Thursday, February 9, 2017

Asp.net lesson-3




முதலில் நாம் ஒரு வெப்சைட்டை உருவாக்க வேண்டும்.
அதற்கு முதலில் visual studio-க்குள் செல்ல வேண்டும்.

பிறகு file->new website –ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
கீழே உள்ள பாத்தில்(path) வெப் சைட் பெயரை விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.
இடது புறம் visual c# என்றும் வலது புறம் Asp.net Empty website என்பதையும் தேர்ந்து எடுக்கவும்.பிறகு ok கொடுக்கவும்.
உள்ளே சென்று வலது உள்ள solution exporer-ல் வலது கிளிக் செய்து Add new item என்பதை தேர்ந்து எடுக்கவும்.

இப்போது web form என்பதை தேர்ந்து எடுக்கவும் பெயரை விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம்.
Add பட்டனை க்ளிக் செய்யவும்.
வெப் பக்கத்தின் பெயர் aspx என்கின்ற extension கொண்டிருக்கும்.
உதாரணம் defaut.aspx.
<%@ Page Language="C#" AutoEventWireup="true" CodeFile="Default.aspx.cs" Inherits="_Default" %>

<!DOCTYPE html>

<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head runat="server">
    <title>First page</title>
</head>
<body>
    <form id="form1" runat="server">
    <div>
    Welcome to Asp.net
        <asp:Label ID="lblservertime" runat ="server" ></asp:Label>
    </div>
    </form>
</body>
</html>
Source ஆனது HTML CODING கொண்டிருக்கும்.
அதன் BODY என்கின்ற element-ற்க்குள் மேலே உள்ளவாறு கோடிங்கை மாற்றி அமைக்கவும்.
ஒரு label ஆனந்து add செய்யப் பட்டிருக்கின்றது.
அதன் ID ப்ரொபர்ட்டி ஆனது lblservertime என்றும் SERVER-ல் ரன் செய்யப் பட வேண்டும் என்பதற்காக runat=”server” என்பதும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
கீழே deign  என்பதை க்ளிக் செய்தால் கீழ் வருமாரு இருக்கும்.
வெப் பக்கத்தை டபுள் க்ளிக் செய்தால் default.aspx.cs என்கின்ற பெயருடன் ஃபைல் ஒன்று உருவாகும்.
அதில் page_load என்பதன் உள்ளே கீழ் வருமாரு கோடிங்கை மாற்றி அமைக்கவும்.
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Web;
using System.Web.UI;
using System.Web.UI.WebControls;

public partial class _Default : System.Web.UI.Page
{
    protected void Page_Load(object sender, EventArgs e)
    {
        lblservertime.Text = DateTime.Now.ToString();

    }
}
Ctrl+f5 க்ளிக் செய்தால் கீழ் வருமாரு output இருக்கும்.
மீண்டும் சந்திப்போம்
நன்றி வணக்கம்.
-முத்து கார்த்திகேயன்
ads Udanz

No comments:

Post a Comment