JMS எதற்கு
தேவைப் படுகின்றது?
எண்டர்பிரைஸ்
அப்ளிகேசன்கள் டிஸ்ரட்ரிபியூட்டட் அப்ளிகேசன்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.
அதன் விளைவாக
நாம் டிஸ்ட்ரிபியூட்டட் அப்ளிகேசன்களுக்கு இடையே தகவல் தொடர்பு நிகழ வேண்டியிருக்கின்றது.
ஏற்கனவே உள்ள பயன்பாட்டின் தகவல் தொடர்பை ஒன்று சேர்ப்பது கடினமாக உள்ளது. அதனால்
JMS அறிமுகப் படுத்தப்பட்டிருக்கின்றது.JMS ஆனது வெப் காம்பனண்ட், கிளையண்ட் அப்ளிகேசன், JMS அப்ளிகேசன் ஆகியவற்றிற்கிடையே
தகவல் தொடர்பு ஏற்பட வழிவகுக்கின்றது.அதே நேரத்தில் இரண்டு அப்ளிகேசன்களுக்கிடையே அசிங்க்ரனஸ்
கம்யூனிகேசன் ஆனது ஒன்றுக்கொன்று கனக்ட் செய்திடாமலே நிகழ அனுமதிக்கின்றது.
அதனால்
JMS ஆனது அசிங்கிரனஸ் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
JMS ஏன்
அசிங்கிரனஸ் ஆக இருக்கின்றது?
முதலில்
அசிங்கிரனஸ் மற்றும் சிங்க்ரனஸ் மெத்தட் இன்வோகேசன்களுக்கு இடையே வித்தியாசத்தை தெரிந்து
கொள்வோம்.
அசிங்க்ரணஸ்
மெத்தடில் இன்வோகேசனில் அந்த மெத்தடின் இயக்கம் முடிவதற்கு முன்னே ரெஸ்பான்ஸ் பயனருக்கு
அனுப்பப்படுகின்றது. இது வெகு நேரம் நடக்கும் மெத்தட் இயக்கம் மற்றும் பின்னனி செயல்பாடுகளுக்கு
பயன்படுகின்றது.
ரெஸ்பான்ஸ்
அனுப்பப்பட்டு விட்டதால் பயனர் வேறு செயல் பாட்டில் கவனல் செலுத்தலாம் அதே நேரத்தில்
மெத்தட் இயக்கத்தை முடிக்கும்.அசிங்கிரனஸ் மெத்தடை பிரிண்டர் மெக்கானிசத்துடன் கம்பேர்
செய்யலாம்.ப்ரிண்டிங்க் நடக்கும் போதே பயனர் வேறு செயல்பாடுகள் செய்யலாம்.
சிங்கிரனஸ்
மெத்தடில் மெத்தட் இயக்கம் முடிந்த பின்னே ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அனுப்புனர் அந்த
மெத்தட் முடியும் முன்னே பதில் அனுப்ப விரும்ப மாட்டார். அனுப்புனர் அசிங்க்ரனஸ் மெஸ்ஸேஜ்
அனுப்பி விட்டு அவர் வேலையைத் தொடரலாம்.
JMS செயற்பாடுகள்.
1.
மெஸ்ஸேஜ்
உருவாக்குதல்.
2.
மெஸ்ஸேஜ்
அனுப்புதல்
3.
மெஸ்ஸேஜ்
பெறுதல்.
4.
மெஸ்ஸேஜை
படித்தல்.
JMS
வகைகள்.
1.
பாயிண்ட்
டு பாயிண்ட்
2.
பப்ளிஸ்/சப்ஸ்கிரைப்
பாயிண்ட்
டு பாயிண்ட்.(ஒன் டு ஒன்)
பாயிண்ட்
டு பாயிண்ட் மெத்தடில் ஒரு அனுப்புனர் மற்றும் ஒரு பெறுனர் உள்ளனர். இது மொபைல் சாட்டின்ங்கு
ஒப்பானது.
ஒன்றுக்கு
மேற்பட்ட மெஸ்ஸேஜ் என்றால் க்யூவில் காத்திருக்க செய்ய வேண்டும். பெறுனர் தகவலை பெற்றுக்
கொண்டு பெற்றுக் கொண்டதாக ஒப்புதல் அனுப்பலாம்.
பப்ளிஸ்/சப்ஸ்கிரைப்(ஒன்
டு மெனி)
இந்த
மெத்தடை நெட்ஃப்ளிக்ஸ் உடன் ஒப்பிடலாம்.ஒரு அனுப்புனர் , ஒன்றுக்கும் மேற்பட்ட பெறுனர்கள்.
நிறைய பேர் நெட்ஃபிளிக்ஸ்க்கு சப்ஸ்கிரைப் செய்து விட்டு நெட்ஃபிளிக்ஸால் அனுப்படும்
டிவி நிகழ்ச்சியைக் காணலாம்.
முதலில்
சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். அதற்கு பிறகு காம்பனனட் ஆனது தகவல்களை தொடர்ச்சியாக பெறலாம்.
ஒன்றுக்கு
மேற்பட்ட மெஸ்ஸேஜ் என்றால் டாபிக்கில் காத்திருக்க வேண்டும்.
JMS
–ல் முதலில் கனக்சன் ஃபேக்டரிக்கு ஆப்ஜெக்ட் உருவாக்க வேண்டும். பிறகு கனக்சனுக்கு
ஆபஜெக்ட் உருவாக்க வேண்டும். பிறகு செஸ்ஸன் ஆப்ஜெக்ட் உருவாக்க வேண்டும்.
இந்த
மூன்றுக்கும் ஆப்ஜெக்ட் உருவாக்கிய பிறகு மெஸ்ஸேஜ் அனுப்பனரையும் மெஸ்ஸேஜ் பிரவைடரையும்
உருவாக்கலாம்.
நன்றி.
முத்து
கார்த்திகேயன் ,மதுரை.
No comments:
Post a Comment