Monday, February 20, 2017

சி மொழியில் சில எளிய நிரல்கள்:



சி மொழியில் சில எளிய நிரல்கள்:

இந்த கட்டுரையில் நாம் சில சி மொழியில் எழுதப்பட்ட சில எளிய நிரல்களை காண இருக்கிறோம்.முதலில் மூன்று எண்கள் உள்ளீடு செய்யப்பட்டு அதில் எது மிகப் பெரிய எண் என்பதை வெளியீடு செய்ய வேண்டும்.

நிரல்-1:

/* big number among three numbers.*/
#include <stdio.h>
int main()
{
  int a,b,c;
  printf("enter three numbers:");
  scanf("%d %d %d",&a,&b,&c);
  if(a>b && a>c)
  {
      printf("a is big number");
  }
  else if (b>c)
  {
      printf("b is big number");
 }
 else
 {
     printf("c is big number");
 }
    return 0;
}
மேலே உள்ள நிரலில் a,b,c என்று எண்கள் உள்ளீடு வாங்கப்படுகின்றது.
அதற்கடுத்து  a ஆனது b மற்றும் c ஆகிய இரண்டு எண்களை பெரியதா என்று if statement மற்றும் && operator மூலம் சரி பார்க்கப்பட்டு true எனில்  பெரிய என் என வெளியீடு செய்யப்படுகின்றது. False எனில் else if மூலம்
b ஆனது cயை காட்டிலும் பெரிய எண்ணா என சரிபார்க்கப்படுகின்றது. True
எனில் b பெரிய எண் என வெளியீடு  செய்யப்படுகின்றது. அதுவும் false எனில் c பெரிய எண் என வெளியீடு  செய்யப்படுகின்றது.

நிரல்-2

 #include <stdio.h>
int main()
{
    int n;
    printf("enter a number:");
    scanf("%d",&n);
    if(n%2==0)
    {
        printf("even number");
    }
    else
    {
        printf("odd number");
    }
    return 0;
}
நிரல் -2ல் ஒரு எண்ணானது உள்ளீடு வாங்கப்பட்டு அது odd number இல்லை Even number என வெளியீடு செய்யப்படுகின்றது.இரண்டால் அந்த எண்ணை வகுபடும் போது 0 மீதி எனில் even number எனவும் இல்லையெனில் odd number எனவும் வெளியீடு செய்யப் படுகின்றது.

நிரல்-3

#include <stdio.h>

int main()
{
    int n,b,sum=0;
    printf("enter a number:");
    scanf("%d",&n);
    while(n>0)
    {
        b=n%10;
        sum=sum+b;
        n=n/10;

    }
    printf("sum of individual digits=%d",sum);

    return 0;
}
மேலே உள்ள நிரல்-3ல் ஒரு எண் உள்ளீடு வாங்கப்டுகின்றது. பின்னர் அந்த எண் ஆனது while லூப்பிற்குள் pass செய்யப்படுகின்றது.ஒரு எண் ஆனது 10 ல் வகுபடும் போது (integer division எனில்) கடைசி digit போக மற்ற digit ஈவு கிடைக்கும்..உதாரணத்திற்கு 354 ஐ 10 ல் வ்குபடும் போது 35 ஈவு ஆக கிடைக்கும். அதே சமயத்தில் ஒரு எண்ணை 10-ல் வகு படு பொழுது மீதி கடைசி டிஜிட் கிடைக்கும். உதாரணத்திற்கு 354 என்ற எண்ணை 10-ல் வகுபடும் பொழுது 4 நீதியாக கிடைக்கும். இந்த logic பயன் படுத்தி n ஆனது 0 ஆகும் வரை லூப்பில் உள்ள statements ஆனது repeat செய்யப்பட்டு ஒவ்வொரு டிஜிட் ஆக பெறப்பட்டு கூட்டப் படுகின்றது. லூப்பை விட்டு வெளி வந்து கூட்டுத்தொகையானது வெளியீடு செய்யப்படுகிறது.

நிரல்-4

#include <stdio.h>

int main()
{
    int n,b,rev=0;
    printf("enter a number:");
    scanf("%d",&n);
    while(n>0)
    {
        b=n%10;
        rev=rev*10+b;
        n=n/10;

    }
    printf("reverse of a number=%d",rev);

    return 0;
}
மேலே உள்ள நிரலில் ஒரு எண்  ஆனது உள்ளீடு செய்யப் பட்டு அந்த எண்ணின் reverse வெளியீடு செய்யப் படுகின்றது .நிரல்-3 ல் உபயோகப்படுத்தப்பட்ட அதே logic உபயோகப்படுத்தப் படுகின்றது. ஆனால் ஒவ்வொரு கடைசி டிஜிட்டும் 10-ல் பெருக்கப் பட்டு கூட்டப் படுகின்றது. லூப்பை விட்டு வெளி வரும் போது அந்த எண்ணின் reverse எண் வெளியீடு செய்யப்படுகின்றது.

நிரல்-5

#include <stdio.h>

int main()
{
    int n,b,rev=0,a;
    printf("enter a number:");
    scanf("%d",&n);
    a=n;
    while(n>0)
    {
        b=n%10;
        rev=rev*10+b;
        n=n/10;

    }
    if(a==rev)
    {
        printf("palindrome number");

    }
    else
    {
        printf("not a palindrome number");
    }

    return 0;
}
நிரல்-5ல் ஒரு எண் ஆனது palindrome எண்ணா என சரி பார்க்கப்படுகின்றது. Palindrome எண் எனில் அந்த எண்ணின் reverse-ம் அதே எண் தான் வரும் உதாணம் 131 மற்றும் 13431. நிரல்-4 ல் உபயொகப்படுத்த அதே logic மூலம் அந்த எண் reverse செய்யப் படுகின்றது. லூப்பை விட்டு வெளி வந்து reverse செய்யப்பட்ட எண்ணும் உள்ளீடு செய்யப் பட்ட எண்ணும் சமம் எனில் paloindrome எண் என வெளியீடு செய்யப்படுகின்றது. False எனில் not a polyndrome number என வெளியீடு செய்யப்படுகின்றது.

நிரல்-6

#include <stdio.h>
int main()
{
    int n,a,b,sum=0;
    printf("enter a number:");
    scanf("%d",&n);
    a=n;
    while(n>0)
    {
      b=n%10;
      sum=sum+b*b*b;
      n=n/10;
    }
    if(a==sum)
    {
        printf("armstrong number");

    }
    else
    {
        printf("not a armstrong number");
    }
    return 0;
}
நிரல்-6 ஆனது ஒரு எண் armstrong எண்ணா என சரி பார்க்கப்படுகின்றது. ஒரு எண்ணின் ஒவ்வொரு டிஜிட்டின் qube-ம் கூட்டப்பட்டு கூட்டுத்தொகை அதே எண் எனில் அது armstrong எண் என வெளியீடு செய்யப் படுகின்றது.. உதாணத்திற்கு 153 எனில் 13+53+33 =153 ஆகும் எனவே 153 ஒரு armstrong நம்பர் ஆகும் . மேலே உள்ளா நிரலில் லூப்பிற்க்குள் ஒவ்வொரு டிஜிட் ஆக பெறப்பட்டு ஒவ்வொன்றும் qube செய்ய்ப் பட்டு கூட்டப்படுகின்றது. லூப்பை விட்டு வெளி வந்த பிறகு உள்ளீடு செய்யப்பட்ட எண்ணும் கூட்டுத்தொகையும் சமம் எனில் அந்த எண் armstrong number என வெளியீடு செய்யப்படுகின்றது.




நிரல்-7

#include <stdio.h>
#include <stdlib.h>

int main()
{
    int n,i;
    printf("enter a number:");
    scanf("%d",&n);
    for(i=2;i<n;i++)
    {
        if(n%i==0)
        {
            printf("not a prime number");
            exit(0);

        }


    }
    printf("prime number");
    return 0;
}
எந்த எண்ணாலும் வகுபடாத எண்ணை prime number என்பார்கள். உதாரணத்திற்கு 11,17, மற்றும் 23 ஆகியவை. நிரல்-7ல் ஒரு எண் ஆனது உள்ளீடு செய்யப்படுகின்றது. For லூப்பிற்க்குள் அந்த எண் ஆனது 2 முதல் அந்த எண்ணை விட ஒரு எண் சிறியது வரை ஒவ்வொரு எண்ணாக வகுக்கப்படுகின்றது. எந்த எண்ணாலாவது வகு பட்டால் not a prime number என வெளியீடு செய்யப்பட்டு நிரலை விட்டே வெளி வ்ந்து விகின்றது. அதற்கு exit(0) என்கின்ற library function பயன் படுகின்றது. அந்த லைப்ரரி ஃபங்சனிற்காக stdlib.h என்கின்ற ஹெட்டர் ஃபைல் include செய்யப்படுகின்றது. லூப் முடியும் வரை எந்த எண்ணாலும் வகுபடாவிட்டால் அந்த எண் prime number என வெளியீடு செய்யப்படுகின்றது.
-                                 - முத்து கார்த்திகேயன்,மதுரை

ads Udanz

No comments:

Post a Comment