Tuesday, March 13, 2018

ஜாவாவில் மல்டிதிரட்டிங்-பகுதி 1




திரட் என்பது என்ன?
இது புரோகிராமிங் இயங்கும் பாதையாகும்.இது ஒரு நிரலின் தொடர்ச்சியான கட்டளை ஆகும்.இது நிரலின் சிறிய யூனிட் ஆகும். இது சிபியூ ஆனது ஒரே நேரத்தில் வெவ்வேறு செயல்களை செய்கின்றது.உதாரணமாக ஒரு டெக்ஸ்ட் ஃபைலை எழுதுதல் மற்றும் ப்ரின்ட் செய்தல், ஒரு மென்பொருளை நிறுவுதல் மற்றும் ஸ்டேட்டஸ் பாரில் தற்போதைய தேதி, நேரத்தை காண்பித்தல் ஆகிய பல செயல்களை ஒரே நேரத்தில் செய்கின்றது.
மல்டிதிரட்டிங்க் அடிப்படைகள்:
சிங்கிள் திரட் அப்ளிகேசன் என்பது ஒரு நேரத்தில் ஒரு செயலை தான் செய்யும். முதலில் வந்த பிராசஸ் முடிந்த பிறகு தான் அடுத்த பிராசஸ் தொடங்கும். மல்டி திரட் ஆனது கணினியானது சிக்கலான கணக்கீடுகளின் போது பயன்படுகின்றது. மல்டி திரட் ஆனது ஒரே நேரத்தில் ஒரு நிரலின் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளை இயக்க பயன்படுகின்றது. ஒவ்வொரு நிரலும் ஒரு திரட்டாவது கொண்டிருக்கும் நாம் விரும்பும் பட்சத்தில் அதிக திரட்டுகளைச் சேர்த்து கொள்ளலாம்.
மைக்ரோ பிராசஸர் ஆனது பிராசஸுக்கு மெமரி ஒதுக்கீடு செய்கின்றது. ஒவ்வொரு பிராசஸும் நிணைவகமையும் அதன் முகவரியையும் கொண்டிருக்கின்றது. ஒரு நிரலின் எல்லா திரட்டுகளும் ஒரே நிணைவக முகவரியை கொண்டிருக்கும்.
மல்டி திரட்டிங்கின் இரு வகைகள்:
1.   பிராசஸ் அடிப்படையிலான மல்டி டாஸ்க்கிங்க்
2.   திரட் அடிப்ப்டையில் ஆன மல்டி டாஸ்க்கிங்.
பிராசஸ் அடிப்படையிலான மல்டி டாஸ்கிங்க் :
ஒரு பிராசஸ் என்பது பிராசஸரால் இயக்கப்ப்டும் நிரலாகும். பிராசஸ் அடிப்படையிலான மல்டி டாஸ்கிங்க் ஆனது ஜாவா ஆனது ஒரு நிரலில் இருந்து அடுத்த நிரலுக்கு மாறுவதை செய்ய உதவுதாகும். இப்பொழுது எல்லா நிரல்களும் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.உதாரணமாக வெப் டாக்குமெண்டை பிரிண்ட் எடுத்துக் கொண்டே மீடியா பிளேயரில் பாட்டு கேட்பது ஆகும்
பிராசஸ் அடிப்ப்டையிலான மல்டி திரட்டிங்க் ஆனது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்கண்ட நிரல்களை இயக்குவதாகும். இவை வெவ்வேறு நிணைவகங்களின் இயங்குவதால் ஒன்றில் இருந்து அடுத்த நிரல்லுக்கு ஸ்விட்ச் ஒவர் செய்வது ஹெவி வெய்ட் ஆகும்.
திரட் அடிப்ப்டையிலான மல்டி டாஸ்க்கிங்க்:
ஒரே நிரலில் அதன் வெவ்வறு திரட்டுகள் இயங்குவது ஆகும். உதாரணமாக ஒரு டெக்ஸ்ட் ஃபைல் ஒன்றை ஃபார்மட் செய்து கொண்டே பிரிண்ட் செய்வது போல் ஆகும் . இவை வெவ்வேறு திரட்டுகள் என்றாலும் ஒரே புரோகிராம் என்பதால் ஒன்றில் இருந்து மற்ற திரட்டுக்கு மாறுவது என்பது லைட் வெய்ட் ஆகும். ஏனெனில் ஒரே மெமரி அட்ரஸில் இயங்குவதால்.
மல்டி திரட்டிங்க் நண்மைகள்
1.   பெர்ஃபாமன்ஸ்:ஓரு நிரலின் கணக்கீடலையும் இன்புட், அவுட்புட் ஆகியவையும் ஒரே நேரத்தில் இயங்குவதால் பெர்ஃபாமன்ஸ் அதிகரிக்கின்றது.
2.    சிஸ்டம் பயன்பாட்டுக் குறைவு
3.   வெவ்வேறு அப்ளிகேசனை ஒரே நேரத்தில் அணுகுதல்.
4.   சிக்கலான கணக்கீட்டு பயன்பாடுகளை சுலபமாக்குகின்றது.
மல்டி திரட்டிகிங்கின் தீமைகள்:
1.   ஒன்றுக்கு மேற்பட்ட திரட்டுகள் ஒரே நேரத்தில் ஒரு வேரியபிளை அணுகுதல் ஆகும் பொழுதும் ஒரு திரட்டாவது அந்த வேரியபிளை எழுதும் பொழுதும் சிக்கல் ஆகின்றது.
2.   டெட்லாக்: இரு திரட்டுகள் முடிவடைவதற்கு ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் பொழுது டெட்லாக் எனப்படும் நிலை ஏற்படுகின்றது..
3.   லோ திரட் பீரியாரிட்டி காரணமாக குறிப்பிட்ட திரட் ஆனது இயங்க முடியாமல் இருக்க நேரிடுதல்.

 -தொடரும்.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment