், மெத்தடுகள் மூலம் பயன்பாட்டில் வித்தியாசமான செயல்களை எளிதாக செய்யக்கூடிய APIகளை தருவதாகும்.



நேவிக்கேட்டரில் ஹோம் பட்டனை கிளிக் செய்தால் பாடி மட்டுமே மாறும் பக்கம் முழுவதும் ரிலோட் ஆவதில்லை. பக்கம் index.html ஆகும்.

அபோட் பட்டனை கிளிக் செய்தால் மறுபடியும் பாடி மட்டும் மாறுகின்றது. பேஜ் ரிலோட் ஆவதில்லை. இப்பொழுதும் பக்கம் index.html தான் ஆகும்.

உள்ளடக்கம் ஆனது ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி டைனமிக் ஆக மாறுகின்றது.

இங்கே சர்வரில் இருந்து எந்த டேட்டாவையும் ரிகுவெஸ்ட் செய்யவில்லை.ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தியே கண்டண்ட் மாறுகின்றது.சர்வருக்கு எந்த ரிகுவெஸ்டும் அனுப்பாததால் பேஜ் ரிஃப்ரெஸ் ஆவதில்லை.

சிங்கிள் பேஜ் பயன்பாட்டின் நண்மை என்ன?

ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி கண்டண்டை மாற்றுவதால் இது வேகமாக இருக்கின்றது.ஒவ்வொரு தடவையும் சர்வருக்கு கோரிக்கை அனுப்பாததால் இது விரைவாகவும் ரியாக்டிவ் ஆகவும் உள்ளது.

சர்வரில் இருந்து டேட்டா தேவைப்பட்டால் பின்னனியில் லோட் ஆகின்றது.அதன் பிறகு டேட்டா காட்சிபடுத்தப்படுகின்றது.

ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் ஜெகொரியின் கட்டுப்பாடுகள்.

ஜாவாஸ்கிரிப்ட் அல்லது ஜெகொரி ஆனது நிர்வாகிக்க கடினமானதாகும் சரியான முறையில் பயன்பாட்டை கட்டமைக்க வேண்டியிருக்கின்றது.

தொடக்கத்தில் இருந்து நாம் ஒவ்வொன்றுக்கும் நாம் நிரல் எழுத வேண்டியிருக்கின்றது.

இதன் காரணமாக சமீப காலமாக விரைவாக பயன்பாடுகளை உருவாகுவதற்கு நிறைய ஃபரேம் வொர்க்குகள் உருவாக்கப்ட்டன. ஆங்குலர் அதில் பிரபலமான ஒன்றாகும்.

ஆங்குலரின் நண்மைகள்.

ஆங்குலர் தெளிவான லூஸ்லி கப்பிள்டு பயன்பாடுகள் உருவாக்குவதற்கு பயன்படுகின்றது.

இது நிறைய உடிலிட்டி கோடை(utility code) தருகின்றது.இதை பயன்பாடுகளில் மறுபடியும் பயன்படுத்துகின்றோம்.

ஆங்குலரில் உருவாக்க்கப்பட்ட ஒரு பயன்பாடானது சாஃப்ட்வேர் டெஸ்டிங்கிற்கு ஏற்றதாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆங்குலரில் நிறைய வெர்சன்கள் வெளிவந்துள்ளன.

2010-ல் ஆங்குலர் ஜெ எஸ் என்ற பெயரில் முதல் வெர்சன் வெளிவந்தது.எனினும் இது இன்றைய பயன்பாட்டுகளுக்கு ஏற்றதாக இல்லை. அது நிறைவானதாகவும் இல்லை.

எனவே அதை மொத்தமாக மாற்றி எழுதி 2016 ஆங்குலர் என்ற பெயரில் அதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. இது ஜாவா ஸ்கிரிப்டிற்குப்பதில் அதன் சூப்பர் செட் ஆன டைப் ஸ்கிரிப்டை பயன்படுத்துகின்றது. கவனிக்கவும் இப்பொழுது அதன் பெயர் ஆங்குலர் தானே அன்றி ஆங்குலர் ஜெ எஸ் அல்ல.

ஆங்குலர் ஜெ எஸ்ஸும் ஆங்குலரும் முற்றிலும் மாறுபட்டதாகும்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதிய வெர்சன் வெளிவருகின்றது.. இதில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது.ஆங்குலர் 16 லேட்டஸ்ட் வெர்சன் ஆகும்.

-தொடரும்.

நன்றி.

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

 

 

 

ads Udanz

Saturday, March 9, 2024

 

மாங்கோ டிபி கற்றுக் கொள்வோம் பகுதி-1



மாங்கோ டிபி என்பது டாக்குமெண்ட் ஒரியண்டட் டேட்டா பேஸ் என அழைக்கப்படுகின்றது.இது பெரிய அளவிலான டேட்டாவை சேமிப்பதற்கு பயன்படுத்துகின்றோம்.

மாங்கோ டிபி ஆனது வேகமான மற்றும் பயனுறுதியான டேட்டா பேஸ் சொலூசன் ஆகும்  காரணம் இது டேட்டாவை சேமிக்கும் முறையே ஆகும்.

Sql server, mysql, oracle போன்ற மற்ற டேட்டா பேஸ்கள் போல் இது டேட்டாவை டேபிள் மற்றும் ரோக்களாக சேமிக்கமால் கலக்சன் மற்றும் டாக்குமெண்டுகளாக சேமிக்கின்றது.

இது ரிலேசனல் டேட்டா பேஸ் என்று அழைக்கப்படாமல் No Sql டேட்டா பேஸ் என அழைக்கப்படுகின்றது.

ரிலேசனல் டேட்டா பேஸ்



 

ரிலேசனல் டேட்டா பேஸ் என்பது டேபிள் மற்றும் ரோக்களின் கலெக்சன் ஆகும். ஒரு டேபிள் ஆனது மற்றொரு டேபிளுடன் சம்பந்தப்படுத்தப்படலாம்.

இந்த வகை டேபிள் ஆனது டேட்டாவை ரோ மற்றும் காலம்ன்களாக சேமிக்கின்றது.

டேபிளின் ஒவ்வொரு ரோவும் ஒன்று மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட காலம்ன்களைக் கொண்டுள்ளது.

ரிலேசனல் டேட்டா பேசில் உள்ள டேட்டாவானது நார்மலைஸ்டு (normalized) பண்ணப்பட்டது மற்றும் இது ப்ரிடிஃபைண்டு ஸ்கீமாவை கொண்டுள்ளது.

 

நண்மைகள்.

ரிலேசனல் டேட்டா பேசின் முக்கிய நண்மை ஆனது டேட்டா ஒரு பொழுதும் ரிபீட் செய்யப்படுவதில்லை.

தீமைகள்.

ஒரு முறையான டேட்டாவை கேட்டுப்பெறுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட டேபிள்களை ஜாயின் செய்ய வேண்டியிருக்கும்.



மேலே உள்ளது போன்று டேட்டாவை கேட்டுப்பெறுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட டேபிள்களை ரிலேட் செய்து மிகச் சிக்கலான ஜாயின் கொரி எழுத வேண்டியிருக்கும்.

நான் ரிலேசனல் டேட்டா பேஸ் சிஸ்டம்.

மாங்கோ டிபி போன்ற நான் ரிலேசனல் டேட்டா பேஸ் சிஸ்டத்தில் இப்பொழுது உயரத்தில் டேட்டா பேசையே வைத்திருக்கின்றோம் ஆனால் டேபிள் மற்றும் ரோக்களுக்கு பதில் கலக்சன்களையும் டாக்குமெண்டுகளையும் வைத்திருக்கின்றோம்.

ஒரு கலக்சன் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட டாக்குமெண்டுகளின் தொகுப்பாகும். நீங்கள் டேபிளை கலக்சன் என்றும் ரோக்களை டாக்குமெண்ட் என்றும் எண்ணிக் கொள்ளலாம்.

சுருக்கம்

ரிலேசனல் மற்றும் நான் ரிலேசனல் டேட்டா பேஸ் இரண்டிலும் டேட்டா பேஸ் என்பது பொதுவானது.

ரிலேசனல் டேட்டா பேசில் டேபிள் என்பது நான் ரிலேசனல் டேட்டா பேசில் கலக்சன்.

ரிலேசனல் டேட்டா பேசில் ரோ என்பது மாங்கோ டிபியில் டாக்குமெண்ட் ஆகும்.

ரிலேசனல் டேட்டா பேசில் காலம்ன் என்பது மாங்கோ டிபியில் ஃபீல்டு ஆகும்.

ரிலேசனல் டேட்டா பேசில் ப்ரிடிஃபைண்டு ஸ்கீமா உண்டு. மாங்கோ டிபியில் கிடையாது.

ரிலேசனல் டேட்டா பேஸ் என்பது நார்மலைஸ்ட் செய்யப்பட்டது. ஒரு நான் ரிலேசனல் டேட்டா பேசானது நார்மலைஸ்டு ஆக இருக்கலாம் அல்லது அது போன்று இல்லாமலும் இருக்கலாம்.

 

கீழே உள்ளது மாங்கோ டிபி.

{

“id”: 1,

“Name:”Muthu”,

“gender”:”Male”,

“address”:{

“city”:””Madurai”,

“contact”:”9629329142”

},

“course”:[“Full stack”, “Asp.net”]

}

{

“id”:2,

“Name”: “karthikeyan”,

“gender”:”Male”,

“address”:{
“city”:”Trichy”

}

}

{

“id”:3

“Name”:”Rani”,

“gender”: “Female”,

“address”:{

“contact”:“9345187884”

}

“course”:[“python”,”Django”]

}

டாக்குமெண்ட்

டாக்குமெண்ட் என்பது டேட்டாவை ஜெசன்(Json) ஃபார்மட்டில் சேமிக்கின்றது

Json என்பது ஜாவா ஸ்கிரிப்ட் ஆப்ஜெக்ட் நொடேசன் என்பதன் சுருக்கமாகும்.

 

மேலே உள்ள டேட்டாவில் முதல் டாக்குமெண்டில் Id,name,gender,address, course ஆகியவை ஃபீல்டுகள் ஆகும்.

