Saturday, March 16, 2024

ரியாக்ட் ஜெ எஸ் கற்றுக் கொள்வோம் புதிய தொடர் பகுதி-1

 



ரியாக்ட் ஜெ எஸ் என்பது ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி . இதுன் ஃபேஸ் புக்கால் உருவாக்கப்பட்டது. 2011-ல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து நிறைய அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரியாக்ட் ஜெ எஸ் என்பது யூசர் இன்டெர்ஃபேஸ்கள் உருவாக்கப் பயன்படுகின்றது.

ரியாக்ட் என்பது என்ன?

 

ரியாக்ட் ஜெ எஸ் சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்கள் உருவாக்கப் பயன்படுகின்றது.

ரியாக்ட் ஜெ எஸ் என்பது ஜாவா ஸ்கிரிப்ட் லைப்ரரி.

இது டெக்லரேடிவ் ஆனது

திறன் வாய்ந்தது.

ஃப்ளெக்சிபிள் ஆனது.

இது சிக்கலான யூசர் இண்டர்பேஸ்களை தனிதனி காம்பனண்டுகளாக பிரித்து பிறகு ஒன்றாக்கி உருவாக்குகின்றது.

குறிப்பிடத் தக்க விசயம் என்னவென்றால் ரியாக்ட் என்பது ஒரு லைப்ரரி தானே அன்றி ஆங்குலரைப்போன்று ஃப்ரேம் வொர்க் கிடையாது.

ரியாக்ட் ஆனது html,css, javascript ஆகியவற்றைப் பயன்படுத்தி காம்பனண்டுகளை உருவாக்குகின்றது.

இது காம்பனண்டு அடிப்படையிலான்ச UI லைப்ரரி.

ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் ஜெகொரி பயன்படுத்தியே டைனமிக் யூசர் இன்டெஃபேஸ்களை உருவாக்கலாம்.அப்படி இருக்கும் ரியாக்ட் எதற்கு?

1.    ரியாக்ட் என்பது வளமான அம்சங்கள் நிறைந்த ஜாவா ஸ்கிரிப்ட் லைப்ரரி. இது நிறைய ரியூஸ் செய்யக் கூடிய யுடிலிட்டி கோட்களை தருகின்றது.

2.    இது ஒரு பயன்பாட்டை சிறிய தனித்தனி காம்பனடுகளாக பிரித்து உருவாக்குகின்றது. இந்த காம்பனண்டுகள் ஒன்றுக்கொன்று இண்டிபெண்டெண்ட் ஆனது. இதனால் நிர்வாகிக்க எளிது. டெஸ்ட் செய்யவும் எளிது.

3.    ஜாவாஸ்கிரிப்டை விட குறைவான நிரல் வரிகள்.இதனால் வேகமாகவும் பிரடக்டிவ் ஆகவும் விளங்குகின்றது.

சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்.

 

பாரம்பரிய வெப் சைட்டுகளில் கோரிக்கையானது பிரவுசரில் இருந்து சர்வருக்கு அனுப்பப்படுகின்றது. சர்வர் அந்த பக்கத்தை ரெஸ்பான்ஸ் ஆக அனுப்பும்.About பக்கத்தை பற்றி கோரிக்கை அனுப்பினால் சர்வர் about.html பக்கத்தை அனுப்பி வைக்கும்.

பிறகு contact பக்கத்திற்கு கோரிக்கை அனுப்பினால் contact.html பக்கமானது சர்வரில் இருந்து அனுப்பப்படும்.

இந்த வகையிலான ரெகுவஸ்ட் மற்றும் ரெஸ்பான்ஸ் பயன்பாட்டை மெதுவாக்குகின்றது. ஒவ்வொரு தடவை புதிய தகவல் தேவைப்படும் பொழுது கிளையண்ட் ஆனது சர்வருக்கு ரெகுவஸ்ட் அனுப்புகின்றது. சர்வர் ரெஸ்பான்ஸ் செய்கின்றது.

இதற்கு மாறாக சிங்கிள் பேஜ் அப்ளிகேசன்கள் ஒரு html பக்கத்தைக் கொண்டது.


சரியான உதாரணம் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜிமெயில். புதிய தகவல் தேவைப்படும் பொழுது சர்வருக்கு கோரிக்கை அனுப்பப்படுவதில்லை.அதே ஃபைல் தான் ஆனால் அதன் கண்டண்ட் மாற்றப்படுகின்றது.

url மாறுகின்றது

கண்டண்ட் மாறுகின்றது

ஆனால் அதே ஃபைல்.

கண்டண்ட் ஆனது ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தி மாற்றப்படுகின்றது.

Home பேஜில் இருக்கும் பொழுது url ஆனது karthikeyanblogspot.com/about.

கண்டண்ட் ஆனது home பேஜ்.

ஃபைல் index.html.

Contact பக்கத்தில் இருக்கும் பொழுது url ஆனது karthikeyanblogspot.com/contact

கண்டண்ட் contact பேஜ்.

ஃபைல் அதே index.html

ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி கண்டண்டை மாற்றுவதால் பயன்பாடு வேகமாக விளங்குகின்றது.

இங்கு ஒவ்வொரு ரெகுவஸ்ட்டுக்கும் சர்வரை அனுகத் தேவையில்லை.

இதனால் அப்ளிகேசன் வேகமாகாவும் ரியாக்டிவ் ஆகவும் உள்ளது.

React vs Angular vs vue

React:

ரியாக்ட் என்பது UI அடிப்படையிலான ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி. இது எல்லா அம்சங்களும் நிறைந்தது அல்ல . மூன்றாவது நபர் பேக்கேஜுகளை தேவைப்பட்டால் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். உதாரணமாக ரியாக்டிற்கு ரவுட்டிங்க் திறமை கிடையாது.கூடுதல் பேக்கேஜுகளை இன்ஸ்டால் செய்து ரவுட்டிங்க் செய்யலாம்.

Angular

ஆங்குலர் என்பது முழுமையான காம்பனண்ட் அடிப்படையிலான UI ஃப்ரேம் வொர்க் ஆகும்.இது ரவுட்டிங்க், அதண்டிகேசன், அதாரைசேசன் என நிறைய அம்சங்கள் நிறைந்தது.ஆங்குலர் என்பது ரியாக்டிற்கு சிறந்த மாற்றுத்தேர்வு ஆகும்.

Vue

Vue என்பது காம்பனண்ட் அடிப்ப்டையிலான UI ஃப்ரேம் வொர்க் ஆகும். இது ஆங்குலரைக் காட்டிலும் குறைவான அம்சங்கள் கொண்டது. ஆனால் ரியாக்டைக் காட்டிலும் கூடுதல் அம்சங்கள் கொண்டதாகும்.

தொடரும்

முத்து கார்த்திகேயன், மதுரை.

 

 

 

 

ads Udanz

2 comments: