Tuesday, March 19, 2024

நோட் ஜெ எஸ் கற்றுக் கொள்ளலாம். பகுதி-3

 


இப்பொழுது REPL என்றால் என்னவென்று பார்ப்போம்.

R—READ INPUT

E-EVALUATE

P-PRINT OUTPUT

L-LOOPING

முதலில் கமாண்ட் பிராம்ப்டிற்க்கு செல்லவும்.

Node

எனக்கொடுக்கவும்.

நோட் ஜெ எஸ் பணிபுரிய ஆரம்பிக்கும்.

10+15 எனக் கொடுத்தால்

25 என பிரிண்ட் செய்து அடுத்த இன்புட்டிற்க்கு தயாராய் இருக்கும்.

அதாவது முதலில் ரீட் செய்து பிறகு Evaluate செய்து பிற்கு அவுட்புட் செய்து அடுத்து லூப் செய்து அடுத்த இன்புட்டிற்கு தயாராக இருக்கின்றது. இதுவே REPL என்ப்படுகின்றது.

இப்பொழுது

Let student={Name:”Karthikeyan”, mark:98}

என ஒரு ஆப்ஜெக்ட் உருவாக்குகின்றோம்.

இப்பொழுது

Student. Name எனக்கொடுத்தால்

Karthikeyan என பிரிண்ட் செய்யும்.

Ctrl+c கொடுத்து வெளியே வரவும்.

மீண்டும் node கொடுத்து உள்ளே செல்லவும்.

இப்பொழுது

Student.Name எனக் கொடுத்தால்

Undefined

எனக்காட்டும்.

இதில் இருந்து நோட் பிராம்ப்டில் நாம் கொடுப்பபை பெர்மனண்ட் ஸ்டோர் ஆவதில்லை என்பதை தெரிந்து கொள்ளவும்.

இப்பொழுது visual studio code எடிட்டர் சென்று மெனுவில் Terminal->new Terminal செல்லவும்.

இப்பொழுது node என டெர்மினலில் கொடுக்கவும்.

10+16    //input

26  // output

Let student={Name:”Muthu”,Mark:85}  //input

 

Student.Mark  //input

85   // output

இப்பொழுது

15+10 எனக்கொடுக்கவும்

25 என அவுட்புட் காட்டும்

_ எனக்கொடுத்தால் 25 என் மீண்டும் காட்டும்.

இதில் இருந்து _(அண்டர் ஸ்கோர்) என்பது முந்தைய அவுட்புட்டின் மதிப்பை தக்கவைக்கும் என அறிந்து கொள்ளலாம்.

10+15  // input

25      //output

_+25  //input

50     //output.

Node-ல் இருந்து வெளியேற .exit கொடுக்கவும்.

நன்றி

தொடரும்

முத்து கார்த்திகேயன், மதுரை.

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment