Saturday, August 11, 2018

கோரல் டிராவில் எஃபக்ட்ஸ்.



கோரல் டிராவின் மிக முக்கியமான அதே நேரத்தில் சிறந்த அம்சங்களில் ஒன்று எஃபெக்ட்ஸ்.
டூல்பாக்ஸில் interactive tool flyout என்பதில் இருக்கும் ஒவ்வொரு டூலாக இந்த
கட்டுரையில் காண இருக்கின்றோம். இதே கட்டளைகள் Effects மெனுவிலும் இருக்கின்றது.
Interactive Blend Tool:
வெவ்வேறு வடிவம் மற்றும் நிறத்திலும் இருக்கும் இரண்டு ஆப்ஜெக்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் போல அதன் உருவமும் வண்ணமும் மாறுபடுதலை தான் நாம் இந்த எஃபெக்டை உபயோகப்படுத்தி செய்கின்றோம்.
பொதுவாக இது Morph என அழைக்கப்படுகின்றது.


 Blend2




Blent1
         இங்கு ஒரு ஸ்டார் ஆப்ஜெக்ட் ஒன்றும் வட்டம் ஒன்றும் உள்ளது . BLEND டூலை கிளிக் செய்து பிறகு ஸ்டாரை கிளிக் செய்யவும். மவுசை அப்  படியே டிராக் செய்து வட்டத்தில் விடவும். இப்பொழுது ஒரு பாத் (வட்டம்).
ஒன்றை டிரா செய்யவும்.
பிளென்ட்  விண்டோவில் apply பட்டனுக்கு மேலே உள்ள மூன்று ஐக்கான்களில் மூன்றாவதை கிளிக் செய்யவும்.இப்பொழுது வட்டத்தின் (path) மேல் கிளிக் செய்யவும். இப்பொழுது அப்ளை பட்டனை கிளிக் செய்யவும்.
 இப்பொழுது பின் வருமாறு வெளியீடு இருக்கும்.



 

Interactive contour tool.
இந்த எஃபெக்டை பயன்படுத்தி ஒரு ஆப்ஜெக்டின் உள்பக்கம் அல்லது வெளி பக்கம் சீரான இடைவெளியில் அதே தோற்றத்தினை உடைய பல ஆப்ஜெக்டுகளை உருவாக்கலாம்.





 முதலில் பாலிகான் ஆப்ஜெக்ட் ஒன்றை வரைந்து கொள்ளவும்.பின்னர் CONTOUR டூலை தேர்வு செய்து ஆப்ஜெக்டினை கிளிக் செய்து உட்பக்கமோ அல்லது வெளி பக்கமோ டிராக் செய்யவும்.
பல ஆப்ஜெப்டுகள் சீரான இடைவெளியில் உருவானதைக் காணலாம்.
 பிராப்பர்ட்டி பாரில் ToCenter , Inside, Outside என மூன்று பட்டன்கள் இருப்பதப் பாருங்கள். இவற்றில் நமக்கு தேவையானதை செலெக்ட் செய்து கொள்ளலாம்.
Contour steps என்று இருக்கும் பகுதியில் எத்தனை படிகள் வர வேண்டும் என்பதை குறிப்பிடலாம்.
Interactive Distortion Tool
இந்த டூலை பயன்படுத்தி ஆப்ஜெக்டினை ஆப்ஜெக்டினை சிதைத்து வேறொரு உருவமாக மாற்றுவதற்கு பயன்படுகின்றது..
முதலில் செவ்வகம் ஒன்று வரையவும். பின் இந்த டூலை கிளிக் செய்து பிராப்பர்ட்டி பாரில் முதலில் இருக்கும் push and pull Distortion ஆப்சனை தேர்வு செய்து பிறகு செவ்வகத்தை கிளிக் செய்து டிராக் செய்யவும்.
அப்பொழுது புதிய உருவங்கள் உருவாவதைக் காணலாம்.





 அடுத்த ஆப்சன் Zipper Distortion எனப்படுவது ஆகும். இதை ஆப்ஜெக்டின் மேல் பயன்படுத்தும் பொழுது அவற்றின் ஓரங்கள் சிறுசிறு வரிகளாகப் பிரிந்து அழகழகான தோற்றத்தைப் பெறும்.
மூன்ஃஜ்ராவது இருக்கும் ட்விஸ்டர் டிஸ்டார்சன் எஃபெக்டை பயன்படுத்தி ஆப்ஜெக்டுகளை சூறாவளி காற்றில் சிக்கிய தோற்றத்தனைப் பெறலாம்.


 Interactive Drop Shadow tool
இந்த டூலைப் பயன் படுத்தி ஆப்ஜெக்டுகளுக்கு  நிழல் (Shadow) எஃபெக்டினைக் கொடுக்கலாம்.
இந்த டூலினை தேர்வு செய்து  பிறகு ஆப்ஜெக்டின் மேல் கிளிக் செய்து டிராக் செய்வதன் மூலம் ஷேடோ எஃபெக்டினைப் பெறலாம்.
 




Interactive Envelope Tool:
ஆப்ஜெக்டினை வளைத்து நெளித்து வெவ்வேறு புதிய அழகான தோற்றத்தைப் பெற இந்த டூல் பயன்படுகின்றது.
படத்தில் காட்டியபடி ஏதாவது டெக்ஸ்ட் ஒன்றினை டைப் செய்து கொள்ளவும். பின் ஏன்வெலப் டாக்கர் விண்டோவில் Add Preset எனும் பட்டனை அழுத்தினால் பல உருவங்கள் தெரியும். அவற்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து அப்ளை பட்டனை அழுத்தும் பொழுது நாம் தேர்வு செய்த வடிவத்தில் டெக்ஸ்ட் மாறியிருப்பதைக் காணலாம்.



 

Interactive Extrude Tool:
ஆப்ஜெக்டுகளுக்கு முப்பரிமாண தோற்றத்தினைகொடுப்பதற்கு இந்த டூல் பயன்படுகின்றது. (3d Efects). பொதுவாக ஒரு ஆப்ஜெக்ட் ஆனது நீள , அகலங்களை மட்டும் கொண்டிருக்கும். EXTRUDE டூலை பயன்படுத்தி ஆழமும் கொடுக்கின்றோம்.



Interactive Transparency Tool:
இந்த எஃபெக்டினைப் பயன்படுத்தி ஆப்ஜெக்டுகளுக்குள் இருக்கும் நிறங்களுக்கு டிரான்ஸ்பரண்ட் தன்மையைத் தரலாம்.ஆப்ஜெக்டுகள் டிரான்ஸ்பரண்ட் தன்மையைப் பெறும் பொழுது அதன் அடியில் இருக்கும் ஆப்ஜெக்டின் நிறமும் தெரியும்.





Lens.



இந்த எஃபெக்டைப் பயன்படுத்தி ஆப்ஜெக்டுகளுக்கு பல சிறப்பு தோற்றங்களைக் கொடுக்கலாம்.
முதலில் படம் ஒன்றினை இம்போர்ட் செய்யவும்.
அதன் மேல் வட்டம் ஒன்றினை வரையவும்.இப்பொழுது லென்ஸ் டாக்கர் விண்டோவில் இருக்கும் எஃபடுகளை ஒவ்வொன்றாக வட்ட ஆப்ஜெக்டுகளுக்கு பெறலாம்.
கீழே உள்ள படத்தில் magnify effect பயன்படுத்தப் பட்டுள்ளது.
Add Perspective.
இது ஒரு அருமையான எஃபக்ட் ஆகும்.ஆப்ஜெக்டின் நான்கு முனைகளையும் ஒவ்வொரு திசையில் இழுத்து புதிய டிசைன்களை உருவாக்கலாம்.
Clear effect:
இந்த கட்டளையை பயன்படுத்தி ஆப்ஜெக்டுகளுக்கு நாம் கொடுத்த அனைத்து எஃபெடுகளையும் நாம் எடுத்து விடலாம்.
Copy effect:
ஓரு ஆப்ஜெக்டிற்கு கொடுக்கப்பட்ட எஃபெக்டினை இன்னொரு ஆப்ஜெட்டிற்கு கொடுப்பதற்கு இந்த கட்டளை பயன்படுகின்றது.
Clone Effect:
இதுவும் copy effect போலவே ஒரு ஆப்ஜெக்டிற்கு கொடுக்கப் பட்ட எஃபெக்டினை மற்றொரு ஆப்ஜெக்டிற்கு கொடுக்க பயன்படுகின்றது.
ஒரே ஒரு வித்தயாசம் என்னவெனில் சோர்ஸில்எஃபெக்ட் மாறுதல் செய்தால் டெஸ்டினசனிலும் மாறுதல் அடையும்.
Power Clip
:இந்த எஃபெக்டினைப் பயன்படுத்தி ஒரு ஆப்ஜெக்டினை மற்றொரு ஆப்ஜெக்டின் உள் புகுத்தி வைக்க முடியும்.
சான்றிற்கு முதலில் ஒரு வட்டம் வரைந்து கொள்ளவும். பிறகு இமேஜ் ஒன்றினை அதன் மேல் இம்போர்ட் செய்து கொள்ளவும். இப்பொழுது இமேஜை வலது கிளிக் செய்து order என்பதைக் கிளிக் செய்து பிற்கு to back of page என்பதக் கிளிக் செய்யவும்.
பிறகு Effects-> Powerclip-> place inside container என்பதை தேர்வு செய்து வட்டத்தின் உள்ளே கிளிக் செய்யவும்.
இப்பொழுது இமேஜ் ஆனது வட்டத்தின் வடிவத்திற்கு மாறியிருக்கும்.




Rollover.
இணையத்தில் ஆப்ஜெட்டின் மவுஸ் மூவ் செய்யும் பொழுது அதன் நிறம் மாறுவதக் காணலாம். அதற்கு Rollover கட்டளை பயன்படுகின்றது.
முதலில் வட்டம் ஒன்றினை வரைந்து கொள்ளவும். இப்பொழுது இந்த ஆப்ஜெக்டினை செலெக்ட் செய்து கொள்ளவும்.
Effects-> Rollover-> create roll over செலெக்ட் செய்யவும்.
பின்பு:
Effects->Rollover->Edit roll over செலெக்ட் தேர்வு செய்யவும்.
இப்பொழுது internet என்னும் ஒரு டூல்பார் திரையில் தோன்றும்.
அதில் Active Rollover State என்னும் காம்போ பாக்சை தேர்வு செய்து over என்பதை தேர்வு செய்து ஏதாவது ஒரு புதிய நிறத்தினை வட்டத்தை நிரப்பிக் கொள்ளவும்.
பிறகு Down என்ற ஆப்சனை தேர்வு செய்து வேறு ஏதாவது ஒரு நிறத்தினால் வட்டத்தினை நிரப்பிக் கொள்ளவும்.
இப்பொழுது Rollover->Finish Editing Rollover கிளிக் செய்யவும்.
view->Enable Roll over என்பதை தேர்வு செய்யவும்..இப்பொழுது இன்டெர்நெட் டூல் பாரில் இருக்கும் LIVE PREVIEW OF ROLLOVERS என்பதை அழுத்தவும்.
இப்பொழுது வட்டத்தின் மவசை நகர்த்தினால் ஒரு நிற்மும் கிளிக் செய்தால் மற்றொரு நிறமும் தோன்றுவதைக் காணலாம்.
முத்து கார்த்திகேயன், மதுரை.




ads Udanz

No comments:

Post a Comment