Tuesday, July 16, 2019

சி மொழியில் ஸ்டிரிங்க்குகள்-பகுதி 2.





சி மொழியில் ஸ்டிரிங்குகளை கையாள நிறைய ஃபங்க்சன்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு ஃபங்க்சன்கள் குறித்து பார்ப்போம். அவையாவன:
1.      Strlen()
2.      Strcpy()
3.      Strcat()
4.      Strcmp().

Strlen()
இந்த ஃபங்க்சன் ஒரு ஸ்டிரிங்கின் கேரக்டர்களின் எண்ணிக்கையை கணக்கிட பயன்படுகின்றது.
சான்று நிரல்-1
#include <stdio.h>
#include <string.h>

int main()
{
    char name[]="karthikeyan";
    int l1, l2;
    l1=strlen(name);
    l2=strlen("muthu");
    printf("the length of variable name is %d\n",l1);
    printf("the length of muthu is %d",l2);

    return 0;
}
வெளியீடு:

மேலே உள்ள நிரலில் strlen() ஃபங்க்சன் ஆனது ஒரு கேரக்டர் வேரியபிளின் லெங்க்தை கணக்கிட்டு அதை வெளியீடு செய்கின்றது
    Strcpy()
இந்த ஃபங்க்சன் ஆனது ஒரு வேரியபிள் உள்ள ஸ்டிரிங்கை மற்றொரு வேரியபிளில் நகல் எடுக்கின்றது.
சான்று நிரல்-2
#include <stdio.h>
#include <string.h>

int main()
{
    char source[]="karthi";
    char target[10];
    strcpy(target,source);
    printf("source is %s\n",source);
    printf("target is %s",target);

    return 0;
}
வெளியீடு:
மேலே உள்ள நிரலில் source என்ற வேரியபிளில் உள்ள மதிப்பானது target என்ற வேரியபிளுக்கு காப்பி செய்யப் படுகின்றது. பின்னர் வெளியீடு செய்யப்படுகின்றது.
Strcat()
இந்த ஃபங்க்சன் ஆனது ஒரு ஒரு ஸ்டிரிங்க் வேரியபிளின் இறுதியில் மற்றொரு வேரியபிளை சேர்த்துக் கொள்கின்றது.
சான்று நிரல்-3.
#include <stdio.h>
#include <string.h>

int main()
{
    char target[25]="Muthu";
    char source[]=" karthikeyan";
    strcat(target,source);
    printf("target is %s",target);
    return 0;
}
வெளியீடு:
மேலே உள்ள நிரலில் source என்ற வேரியபிளின் மதிப்பானது target என்ற வேரியபிளின் இறுதியில் சேர்த்துக் கொள்கின்றது. பின்னர் target வேரியபிளின் மதிப்பு வெளியீடு செய்யப்பட்டுகின்றது.
Strcmp()
இந்த ஃபங்க்சன் ஆனது இரண்டு வேரியபிளின் மதிப்பு சமமா என பரிசோதிக்கின்றது. இரண்டும் ஒன்று என்றால் 0 வை ரிடர்ன் செய்கின்றது.
இல்லையெனில் இரண்டுக்கும் உள்ள ascii மதிப்பை அடிப்ப்டையாக கொண்டு அதன் வித்தியாசத்தை ரிடர்ன் செய்கின்றது.
சான்று நிரல்-4.
#include <stdio.h>
#include <string.h>

int main()
{
    char str1[]="muthu";
    char str2[]="muthu";
    int l;
    l=strcmp(str1,str2);
    if(l==0)
    {

        printf("both are equal");
    }
    else
    {
        printf("both are different");

    }
    return 0;
}
வெளியீடு:
இந்த நிரலில் இரண்டு ஸ்டிரிங்குகளும் சமம் எனவே 0வை ரிடர்ன் செய்கின்றது.
-நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment