RDBMS
என்பது ரிலேசனல் டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகும். இது டேட்டாவை ரோக்கள்,காலம்
ஆக அட்டவனை வடிவில் தருகின்றது.
ஒரு டேபிள்
என்பது ஒரு என்டைட்டியை ரெப்ரசெண்ட் செய்கின்றது.டேபிள் என்பது ரோஸ் மற்றும் காலம்
ஆகியவற்றின் காம்பினேசன் ஆகும்.ஒவ்வொரு காலமும் ஒரு என்டைட்டியின் பண்பைக் குறிக்கின்றது.
இது ஃபீல்ட் எனவும் அறியப்படுகின்றது.ஒவ்வொரு ரோவும் ஒரு ரிகார்ட் எனப்படுகின்றது.
உதாரணமாக
ஒரு Student எண்டைட்டியில் id, name, age,mark என ஃபீல்டுகள் இருக்கலாம். இந்த ஒவ்வொரு
காலமும் ஸ்டூடண்ட் குறித்த பிராப்பர்ட்டியை தருகின்றது.ஒவ்வொரு ரோவும் ஒரு குறிப்பிட்ட
ஸ்டூடண்ட் பற்றிய தகவல்களைத் தருகின்றது.
ஒவ்வொரு
காலமும் ஒவ்வொரு டேட்டா டைப்பாக இருக்கும்.உதாரணத்திற்க்கு id ,age, mark ஆகியவை இன்டிஜெர்
ஆக இருக்கும். அதே நேரத்தில் name என்பது varchar ஆக இருக்கும்.
RDBMS
பற்றிய கருத்து 1970-ல் EF CODD என்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது.1974-ல் IBM நிறுவனம்
ஆனது RDBMS-ன் புரோட்டா டைப் ஆன R என்பதை அறிமுகப்படுத்தியது.
ஆரக்கிள்
டேட்டாபேஸ் முதல் கமர்சியல் டேட்டா பேஸ் ஆகும், இது 1974-ல் வெளியிடப்பட்டது.
ஒரு டேபிளின்
காலத்தில் உள்ள டேட்டா ஆனது அதே டேட்டா பேஸில் உள்ள மற்றொரு டேபிளில் உள்ள காலத்தை
சார்ந்து இருக்கலாம் அதாவது ரிலேசன் இருக்கலாம் . அதனால் தான் இது ரிலேசனல் டேட்டா
பேஸ் எனப்படுகின்றது.
பிரைமரி
கீ மற்றும் ஃபாரின் கீ
பிரைமரி
கீ ஆனது ஒவ்வொரு ரோவையும் யுனிக் ஆக இருக்க அனுமதிக்கின்றது. அதாவது ஒரு குறிப்பிட்ட
ஃபீல்டோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபீல்டுகளின் காம்பினேசனோ யுனிக் ஆக இருக்க வேண்டும்.
அந்த காலம் பிரைமரி கீ எனப்படுகின்றது.
ஒரு குறிப்பட்ட
கீ ஆனது மற்றொரு டேபிளில் உள்ள ப்ரைமரி கீயை சார்ந்திருக்கலாம். உதாரணத்திற்கு
tblPerson என்ற டேபிளின் gender id ஆனது tblgender என்ற டேபிளின் id யை சார்ந்திருக்கலாம்.
இந்த ஃபீல்ட் ஆனது ஃபாரின் கீ எனப்படுகின்றது.
RDBMS
நடவடிக்கைகள்
RDBMS
ஆனது கிரியேட், ரிட்ரைவ்,அப்டேட், டெலீட் போன்ற ஆபரேசன்களை அனுமதிக்கின்றது.
கிரியேட்
என்பது டேட்டாவை இன்செர்ட் செய்ய அனுமதிக்கின்றது.
ரிட்ரைவ்
ஆனது கொரி மூலம் டேபிளில் இருந்து நமக்கு வேண்டிய தகவல்களைத் தருகின்றது.
ஒரு குறிப்பிட்ட
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ரோக்களில் உள்ள டேட்டாவை மாற்றி அமைக்க அப்டேட் பயன்படுகின்றது.
ஒன்று
அல்லது அதற்கு மேற்பட்ட ரோக்களை அகற்ற டெலீட் பயன்படுகின்றது.
தொடரும்.
நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.
No comments:
Post a Comment