டேலியில் எந்த
ஒரு பரிவர்த்தணையும் முறைப்படி அதற்குரிய வவுச்சர் டைப்பில் பதியவேண்டும். அதை வைத்து
டேலி சாப்ட்வேரே பிராப்பிட் & லாஸ் , பேலன்ஸ் சீட் முதலியவற்றை அதுவே ஆட்டோ ஜெனரேட்
செய்யும்.
வவுச்சர் டைப்பின்
வகைகள்:
1.
Contra
2.
Payment
3.
Receipt
4.
Journal
5.
Purchase
6.
Sales
7.
Debit
note
8.
Credit
note.
Contra:
இதில் புதிதாக
ஒரு பேங்க் அக்கவுண்ட் தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், பேங்க் ஓடி
(od) பெறுதல், பேங்க் ஓடி செலுத்தல்,
ஒரு பேங்க் அக்கவுண்டிலிருந்து
இன்னொரு அக்கவுண்டிற்கு பணம் டிரான்ஸ்பர் செய்தல் முதலியவற்றை காண்ட்ரா வவுச்சரில்
பதிவு செய்யலாம்.
இதற்குறிய சார்ட்
கட் கீ- f4.
Contra உதாரணங்கள்:
1.
வங்கியில் ரூ 7000 செலுத்தப்பட்ட்து.
dr:
வங்கி கணக்கு 7000
(bank
a/c)
cr பணம் (cash
a/c) 7000
2.
ரூ
10000 வங்கி od பெறப்பட்டது.
Dr: வங்கி கணக்கு( bank a/c) 10000.
Cr: வங்கி o/d
(bank o/d a/c) 10000
3.
வங்கியிலிருந்து
ரூ 2000 எடுக்கப்பட்டது.
Dr:
பணம்(cash) 2000
Cr:
வங்கி (bank) 2000
4.
வங்கி
od செலுத்தப்ப்பட்டது:
Dr:
வங்கி o/d (bank o/d) 10000
Cr:
வங்கி (bank) 10000.
Payment:.
ஒரு சப்ளையருக்கு
பணம் கொடுத்தல், சொத்து வாங்குதல், செலவுகள் அதாவது வாடகை, சம்பளம், மின்சாரக் கட்டணம்,
தொலைபேசி கட்டணம் முதலியவற்றை செலுத்தும் பொழுது பேமெண்ட் வவுச்சர் டைப்பில் பதிவு
செய்ய வேண்டும். இதில் முக்கியமாக பணம் அல்லது பேங்க் அக்கவுண்ட் கிரெடிட் செய்யப்பட
வேண்டும்.
இதற்குரிய சார்ட்
கட் கீன் f5.
Payment உதாரணம்:
1.
தள்ளுபடி
கொடுத்தது: ரூ 2500
Dr:
தள்ளுபடி(indirect expenses) 2500
Cr:
பணம் (cash) 2500
2.
சொந்த
செலவிற்காக வங்கியிலிருந்து ரூ 7000 எடுக்கப்பட்டது:
Dr:
Drawing(capital) 7000
Cr:
பணம் (cash) 7000
3.
ரூ
20000 க்கு இயந்திரம் வாங்கப்பட்டது.
Dr:
இயந்திரம்: (fixed assets) 20000
CR
பணம் (cash a/c) 20000
4.
திரு
கணேசிடமிருந்து ரூ 12000 கொடுக்கப்பட்டது
DR:
கணேஸ்(sundry debtor) 12000
Cr:
பணம் (cash) 12000
5.
மின்சாரக்
கட்டணம் ரூ 2000 செலுத்தப் பட்டது.
DR:
மின்சாரக் கட்டணம் (Indirect expenses) 2000
CR:
பணம் (cash) 2000.
மேலே
உள்ள எல்லா உதாரணங்களிலும் பணம் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. எல்லா பேமெண்டிலும் கட்டாயமாக
பணம் அல்லது வங்கிக் கணக்கு கிரெடிட் செய்யப்பட வேண்டும்.
Receipt
கஸ்டமரிடமிருந்து
பணம் பெறுதல், ஒரு பொருளை விற்கும் பொழுது தள்ளுபடி பெறுதல், பேங்க் வட்டி பெறுதல்,
கமிசன் பெறுதல் போன்ற வற்றை ரெசிப்ட் வவுச்சரில் பதிவு செய்தல் வேண்டும். இதில் முக்கியமாக
பணம் அல்லது வங்கிக்
கணக்கு டெபிட் செய்யப்பட வேண்டும்.
இதற்குறிய சார்ட்
கட் கீ:f6.
சான்று :
1.கூடுதல் முதலீடாக
ரூ 2,00,0000 பெறப்பட்டது.
DR: பணம் (cash)2,00,000.
CR. முதலீடு (capital) 2,00,000.
2. வங்கியிடமிருந்து
ரூ 3000 வட்டி பெறப் பட்டது.
DR: பணம் (cash) 3000
cr: வட்டிக் கணக்கு
(indirect income) 3000
3. வங்கியில் ரூ
2,00,000 லோன் பெறப்பட்டது.
Dr. வங்கி(bank) 2,00,000
Cr: வங்கி லோன்
(loan & Liability) 2,00,000.
4.வாடகை ரூ
7000 பெறப்பட்டது.
Dr: பணம் (cash) 7,000
CR: வாடகை கணக்கு(indirect
income) 7,000
5.
இயந்திரம்
ரூ 10000க்கு விற்கப் பட்டது.
Dr:
பணம் (cash)10,000
Cr:
இயந்திரம்(fixed assets) 10,000.
மேலே
உள்ள எல்லா பதிவுகளிலும் பணம் அல்லது வங்கிக் கணக்கு டெபிட் செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
Journal:
இதில் அட்ஜஸ்ட்மெண்ட்
என்ட்ரி அதாவது பொருட்கள் தேய்மானம், நிலுவையில் உள்ள சம்பளக் கணக்கு, முன் கூட்டியே
செய்யப்பட்ட செலவு,
சொத்து கடன் கொடுத்து
வாங்குதல் போன்றவற்றின் போது ஜெர்னல் டைப்பில் பதிவு செய்யலாம்.
இதற்குறிய சார்ட்
கட் கீ f7.
சான்றுகள்.
1.இயந்திரம் தேய்மானம்
ரூ 5000.
Dr: இயந்திர தேய்மானம்(indirct
expenses) ரூ 5,000.
Cr: இயந்திரம்(fixed
assets) 5,000
2. முதலீடு மேலான
வட்டி ரூ 2,000
Dr. முதலீட்டு
வட்டி(indirect expenses) 2,000.
Cr. முதலீடு: (capital) 2,000.
3. நிலுவையில்
உள்ள சம்பளம்: ரூ 5000
Dr. சம்பளம் (indirect
expenses) 5,000.
Cr: சம்பள நிலுவை(current
liability) 5,000.
4. முன் கூட்டியே
செலுத்தப்பட்ட தள்ளுபடி: ரூ 200.
Dr. முன் செலுத்தப்பட்ட
தள்ளுபடி(current assets):200
Cr: தள்ளுபடி:
(indirect expenses) 200
Purchase:
இது கடனுக்கு சரக்கு
வாங்கினாலும் சரி அல்லது பணம் கொடுத்து சரக்கு வாங்கினாலும் சரி பர்சேஸ் டைப்பில் பதிவு
செய்யப்பட வேண்டும்.
இதற்குறிய சார்ட்
கட் கீ :F9.
சான்று:
1.
ரொக்கத்திற்கு
கொள்முதல் செய்யப்பட்ட கணக்கு: 20,000.
Dr:
கொள்முதல் கணக்கு:(purchase accounts)
20,000.
Cr:
பணம் (cash a/c) 20,000.
2.
