Wednesday, December 21, 2011

நிரல் மொழி கற்றுக்கொள்வதற்கு முன் சில அடிப்படை விஷயங்கள்:





Bit & bytes:
 Ram  மற்றும் hard disk முதலியவற்றிண் கொள்ளளவு BIT மற்றும் byte ல் அளவிடப் படுகின்றது.இருப்பதிலேயே சிறிய அளவு பிட் ஆகும்.
8 பிட் சேர்ந்தது 1 பைட் ஆகும்.

1 bit = a 1 or 0 (b)
8 bits = 1 byte (B)
1024 bytes = 1 Kilobyte (KB)
1024 Kilobytes = 1 Megabyte (MB)
1024 Megabytes = 1 Gigabyte (GB)
1024 Gigabytes = 1 Terabyte (TB)
தற்பொழுது எல்லாம் 1 tb அளவில் hard disk கிடைக்கின்றது. ஒரு  பிட்டில் 0 அல்லது 1 சேமிக்கலாம்.

ASCII மற்றும் Unicode:
நாம் keyboard ல் தட்டும் ஒவ்வொரு கீக்கும் ஒரு மதிப்பு உண்டு. உதாரணமாக A என்றால் 65, என்றால் 66 மற்றும் c என்றால் 67 என்று தொடரும். a என்றால் 97, b என்றால் 98 மற்றும் c என்றால் 99 என்று தொடரும். எண்டர் விசைக்கு 13.
Ascii- American standard code for information interchange.
Ascii-ல் ஆங்கில எழுத்துக்களுக்கு மற்றுமே கோட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பின் Unicode முறை ஏற்படுத்தப்பட்டது. அதில் தமிழ் உட்பட பெரும்பாலான மொழிகளுக்கு code ஒதுக்கப்பட்டது. ascii யில் ஒரு எழுத்துக்கு ஒரு பைட் போதும் . ஆனால் Unicode முறையில் ஒரு எழுத்துக்கு 2 பைட் வேண்டும். ஜாவா மற்றும் சி# போன்ற மொழிகள் Unicode முறையை பின் பற்றுவதால் அவற்றில் character தரவினத்துக்கு(data type) இரு பைட் நிணைவகம் தேவைப்படுகின்றது.
Distributed computing:

ஒரு சிஸ்டமில் வேலைகளைச் செய்வற்கு பதில் client server முறையில் வேலைகள் நெட் வொர்கில் பகிர்ந்தளிக்கப்பட்டு செய்வதே distributed computing எனப்படுகின்றது. client  server networking பற்றி மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

ads Udanz

1 comment: