Friday, December 2, 2011

ஜாவா 9ம் பாடம்.


ஜாவா 9ம் பாடம்.


Class & object -2


Class-ன் பொது வடிவம்.
Class  classname
{
Type instance-variable -1;
Type instance –variable-2;
___
-------
Type instance-variable-n;
Type method-name1(){
}
--
--
Type method-name-n()
{
}
}
Class குள் அறிவிக்கப்படும் variable, instance variable என அழைக்கப்படுகின்றது..மெத்தட்களுக்கு உள்ளே coding உள்ளது. ஒரு க்ளாஸிற்குள் அறிவிக்கப்படும் variables மற்றும் மெத்தட்கள்  க்ளாஸின்
மெம்பர்கள் எனப்படுகின்றன.
ஒரு க்ளாஸிற்குள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு object ம் தனித்தனி  instance variable மதிப்புகளை கொண்டுள்ளன.ஒரு objectன் variables மற்ற object ந் மதிப்புகளிருந்து வேறுபட்டவையாகும்.
எளிய க்ளாஸின் உதாரணம்.
class rectangle
{
double length;
double breadth;
}
மேலே உள்ள க்ளாஸின் பெயர் Rectangle. இதில் length,breadth  என்று இரு instance variables  உள்ளன. மேலே உள்ள க்ளாஸிற்கு இது வரை எந்த methodம் அறிவிக்கப்பட வில்லை.
Rectangle என்றா பெயர் உபபோகித்து தான் இக்க்ளாஸிற்கான object அறிவிக்கப்பட வேண்டும்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் class declaration என்பது வெறும் template தான். இதற்கான object  உருவாக்கப்படும் போது தான் க்ளாஸிற்கு உயிரூட்டப்படுகின்றது.
Rectangle r1=new Rectangle();
மேலே உள்ள வரியானது Rectangle classற்கு r1 என்ற objectஐ உருவாக்குகின்றது.
objectன் மாறிகளுக்கு(variables)பின் வருமாறு மதிப்பிருத்தலாம்.
  r1.width=15;
உதாரண நிரல்.
Class Rectangle
{
double length;
double breadth;
}
Class RectangleDemo()
{
Public static void main(String[] args)
{
Rectangle r1=new Rectangle();
Double area;
r1.langth=20;
r1.breadth=15;
area=r1.length* r1.breadth;
System.out.println(“area is”+area);
}
மேலே உள்ள நிரலின் பெயர் RectangleDemo.java என பெயரிட்டிருக்கப் பட வேண்டும். அதாவது main function எந்த க்ளாஸிற்குள் உள்ளதோ அதன் க்ளாஸின் பெயர் தான் நிரலின் பெயராக இருக்க வேண்டும். பெயருடன் .java என்ற நீட்டிப்பு இருக்க வேண்டும்
-------தொடரும்.

ads Udanz

No comments:

Post a Comment