ஒவ்வொரு ஃபீல்டும் கீ வேல்யூ பேர்(pair) ஆக உள்ளது.

மாங்கோ டிபி ஆனது ஸ்கீமாலெஸ் ஆகும். ஒவ்வொரு டாக்கெமெண்டிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான ஃபீல்டுகள் இருக்கலாம்.

மேலே உள்ள டேட்டாவில் gender ஃபீல்டு உள்ளது இரண்டாவது டாக்குமெண்டில் அது இல்லை.

ஒவ்வொரு டாக்குமெண்டும் வெவ்வேறு ஸ்ட்ரக்சர் கொண்டிருக்கலாம். இதனால் உங்கள் பயன்பாடானது தேவைக்கேற்றாற் போல் வளர்ச்சியடையலாம்.

ஒவ்வொரு டாக்குமெண்டும் கர்லி பிரேசஸிற்குள்(“{ }”) கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஃபீல்டும் கீ மற்றும் வேல்யூ ஃபார்மட் ஆக உள்ளது.

இது நம்பர், டெக்ஸ்ட், பூலியன் வகை டேட்டாக்களைக் கொண்டுள்ளது.

ஒரு டாக்குமெண்டிற்கும் மற்றொரு டாக்குமெண்டை நெஸ்ட் செய்யலாம்.

இதனால் டாக்குமெண்டிற்குள் டேட்டா ரிலேசன் ஏற்படுத்தலாம். என்வே டேட்டாவை கேட்டுப் பெறுதல் என்பது வேகமாகவும் பயனுறுதி ஆகவும் உள்ளது.

ஒரே கீயிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேல்யூக்களை லிஸ்ட் ஃபார்மட்டில் கொடுக்கலாம்.

மாங்கோ டிபி ஆனது json ஃபார்மட்டில் உள்ள டேட்டாவை Bson வடிவத்திற்கு மாற்றிக் கொள்கின்றது. இதனால் இது வேகமாக உள்ளது.

-----தொடரும்

முத்து கார்த்திகேயன், மதுரை

ads Udanz

Tuesday, March 5, 2024

ஜாவா ஸ்கிரிப்டில் விண்டோ ஆப்ஜெக்ட்.

 



ஜாவா ஸ்கிரிப்டில் window என்பது பிரவுசரின் விண்டோவைக் குறிக்கின்றது. ஜாவா ஸ்கிரிப்டில் விண்டோ ஆப்ஜெக்ட் தானியங்கி முறையில் உருவாகின்றது.

விண்டோ என்பது ஜாவா ஸ்கிரிப்டின் ஆப்ஜெக்ட் அல்ல. பிரவுசரின் ஆப்ஜெக்ட் ஆகும்.

விண்டோ ஆப்ஜெக்டின் மெத்தட்கள்.

Alert

இது செய்தியுடன் மற்றும் ok பட்டன் ஆகியவற்றுடன் message பாக்சை காட்டுகின்றது.

Confirm.

இது செய்தி, ok மற்றும் cancel பட்டன் ஆகியவற்றுடன் கூடிய message பாக்சை காட்டுகின்றது.

Prompt

இது பயனரிடம் உள்ளீட்டை பெறக் கூடிய டயலாக் பாக்சை காட்டுகின்றது.

Open

புதிய விண்டோவை திறக்கின்றது.

Close

இப்பொழுது திறந்துள்ள விண்டோவை மூடுகின்றது.

setTimeout

இது ஒரு ஃபங்க்சன் போன்ற செயல்பாடுகளை குறிப்பிட்ட மில்லிசெகண்டுகளுக்கு பின் இயக்குகின்றது.

Alert

சான்று

<script type="text/javascript">  

function msg(){  

 alert("Hello Alert Box");  

}  

</script>  

<input type="button" value="click" onclick="msg()"/> 

 

வெளியீடு:

 



 

Confirm

சான்று நிரல்.

<script type="text/javascript">  

function msg(){  

var vconfirm("Are u sure?");  

if(v==true){  

alert("ok");  

}  

else{  

alert("cancel");  

}  

  

}  

</script>  

  

<input type="button" value="delete record" onclick="msg()"/>  

 

வெளியீடு:



 

Prompt.

சான்று நிரல்.

<script type="text/javascript">  

function msg(){  

var vprompt("Who are you?");  

alert("I am "+v);  

  

}  

</script>  

  

<input type="button" value="click" onclick="msg()"/>  

 

வெளியீடு:






Open()

சான்று நிரல்

<script type="text/javascript">  

function msg(){  

open("http://programmingintamil.blogspot.com");  

}  

</script>  

<input type="button" value="javatpoint" onclick="msg()"/>

 

வெளியீடு:



 

 

 

setTimeout

சான்று நிரல்.

<script type="text/javascript">  

function msg(){  

setTimeout(  

function(){  

alert("Welcome to Javatpoint after 2 seconds")  

},2000);  

  

}  

</script>  

  

<input type="button" value="click" onclick="msg()"/>  

 

வெளியீடு:



 

நன்றி

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

 

ads Udanz