Friday, August 3, 2018

PHP Functions ஒரு பார்வை



PHP ஃபங்க்சன் என்பது ஒரு நிரல் வரிகளின் தொகுப்பாகும். ஒரு தடவை எழுதி வைத்துக் கொண்டு எத்தனை முறை வேண்டுமென்றாலும் அழைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ரியூசபிலிட்டி என்பது சாத்தியமாகின்றது. இது ஆர்க்கியூமெண்ட்களை இன்புட் ஆக எடுத்துக் கொள்கின்றது. அதே சமயத்தில் ஒரு மதிப்பை ரிடர்ன் செய்யவும் செய்யும்.
ஆயிரக் கணக்கான லைப்ரரி ஃபங்க்சன்களும் பயன்பாட்டில் உள்ளன.

PHP Functions நண்மைகள்:
Code Reusability: ஓரு தடவை எழுதி வைத்துக் கொண்டு திரும்ப திரும்ப அழைப்பதால் கோட் ரியூசபிலிட்டி சாத்தியமாகின்றது.
Less Code:  ஒரு தடவை மட்டும் எழுதுவதால் நிரல் வரிகளின் எண்ணிக்கை குறைகின்றது.
 Easy to understand: புரிந்து கொள்வது எளிதாகின்றது..

PHP User-defined Functions
லைப்ரரி ஃபங்க்சன்கள் மட்டும் இல்லாமல் நாமே  ஃபங்க்சன்களை எழுதி வைத்துக் கொண்டு அதை அழைக்கலாம்.
சிண்டாக்ஸ்
  1. function functionname(){  
  2. //code to be executed  
  3. }  
PHP Functions உதாரணம்.
  1. <?php  
  2. function sayHello(){  
  3. echo "Hello PHP Function";  
  4. }  
  5. sayHello();//calling function  
  6. ?>  
வெளியீடு:
Hello PHP Function
PHP Function Arguments
ஓரு பங்க்சனுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்க்கியூமெண்ட்களை பங்கனுக்கு இன்புட் ஆக அனுப்பலாம்.
சான்று நிரல்:
<?php  
function sayHello($name){  
echo "Hello $name<br/>";  
}  
sayHello("Sonoo");  
sayHello("Vimal");  
sayHello("John");  
?>  
Output:
Hello Sonoo
Hello Vimal
Hello John
இப்பொழுது இரண்டு ஆர்க்கியூமெண்ட்களை அனுப்புவது எப்படி என்று பார்ப்போம்.
சான்று நிரல்:

<?php  
function sayHello($name,$age){  
echo "Hello $name, you are $age years old<br/>";  
}  
sayHello("Sonoo",27);  
sayHello("Vimal",29);  
sayHello("John",23);  
?>  
வெளியீடு:
Hello Sonoo, you are 27 years old
Hello Vimal, you are 29 years old
Hello John, you are 23 years old

சான்று நிரல்:
<!DOCTYPE html>  
<html>  
<head>  
    <title>Parameter Addition and Subtraction Example</title>  
</head>  
<body>  
<?php  
        //Adding two numbers  
         function add($x, $y) {  
            $sum = $x + $y;  
            echo "Sum of two numbers is = $sum <br><br>";  
         }   
         add(467, 943);  
  
         //Subtracting two numbers  
         function sub($x, $y) {  
            $diff = $x - $y;  
            echo "Difference between two numbers is = $diff";  
         }   
         sub(943, 467);  
      ?>  
</body>  
</html>  

 சான்று நிரல்:
·  <?php  
·  //add() function with two parameter  
·  function add($x,$y)    
·  {  
·  $sum=$x+$y;  
·  echo "Sum = $sum <br><br>";  
·  }  
·  //sub() function with two parameter  
·  function sub($x,$y)    
·  {  
·  $sub=$x-$y;  
·  echo "Diff = $sub <br><br>";  
·  }  
·  //call function, get  two argument through input box and click on add or sub button  
·  if(isset($_POST['add']))  
·  {  
·  //call add() function  
·   add($_POST['first'],$_POST['second']);  
·  }     
·  if(isset($_POST['sub']))  
·  {  
·  //call add() function  
·  sub($_POST['first'],$_POST['second']);  
·  }  
·  ?>  
·  <form method="post">  
·  Enter first number: <input type="number" name="first"/><br><br>  
·  Enter second number: <input type="number" name="second"/><br><br>  
·  <input type="submit" name="add" value="ADDITION"/>  
·  <input type="submit" name="sub" value="SUBTRACTION"/>  
·  </form>






HP Call By Reference
ஒரு பங்கசனுக்கு ஒரு வேல்யூவை அனுப்பும் பொழுது அதில் செய்யும் மாற்றங்கள் ஒரிஜினல் மதிப்பை மாற்றுவதில்லை. அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால் & என்ற சிம்பளை பயன்படுத்தி ரெஃபெரென்ஸ் ஆக அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் பொழுது பங்க்சனில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் ஒரிஜினல் மதிப்பில் மாற்றங்கள் ஏற்படும்.
சான்று நிரல்:
  1. <?php  
  2. function adder(&$str2)  
  3. {  
  4.     $str2 .= 'Call By Reference';  
  5. }  
  6. $str = 'Hello ';  
  7. adder($str);  
  8. echo $str;  
  9. ?>  
வெளியீடு:
Hello Call By Reference
PHP Function: Default Argument Value
 ஒரு பங்க்சணுக்கு டிஃபால்ட் மதிப்பை ஏற்படுத்தலாம். ஒரு பங்க்சணுக்கு வேல்யூவை அனுப்பாவிட்டால் டிஃபால்ட் மதிப்பை ஏற்றுக்கொள்ளும்.
சான்று நிரல்:
<?php  
function sayHello($name="Sonoo"){  
echo "Hello $name<br/>";  
}  
sayHello("Rajesh");  
sayHello();//passing no value  
sayHello("John");  
?>  
வெளியீடூ:
Hello Rajesh
Hello Sonoo
Hello John
PHP Function: Returning Value
ஓரு பங்க்சன் ஆனது ஒரு மதிப்பை திரும்பி அனுப்பலாம்.
சான்று நிரல்:
<?php  
function cube($n){  
return $n*$n*$n;  
}  
echo "Cube of 3 is: ".cube(3);  
?>  
Output:
Cube of 3 is: 27
PHP Variable Length Argument Function
PHP  ஆனது variable length argument பங்க்சனை ஆதரிக்கின்றது.இதன் அர்த்தம் நீங்கள் பங்க்சனுக்கு 0, 1 அல்லது n வேரியபிள்களை ஆர்க்கியூமெண்ட் ஆக அனுப்ப்பலாம்.
அவ்வாறு செய்வதற்கு ஆர்க்குயுமெண்ட் பெயருக்கு முன்னே மூன்று டாட்களை(…) வைக்க வேண்டும்
சான்று நிரல்:.
<?php  
function add(...$numbers) {  
    $sum = 0;  
    foreach ($numbers as $n) {  
        $sum += $n;  
    }  
    return $sum;  
}  
  
echo add(1, 2, 3, 4);  
?>  
வெளியீடூ:
10
Php ரிகர்சிவ் ஃபங்க்சன்:
Php யில் ஒரு ஃபங்க்சனை அதே ஃபங்க்சனுக்கு உள்ளே இருந்து அழைக்கலாம்.அவ்வாறு செய்யும் பொழுது அது ரிகர்சிவ் ஃபங்க்சன் எனப்படுகின்றது.
சான்று நிரல்:
<?php    
function display($number) {    
    if($number<=5){    
     echo "$number <br/>";    
     display($number+1);    
    }  
}    
    
display(1);    
?>    
வெளியீடு:
1
2
3
4
5

-முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment