Tuesday, July 30, 2019

ஜாவா மெஸ்ஸேஜ் சர்வீஸ்(JMS) என்பது என்ன?



JMS எதற்கு தேவைப் படுகின்றது?


எண்டர்பிரைஸ் அப்ளிகேசன்கள் டிஸ்ரட்ரிபியூட்டட் அப்ளிகேசன்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.
அதன் விளைவாக நாம் டிஸ்ட்ரிபியூட்டட் அப்ளிகேசன்களுக்கு இடையே தகவல் தொடர்பு நிகழ வேண்டியிருக்கின்றது. ஏற்கனவே உள்ள பயன்பாட்டின் தகவல் தொடர்பை ஒன்று சேர்ப்பது கடினமாக உள்ளது. அதனால் JMS அறிமுகப் படுத்தப்பட்டிருக்கின்றது.JMS ஆனது வெப் காம்பனண்ட்,  கிளையண்ட் அப்ளிகேசன், JMS அப்ளிகேசன் ஆகியவற்றிற்கிடையே தகவல் தொடர்பு ஏற்பட வழிவகுக்கின்றது.அதே நேரத்தில் இரண்டு அப்ளிகேசன்களுக்கிடையே அசிங்க்ரனஸ் கம்யூனிகேசன் ஆனது ஒன்றுக்கொன்று கனக்ட் செய்திடாமலே நிகழ அனுமதிக்கின்றது.
அதனால் JMS ஆனது அசிங்கிரனஸ் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
JMS ஏன் அசிங்கிரனஸ் ஆக இருக்கின்றது?
முதலில் அசிங்கிரனஸ் மற்றும் சிங்க்ரனஸ் மெத்தட் இன்வோகேசன்களுக்கு இடையே வித்தியாசத்தை தெரிந்து கொள்வோம்.
அசிங்க்ரணஸ் மெத்தடில் இன்வோகேசனில் அந்த மெத்தடின் இயக்கம் முடிவதற்கு முன்னே ரெஸ்பான்ஸ் பயனருக்கு அனுப்பப்படுகின்றது. இது வெகு நேரம் நடக்கும் மெத்தட் இயக்கம் மற்றும் பின்னனி செயல்பாடுகளுக்கு பயன்படுகின்றது.
ரெஸ்பான்ஸ் அனுப்பப்பட்டு விட்டதால் பயனர் வேறு செயல் பாட்டில் கவனல் செலுத்தலாம் அதே நேரத்தில் மெத்தட் இயக்கத்தை முடிக்கும்.அசிங்கிரனஸ் மெத்தடை பிரிண்டர் மெக்கானிசத்துடன் கம்பேர் செய்யலாம்.ப்ரிண்டிங்க் நடக்கும் போதே பயனர் வேறு செயல்பாடுகள் செய்யலாம்.
சிங்கிரனஸ் மெத்தடில் மெத்தட் இயக்கம் முடிந்த பின்னே ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அனுப்புனர் அந்த மெத்தட் முடியும் முன்னே பதில் அனுப்ப விரும்ப மாட்டார். அனுப்புனர் அசிங்க்ரனஸ் மெஸ்ஸேஜ் அனுப்பி விட்டு அவர் வேலையைத் தொடரலாம்.
          JMS செயற்பாடுகள்.
1.     மெஸ்ஸேஜ் உருவாக்குதல்.
2.     மெஸ்ஸேஜ் அனுப்புதல்
3.     மெஸ்ஸேஜ் பெறுதல்.
4.     மெஸ்ஸேஜை படித்தல்.
JMS வகைகள்.
1.     பாயிண்ட் டு பாயிண்ட்
2.     பப்ளிஸ்/சப்ஸ்கிரைப்
பாயிண்ட் டு பாயிண்ட்.(ஒன் டு ஒன்)
பாயிண்ட் டு பாயிண்ட் மெத்தடில் ஒரு அனுப்புனர் மற்றும் ஒரு பெறுனர் உள்ளனர். இது மொபைல் சாட்டின்ங்கு ஒப்பானது.
ஒன்றுக்கு மேற்பட்ட மெஸ்ஸேஜ் என்றால் க்யூவில் காத்திருக்க செய்ய வேண்டும். பெறுனர் தகவலை பெற்றுக் கொண்டு பெற்றுக் கொண்டதாக ஒப்புதல் அனுப்பலாம்.
பப்ளிஸ்/சப்ஸ்கிரைப்(ஒன் டு மெனி)
இந்த மெத்தடை நெட்ஃப்ளிக்ஸ் உடன் ஒப்பிடலாம்.ஒரு அனுப்புனர் , ஒன்றுக்கும் மேற்பட்ட பெறுனர்கள். நிறைய பேர் நெட்ஃபிளிக்ஸ்க்கு சப்ஸ்கிரைப் செய்து விட்டு நெட்ஃபிளிக்ஸால் அனுப்படும் டிவி நிகழ்ச்சியைக் காணலாம்.
முதலில் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். அதற்கு பிறகு காம்பனனட் ஆனது தகவல்களை தொடர்ச்சியாக பெறலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட மெஸ்ஸேஜ் என்றால் டாபிக்கில் காத்திருக்க வேண்டும்.
JMS –ல் முதலில் கனக்சன் ஃபேக்டரிக்கு ஆப்ஜெக்ட் உருவாக்க வேண்டும். பிறகு கனக்சனுக்கு ஆபஜெக்ட் உருவாக்க வேண்டும். பிறகு செஸ்ஸன் ஆப்ஜெக்ட் உருவாக்க வேண்டும்.
இந்த மூன்றுக்கும் ஆப்ஜெக்ட் உருவாக்கிய பிறகு மெஸ்ஸேஜ் அனுப்பனரையும் மெஸ்ஸேஜ் பிரவைடரையும் உருவாக்கலாம்.

நன்றி.
முத்து கார்த்திகேயன் ,மதுரை.



ads Udanz

C++ பகுதி-2



கீழே உள்ள வீடியோவில் இன்புட், மற்றும் அவுட்புட் எவ்வாறு பெறுவது என விளக்கப்பட்டுள்ளது.

மறக்காமல் எனது யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்.

Program source code.

#include <iostream>

using namespace std;

int main()
{
    int num1,num2,avg;
    cout<<"Enter num1";                     
    cin>>num1;
    cout<<"Enter num2";
    cin >>num2;
    avg=(num1+num2)/2;
    cout<<"average of two numbers is "<<avg<<endl;
    return 0;
}
மறக்காமல் எனது யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்.
நன்றி 
முத்து கார்த்திகேயன்,மதுரை 
ads Udanz

Sunday, July 21, 2019

RDBMS –என்பது என்ன? பகுதி-2


SQL மற்றும் ரிலேசனல் டேட்டாபேஸஸ்.
SQL என்பது Structured query language ஆகும். இது டேட்டாவை பெற, அப்டேட் செய்ய, டெலீட் செய்ய பயன்படுகின்றது.sql query ஆனது sql ஸ்டேட்மென்ட்ஸ் எனவும் sql கமாண்ட்ஸ் எனவும் அறியப்படுகின்றது.
Sqlஆனது DML கமாண்ட்ஸ் அதாவது Data manipulation commands என்பத தருகின்றது. அதாவது இன்செர்ட், அப்டேட், டெலீட் ஆகியவையாகும்.
DDL COMMANDS(Data definition language) அதாவது ஒரு டேபிள் அல்லது டேட்டா பேஸை உருவாக்க, அதில் மாற்றம் செய்ய பயன் படுகின்றது.
DCL COMMANDS(Data control language) என்பது டேடாவின் மீது பயனருக்கு என்னென்ன அனுமதி தரலாம் என்பதற்கு பயன்படுகின்றது. உதாரணம் grand, revoke ஆகியவை.
DQL(Data query language) என்பது நாம் டேட்டாவை நாம் விரும்பிய வண்ணம் ரிட்ரிவை செய்ய பயன்படுகின்றது. உதாரணம் select கமாண்ட்.
நூற்றுக்கும் மேற்பட்ட RDBMS இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 10 டேட்டா பேஸஸ் லிஸ்ட்.
  1. Oracle
  2. MySQL
  3. SQL Server
  4. PostgreSQL
  5. IBM DB2
  6. Microsoft Access
  7. SQLite
  8. MariaDB
  9. Informix
  10. Azure SQL
Oracle:
இது ஆரக்கிள் கார்ப்பரசனால் உருவாக்கப்பட்ட்து. இது மிகவும் பிரபலமான டேட்டா பேஸ் ஆகும்.இது RDBMS ஆக மட்டுமல்லாமல் Cloud, document storage, graphDBMS போன்றவையாகவும் பயன்படுகின்றது.ஆரக்கிள் தற்பொழுது டேட்டா ஆனது intelligent, self managed ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
ஒரு RDBMS ஆனது user defined types, inheritance, polymorphism போன்ற oops கருத்துக்களை நடைமுறைப் படுத்தினால் அது object oriented RDBMS என அறியப்படும். ஆரக்கிள் ஒரு object oriented RDBMS ஆகும்.
இதன் லேட்டஸ்ட் வெர்சன் 18C ஆகும்.
MYSQL
இது மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் டேட்டாபேஸ் ஆகும்.
இது ஒரு டேட்டாபேஸ் ஆகும்.
இது ரிலேசனல் டேட்டா பேஸ் ஆகும்.
இது ஓபன் சோர்ஸ் ஆகும்.
இது விரைவானது மற்றும் நம்பகத் தன்மையுடையது ஆகும்.
இது கிளையண்ட்-சர்வர் அல்லது எம்பட்டட் சிஸ்டம் போன்றவற்றில் பயன்படுகின்றது.
SQLSERVER,
இது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை சேர்ந்ததாகும். முதலில் 1989-ல் உருவாக்கப் பட்டது. இது C,C++ மொழிகளால் எழுதப்பட்டது.
இதம் தற்போதைய வெர்சன் SQLSERVER 2019 ஆகும்.
இதுவும் ரிலேசனல் டேட்டாபேஸ் ஆகும்.
AZURE SQL DATABASE என்பது கிளவுட் அடிப்ப்டையிலான SQLSERVER நடைமுறைப்படுத்தல் ஆகும்.
SQL DEVELOPER EDITION மற்றும் SQL ENTERPRISE EDITION இரண்டும் ஒரே மாதிரி தான் எனினும் SQL DEVELOPER EDITION ஆனது ஒரே ஒரு Lisence கொண்டதாகும்.
PostgreSQL:
இது மிகவும் திறன் வாய்ந்த்தாகும்.
இது ஓபன் சோர்ஸ் ஆகும்.
இது ரிலேசனல் டேட்டா பேஸ் ஆகும்.
PostgreSQL ஆனது அதன் ஆர்க்கி டெக்சர், ரிலையபிளிட்டி, ரோபஸ்ட் ஆகியவற்றிற்க்கு பேர் வாய்ந்ததாகும்.
IBMDB2.
இது linux, unix, windows முதலிய பிளாட்ஃபார்மில் இயங்குகின்றது.
இதன் முக்கிய அம்சங்கள்.
Ø இன் மெமரி டெக்னாலஜி.
Ø அட்வான்ஸ்டு மேனேஜ்மெண்ட்.
Ø டெவெலப்மெண்ட் டூல்ஸ்
Ø ஸ்டோரேஜ் ஆப்டிமைசேசன்.
Ø வொர்க் லோட் மேனேஜ்மெண்ட்
ஆகியவையாகும்.
SQLite.
இது c language லைப்ரரி ஆகும்.
இது நிலையானது.
வெவ்வேறு பிளாட்ஃபார்ம்களுக்கு இடையே செயல் படக் கூடியது.பேக்வர்ட் கம்பேசபிலிடி உடையது.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை



ads Udanz