Saturday, March 17, 2018

போட்டாசாப்பில் ஒரு படத்திற்கு பார்டர் வரைவது எப்படி?



முதலில் போட்டாசாப் சென்று file->open செய்து ஒரு படத்தை கிளிக் செய்யவும். பின் image -> duplicate செய்யவும் . இப்பொழுது காபி செய்யப்பட்ட படத்தை விட்டு விட்டு ஒரிஜினல் படத்தை மூடி விடவும்.
ரெக்டாங்கில்  மார்க்யூ டூல் செலெக்ட் செய்து முழுப்படத்தையும் செலெட் செய்யவும்.
பின் டூல் பாரில் உள்ள ஆப்சன் பாரில் subtract selection தேர்வு செய்து மேற்புறம், வலது புறம், இடது புறம், கீழ் புறம் மார்ஜின் விட்ட் செலெக்ட் செய்யவும்.
இப்பொழு டூல் பாக்ஸில் உள்ள பிரஸ் டூல் செலெக்ட் செய்யவும். ஒரு குறிப்பிட்ட நிறத்தை தேர்ந்தெடுத்து படத்தின் மேல் தடவவும்.
பின் ctrl+d கீயை பிரஸ் செய்து செலக்சனை கிளியர் செய்யவும்.

நன்றி
-முத்து கார்த்திகேயன்,மதுரை

ads Udanz

No comments:

Post a Comment