ரவியிடமிருந்து
ரூ 50,000க்கு சரக்கு கொள்முதல் செய்யப்பட்டது
Dr:
கொள்முதல் கணக்கு (purchase accounts)
50,000.
Cr:
ரவி (sundry creditors)
50,000.
Sales:
இது கடனுக்கு சரக்கு
விற்றாலும் சரி அல்லது பணத்துக்கு விற்றாலும் சேல்ஸ் டைப்பில் பதிவு செய்யப் பட வேண்டும்.
இதற்குறிய சார்ட்
கட் கீ: F8.
சான்று:
1.
ரொக்கத்திற்கு
விற்கபட்ட சரக்கு: ரூ 30,000.
Dr:
பணம்(cash a/c) 30,000.
Cr:
விற்பனைக் கணக்கு (sales a/c) 30,000.
2.
ரமேஸ்
என்பவற்கு கடனில் விற்கப்பட்ட சரக்கு ரூ 20,000.
Dr:
ரமேஸ் (sundry debtor) 20,000.
Cr:
விற்பனைக் கணக்கு (sales a/c)20,000.
Debit note:
இது வாங்கிய சரக்கு
ஏதிலும் சேதாரம் இருந்தால் நாம் சப்ளையருக்கு திருப்பி அனுப்பும் பொழுது பதிவு செய்ய
பயன் படுகின்றது.
சார்ட் கட் கீ:
ctrl+f9.
1.
ரவிக்கு
ரூ 400 மதிப்புள்ள சரக்கு திருப்பி அனுப்பபட்டது.
Dr:
ரவி (sundry creditor) 400
Cr:
கொள்முதல் திருப்பம்(purchase accounts) 400
Credit note:
இது நம்மிடமிருந்து
சரக்கு வாங்கிய கஸ்டமர் சேதாரம் எனில் நமக்கு பொருளை திருப்பி பெறும் பொழுது பதிவு செய்ய பயன்படுகின்றது.
சார்ட் கட் கீ:
ctri+f8.
சான்று:
ரமேசிடமிருந்து
ரூ 400 மதிப்புள்ள சரக்கு சேதாரம் திருப்பி பெறப்பட்டது.
Dr: விற்பணை திருப்பம்(sales
account) 400.
CR: ரமேஸ் (sundry debtor) 400
பின் குறிப்பு:
முதலில் gate
way of tally –யில் இருந்து alt+f3 அழுத்தி company info மெனு செல்லவும். இங்கு இங்கு create company அழுத்தி புதிதாக கம்பனி உருவாக்கிக்
கொள்ளவும். பிறகு accounts info சென்று அங்கு ledger அழுத்தி பிறகு சிங்கிள்
create செய்து ஒவ்வொரு லெட்ஜெர் ஆக உருவாக்கிக் கொள்ளவும். நான் மேலே உள்ள எல்லா சான்றுகளிலும்
அடைப்பிக் குறிக்குள் எல்லா லெட்ஜெரும் எந்த க்ரூப் என குறிப்பிட்டு உள்ளேன்.
பிறகு
accounting vouchers சென்று ஒவ்வொரு வவுச்சர் டைப்பிலும் வவுச்சர் உருவாக்கவும்.
மீண்டும் ஞாபகத்திற்காக
ஒவ்வொன்றின் சார்ட் கட் கீ மட்டும் மீண்டும்:
1.
Contra
F4
2.
Payment
F5
3.
Receipt
F6
4.
Journal
F7.
5.
Purchase
F9
6.
Sales
F8
7.
Debit
note CTRL+F9
8.
Credit
note CTRL+F8.
Debit
note , credit note முன் கூட்டியே எனேபிள் ஆக இருக்காது. F11 accounting voucher சென்று அங்கு Enable
debit and credit note என்பதிற்கு yes கொடுக்கவும். அதே போல் சேல்ஸ் மற்றும் பர்ச்சேஸ்
வவுச்சரில் ctrl+V அழுத்தி டேட்டா பதிவு செய்யவும்.
-முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment